முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
 நேபாளப்பயணம் 15 இணைய வசதி இல்லாமல் தெரியாத இடத்தில் சென்று வர தனித்துணிச்சல் வேண்டும். எப்படி யோசித்தாலும் விடுதியின் பெயரைக் கொண்டு திரும்பி வந்துவிடுவார்களென நினைத்துக் கொண்டேன். எங்களின் விமானம் இரவு மணி 8.40 என்பதால் 4.30 க்கெல்லாம் விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. கணேஷ் அவர்களைக் கொண்டு வரும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் எல்லாம் முதலில் தங்கும் விடுதிக்குச் செல்லுங்கள். நான் ஆனந்தியுடன் அவர்கள் மூவரையும் அழைத்து வருகிறேன் என்றார் என மிக நிதானமாகச் சொன்னார். அவருடன் கந்தா எனப்படும் கந்தசாமியும் களத்தில் இறங்கி தேடத்தொடங்கினார். நாங்கள் பேருந்திலேறி உட்கார்ந்து சில நிமிடங்களிலே கந்தசாமி மூவரையும் பேருந்துக்கு அழைத்து வந்தார். அந்தப் பதற்றமான சூழலில் மிக வேடிக்கையாகப் பேசி கொஞ்ச நேரத்தில் சூழலை இலகுவாக்கிவிட்டார். அங்கிருந்து செல்வதற்கு முன்னர் விடுதிக்குச் சென்று சாப்பிடவேண்டிய மதிய உணவுக்கான ஆர்டரைக் கொடுத்தோம். மறுநாள் வேலைக்குச் சென்றுவிட வேண்டுமென நினைத்திருந்ததால் பயன நேரம், தயார் செய்யும் நேரம் என என நேரக்கணக்கில் மூழ்கியிருந்தேன். பட்டென்று மயூரி ஒரு
 நேபாளப்பயணம் 14 குமாரி கோவிலில் இருந்து வெளியேறி நடந்து செல்லும் போதே அடுத்தப் பயணத்திட்டத்துக்குத் தயாரானோம். குமாரியாக இருப்பவர்கள் பூப்பெய்தியவுடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடுகின்றனர். தலேஜு தேவி, அவர்களிலே தன்னை வெளிப்படுத்திக் கொள்ள நினைக்கிறாள். அவ்வாறு, குமாரியாக இருந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய சனிரா பஜராச்சாரியாவைச் சந்திக்கும் வாய்ப்பையும் கோகிலாத்தான் சாத்தியப்படுத்தியிருந்தார். சனிராவைப் பார்க்கும் திட்டத்தை நவீன் குறிப்பிட்டதும் உடனே மலையேற்றத்துடன் முடியவிருந்த பயணத்தை உடனே மூன்று நாட்கள் நீடிக்க சம்மதம் தெரிவித்தேன். அதன் பிறகு, கோகிலா சனிராவை பி.பி.சி வானொலிக்காகக் கண்டிருந்த நேர்காணல், அவரைப் பற்றிய கட்டுரைகளையும் புலனக்குழுவில் பகிர்ந்திருந்தார். பொதுவாக, குமாரி பண்பாட்டைப் பற்றி சொல்லப்படும் கடுமையான சோதனைகள், கட்டுப்பாடு மிகுந்த வாழ்க்கை ஆகியவற்றில் உண்மையில்லை என நேர்காணல்களில் சனிரா தெரிவித்தார். அத்துடன் தொலைகாட்சி பார்ப்பதற்கும் நண்பர்களுடன் இருப்பதற்குமான வாய்ப்பும் தனக்கிருந்ததாகத் தெரிவித்தார். குமாரி பண்பாட்டின் இறுக்கமான வாழ்க்கைமுறை பெரும
 நேபாளப்பயணம் 13 பேருந்திலிருந்து இறங்கி நடக்கும் போது நவீன் வழக்கம் போல வேடிக்கையாக எதையோ சொல்லிச் சிரித்தார். குமாரி கோவிலுக்குச் சென்று குமாரியைப் பார்ப்பதென்பது நேபாளப்பயணத்திட்டத்தின் முதன்மைத் திட்டமாக மாறியது கோகிலாவால்தான். அவர்தான், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து சுரேஷிடம் சொல்லிப் பயணத்திட்டத்தில் இணைத்தார். குமாரி கோவில் அமைந்திருக்கும் தர்பாரி சதுக்கப்பகுதியில் மேட்டில் ஏறினோம். எங்களைச் சுற்றிலும் மரக்கட்டுமானத்தால் ஆன பழைமையான கோவில்களும் கடைகளும் அமைந்திருந்தன.   முன்னர் அரச மாளிகையாகவும் அதனைச் சுற்றிலும் உள்ள பகுதியாகவும் அப்பகுதி இருந்திருக்க வேண்டும். இப்போது, புழுதியும் தூசும் படிந்து காலத்துள் மெல்ல மக்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. நவீன் வேகமாக நடந்து மேடேறினார். நாங்கள் பின்னாலே நடந்து சென்றோம். குமாரியின் வருகையைத் தவற விட்டுவிடக்கூடாது என எண்ணியிருக்க வேண்டும். கட்டிடங்களின் பழைமைத் தோற்றம் நடக்கையில் இன்னொரு காலத்துள் பிரயாணம் செய்வதைப் போல தோன்றச் செய்தது.                                                         குமரிகர் கட்டிடம் 14 ஆம் நூற்றாண்டில் காட்மாண்ட
  அதற்கடுத்து இரு நேபாளப் பெண்கள் மேடையிலேறி நேபாளின் நான்கு முதன்மை இனக்குழுக்களின் நடனங்களை ஆடத்தொடங்கினர். முதலில் நேவார் ,ஷெர்பா, டிமால் என மூன்று இனக்குழு நடனமும் ஒரு நாட்டுப்புற நடனமும் ஆடப்பட்டது.   நேவார் நடனத்தின் போது இரு பெண்களும் கெண்டியிலிருந்து நீரை ஊற்றுவதான பாவனைகள் அதிகம் இருந்தன. விருந்தினர்களை வரவேற்கும் பாணியிலான நடனமாக இருக்கலாம் என்று நினைத்தேன். அடுத்ததாக, ஷெர்பா நடனம் ஆடப்பட்டது. கூர்க்கா இனக்குழுவைப் போலவே உலகம் முழுவதும் ஷெர்பாவும் அறியப்பட்ட இனக்குழு. எவரெஸ்ட் மலையேற்றத்துக்குப் பெரிதும் துணையாக இருப்பவர்கள் ஷெர்ப்பாக்களே. நீண்டகாலமாக மலைப்பகுதியில் வாழ்வதால், மரபணுவாகவே உயிர்வளி குறைந்த உயரமான பகுதிகளிலும் நன்கு சுவாசிக்கும் ஆற்றலை ஷெர்பா மக்கள் பெற்றிருக்கின்றனர். கைகளை அசைத்தும் உடலைத் தாழ்த்தியும் ஷெர்பா மக்களின் நடனம் அமைந்திருந்தது, அதற்கடுத்து டிமல் நடனம் ஆடப்பட்டது, மூன்று நடனங்களிலும் பிரதானமாக கையசைவுகளும் உடலசைவுகளுமே இருந்தன. காற்றோட்டம் மிகுந்த பகுதியென்பதால், அதற்கேற்பவே நடனங்களும் காற்றுக்கு வளைந்து கொடுத்தாடுவதாகவே இருந்தன. அந்தந்தப் பகுதிகளின
 நேபாளப்பயணம் 11 பெளத்தநாத் ஸ்தூபி அமைந்திருக்கும் பகுதியிலே இருந்த சீனபாணி கடையொன்றில் வாத்துகறி சாப்பிட்டோம். நாளைக்குச் சென்று பார்க்கவிருக்கும் குமாரி கோவிலின் தலேஜு தெய்வத்தின் இஷ்டதேவதையான பத்ரகாளியம்மன் ஆலயமும் நபராஜைச் சந்திக்கவிருக்கும் பீர்குடி பகுதியில்தான் இருப்பதாகத் தெரிந்தது. அங்குச் செல்வதற்கு உள்ளூரில் பிரபலமாக இருந்த பாத்தோவ் எனப்படும் வாடகைக்காரை எடுக்கக் கைப்பேசியில் செயலியைப் பதிவிறக்கம் செய்தேன். உள்ளூர் எண்ணிருந்தால் தான் அதைப் பதியமுடியும் எனக் கடையில் வேலை செய்யும் பணியாளர் குறிப்பிட்டார். நாங்கள் தமிழர்கள் என்பதும் தமிழ் மொழியில் பேசுகிறோம் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. கடை முதலாளி என்னை அனுமதித்தான், முச்சந்தி வரையில் வந்து உங்களைக் காரிலேற்றிவிட்டு வந்திருப்பேன்….ஆனால், கடையைப் பார்த்துக் கொள்ள யாருமில்லை என்றார். ஆனாலும், என் கைப்பேசியை வாங்கி செல்ல வேண்டிய இடத்தைப் பதிவு செய்து ஓட்டுநருக்கும் அழைத்துச் சொல்லி எங்களை முச்சந்தியில் நிற்கச் சொன்னார். மிக நன்றாக ஆங்கிலம் பேசியவரிடம் நன்றியைக் குறிப்பிட்டு விடைபெற்று முச்சந்திக்கு ஓடினோம்.              
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற
 நேபாளப்பயணம் 9 அங்கிருந்து வெளியேறி நடக்கும் போதே வெப்பக்காற்றால் உடல் வியர்த்துக் கொண்டிருந்தது. லும்பினி 41 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் தகித்துக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்திலே உடலில் வியர்த்தது. இந்த வளாகத்தைத் தாண்டி சில நூறு மீட்டர் தொலைவில் பல்வேறு நாடுகளில் புத்தம் உள்வாங்கப்பட்டதன் அடையாளமாய் ஒவ்வொரு நாட்டினரும் மடாலாயங்கள் எழுப்பியிருந்தனர். மடாலயங்கள் தொடங்கும் பகுதியில் ஆள்காட்டி விரலை நீட்டிய பால்யக்காலச் சித்தார்த்தரின் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்புறம் நீண்ட நீர்தேக்கம் இருந்தது.                                                                   சித்தார்த்தர் புத்த சமயம் தேரவாதம், மஹாயானம், வஜ்ராயானம் என மூன்று முக்கியமான சிந்தனைப்பள்ளிகளைக் கொண்டது. சீனா,தைவான், கொரியா, ஜப்பான் நாடுகளில் மகாயானமும் திபெத், நேப்பாள நாடுகளில் வஜ்ராயானமும் கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, மியான்மார் நாடுகளில் தேரவாதமும் பின்பற்றப்படுகிறது.  அந்தப் பகுதிக்குச் செல்வதற்கு டுக் டுக் எனப்படும் ஆட்டோ ரிக்ஷாவை அமர்த்திக் கொண்டோம். நேபாளத்தில் இங்குத்தான் முதலில் ஆட்டோவைப் பார்க்கிறேன். மு
  நேபாளப்பயணம் 8 மறுநாள் காலையெழுந்து தெருவில் நடக்கும் போதுதான் கால்கள் கடுப்பதே தெரிந்தன. சிறிய படிகளில் கால்களை எடுத்து வைத்து நடப்பதற்கே சிரமமாக இருந்தது. தங்கும் விடுதியிலிருந்து நூறு மீட்டர் தொலைவிலே இருந்த ஃபெவா ஏரிக்குச் சென்றோம். விளம்பரங்களில் நீலநிற நீருடன் அழகாகக் காட்சியளித்த ஏரி அருகில் காணும் போது பச்சை நிறத்தில் தெரிந்தது. நானும் நவீனும் கோகிலாவும் வசந்தியும் படகிலேறினோம். பதினைந்து நிமிடத்தில் ஏரியின் நடுவிலிருந்த தீவொன்றுக்குச் சென்றோம். தீவு என்பதை விட மண் திட்டு என்பதே சரியாக இருக்கும். அங்கு பராஹி கோவில் இருந்தது.                                                                     ஃபெவா ஏரி பராஹி என்பது வராகி அம்மனைக் குறிக்கிறது என நவீன் சொன்னார். நேபாளப் பாணியில் சிவப்பு வண்ணத்தில் அமைந்திருந்த மையக் கோவிலும் அதற்கருகில் சிறிய கோவிலொன்றும் இருந்தன. அந்தக் கோவிலின் உள்ளே கல்வெட்டு ஒன்றும் உருவம் மழுங்கிய அம்மன் சிலையொன்றும் தரையில் வைக்கப்பட்டிருந்தது. சிலையில் குங்குமம் வழிந்து அதன் முன் பழங்களும் பூக்களும் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கோவிலின் உள்ளும் படமெடுக்க அன