முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கெல்லிஸ் ஸ்மித்தின் சுரங்கப்பாதை

  மலேசியா பிரிட்டன் காலனி நாடாக இருந்த சமயத்தில் உலகளவில் மிக முக்கியமான ஈயம், ரப்பர் உற்பத்தி நாடாக இருந்தது. மலேசியாவின் தொழிற்வளர்ச்சி மிகுந்த, ரயில் தடம் கொண்ட நகரங்கள் யாவும் ஈயம், ரப்பர் உற்பத்தி, ஏற்றுமதி தொழிலில் மிக முக்கியமான நகரங்களாக அமைந்தவையே. ரயில் தடத்தின் முக்கியமான நிலையங்களைக் கொண்டே அதைக் கவனிக்கலாம். அன்றைய காலனிய அதிகாரிகளும் தோட்ட முதலாளிகளும் தங்குவதற்காக அமைக்கப்பட்ட வீடுகள், விடுதிகள் இன்றைக்குப் பெரும்பாலும் சுற்றுலாதளங்களாகவும் சில கைவிடப்பட்டும் கிடக்கின்றன. உலகின் ஆழமான ஈயச்சுரங்கமான பகாங் மாநிலத்தில் அமைந்திருக்கும் சுங்கை லெம்பிங்கில் இருக்கும் சுரங்க நிர்வாகியின் இல்லம் அரும்பொருள்காட்சியகமாக மாற்றப்பட்டுப் பரமாரிக்கப்படுகின்றது. ஈயத்தொழிலில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், இயந்திரங்கள், வெள்ளையர்கள் பயன்படுத்திய தளவாடங்கள் ஆகியவைக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இல்லத்தின் முக்கிய ஈர்ப்பாக அமைவது அங்கு இன்னுமிருப்பதாகச் சொல்லப்படும் வெள்ளைக்காரர்களின் ஆவி நடமாட்டம். அங்கு வசிக்கும் மக்களும் சுற்றுலாப்பயணிகளும் கண்டதாகச் சொல்லப்படும் ஆவி நடமாட்டம் பலரை ஈர்

காதுகள் நாவல் வாசிப்பனுபவம்

  தனக்குத்தானே பேசிக்கொள்ளும் பழக்கம் இளவயதில் பள்ளி முடிந்து தனித்திருக்கும் மாலைப் பொழுதுகளில் உருவானது என எண்ணுகிறேன். காண்கின்ற படம், நாள்தோறும் வாசிக்கின்ற நாளிதழ் செய்திகள், பள்ளியில் நடந்த சம்பவங்கள் இப்படியாகப் பலராகவும் உருமாறிப் பேசி, வாதிட்டுக் கொள்வேன். இதைத் தவிர, எதைச் செய்தாலும் உள்ளிருந்து உற்றுநோக்கிக் குரல் எழுப்பும் உள்ளுணர்வின் குரலும் அங்கிருந்தே உருவானது. பொதுவாகவே, மற்றவர்களிடம் அதிகமும் பேசாத இயல்பினாலும் வெளியுலக வாசம் குறைவாக இருந்ததாலும் இவை உருவாகியிருந்தது. சமயங்களில் பேச வேண்டிய அல்லது எதிர்வினையாற்ற தவறுகின்ற பொழுதுகளில் நேரும் குற்றவுணர்ச்சியை நேர் செய்யும் தப்பித்தல் வழிமுறையாகவும் இதை உணர்ந்து குறுகிப் போயிருக்கிறேன். ஆனால், எதோ ஒரு பொழுதில் உள்ளிருந்து ஒலிக்கும் குரலை இயல்பானதாக அனுமதிக்கவே செய்திருக்கிறேன். காதுகள் நாவலின் மையப்பாத்திரமான மகாலிங்கத்தின் காதுகளில் ஒலிக்கும் அந்நியர்களின் குரல்களை என்னுடைய உள்ளுணர்வு குரலுடன் தான் தொடர்புறுத்தி வாசித்தேன். அந்த அனுபவத்தை வாசிக்கும் போதே உள்ளூர நடுக்கமெழுந்தது. வணிகக்குடும்பத்தில் பிறந்த மகாலிங்கம் தன