முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பலவீனமான லட்சிய உருவகம்

எழுத்தாளர் கோ.முனியாண்டியின் ராமனின் நிறங்கள் (2010) நாவலை வாசித்தேன். எழுத்தாளர் கோ.முனியாண்டி மலேசியாவில் புதுக்கவிதை வளர்ச்சிக்கு வித்திடுகின்ற வகையில் புதுக்கவிதை மாநாடுகள் நடத்திய முன்னோடிகளில் ஒருவர். மேலும் செய்தியாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.  மலேசியாவில் 1950களிலே ரப்பருக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட செம்பனைப்பயிர் 1980களில் தான் ரப்பருக்கு மாற்றாக அதிகளவில் பயிர் செய்யப்பட்டது. இதற்கிடையிலான காலக்கட்டத்தில், செம்பனைப்பயிர்கள் நல்ல விளைச்சலைத் தராததால் தோட்ட முதலாளிகள் செம்பனைப்பயிரை நடுவதில் தயக்கம் காட்டினர். இந்தக் காலக்கட்டத்தில், மலேசியாவில் தோட்ட நிர்வாகியாகப் பணியாற்றிய ஸ்காட்லாந்தைச் சேர்ந்த Leslie Davidson என்பவர், மலேசியாவை ஒத்த தட்பவெப்ப நிலை கொண்ட கெமரூன் நாட்டில் செம்பனைப்பயிர் ஊட்டத்துடன் வளர்வதற்கான காரணத்தைக் கண்டறிய அந்நாட்டுக்குப் பயணப்பட்டு ஆய்வுகளை மேற்கொள்கிறார். இறுதியில், செம்பனைப்பயிரின் பூக்களில் கேமரூண் வீவல்ஸ் ( Elaeidobius kamerunicus weevils ) எனும் பூச்சியினம் நடத்தும் மகரந்தச்சேர்கையினாலே அதிக மகசூல் சாத்தியமாகிறதென்பதை அறிந்து அதனை மலேசியாவ