முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

போயாக் சிறுகதைத் தொகுப்பு கதைகளின் வாசிப்பனுபவங்கள்

  போயாக் சிறுகதைத் தொகுப்பு கதைகளின் வாசிப்பனுபவங்கள் பழங்குடிச் சமூகத்தின் ஒழுங்குகளைப் பேணும் ஈபான் சமூகத்தில் நாகரீக அடையாளத்துடன் வரும் ஆசிரியரின் பாலியல் தடுமாற்றத்தையும் பழங்குடி அறத்தையுமே போயாக் சிறுகதையில் காண முடிகிறது. விநோதமான மாந்தீரிகச் சடங்குகள், தாய்வழிச் சமூகம் என்பதால் பெண்களைப் பிற இனத்தவர்களுக்குத் திருமணம் புரிந்து வைப்பதைத் தடுக்கின்றனர். இதைப் போன்ற தகவல்களைத் தாண்டி சிறுகதையில் மிகவும் கவர்ந்தவை முதலைக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் ஒப்பந்தம். ஒருவகையில் மனிதன் முதலையைத் தின்றும் மீண்டும் முதலை மனிதனையும் தின்றும் இயற்கையான அறமொன்றை நிலைநாட்டிக் கொள்கின்றனர். ஒருவேளை இவற்றை மதம் தீண்டுகிற போது அவை சடங்குகளாக, புனிதமாகக் கட்டமைக்கப்படும். புனிதமாகக் கட்டமைக்கப்படுபவற்றை மீறும் சுதந்திரத்தைக் குற்றவுணர்ச்சி மூலம் மனிதன் பெற்றுக் கொள்ளலாம். கதைசொல்லியும் பாலியல் மீறல் செய்து வெளியேற பார்க்கிறான். அவனே முதலையாக மாறி ஒப்பந்தத்தை மீறுகிறான். படகில் செல்லும் போது பிரதி மாற்றம் செய்யப்பட்டவனாய், அறமொன்றின் முன்னாலான தவிப்புடன் நிற்கிறான். மூன்று தலைமுறை ஆண்களின் ம