முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
  தண்ணீர் நாவல் வாசிப்பனுபவம் அசோகமித்திரனின் தண்ணீர் நாவலை சில ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்தப்போது தண்ணீர் சிக்கலைப் பற்றிய நாவலாகவே எண்ணினேன். பித்தளைத் தவலையொன்றின் அடியில் வண்டலாகப் படிந்திருக்கும் துருவேறிய கலங்கிய நீரை நினைவுக்குக் கொண்டு வருகிறது. ஆனால், இப்பொழுது அந்த நாவலை மீள்வாசிப்பு செய்கின்ற போது துருவேரிய நீர், கோடைக்காலத்துத் தூறல், பெருமழை, சாக்கடை நீர் எனத் தண்ணீரின் வண்ண மாற்றத்தையும் எல்லாவற்றிலும் தன்னை இருத்திக் கொள்கிற நீரின் தன்மையையும் ஒருங்கே கண்முன்னால் கொண்டு வருகிறது. சென்னை போன்ற பெருநகரொன்றின் ஒண்டு குடித்தனத்தில் தன் தங்கையுடன் ஜமுனா வாடகைக்கு இருக்கிறாள். சினிமாவில் நடிக்கும் ஆசையினால் பாஸ்கர் ராவ் எனும் படத்தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிபவனிடம் சேர்ந்து தயாரிப்பாளர்களையும் வினியோகஸ்தர்களையும் சந்தித்து வருகிறாள். அவ்வாறான சந்திப்பில், அவர்களை மகிழ்விக்க பாலியல் சார்ந்த கேளிக்கைகளுக்கு இணங்குகிறாள். பாஸ்கர் ராவினால் ஜமுனா ஏமாற்றப்படுவதாகவே சாயா எண்ணுகிறாள். அலுவலகம் ஒன்றில் வேலை செய்கிறாள். அவளது கணவன் ராணுவத்தில் வேலை செய்கிறான்.   எப்பொழுதும் நீடிக்கு
  இமயத்தியாகம் நாவல் வாசிப்பனுபவம்   எழுத்தாளர் அ.ரெங்கசாமி எழுதிய இமயத்தியாகம் நாவலை வாசித்தேன். என்னுடைய வளரிளம் பருவத்தில் ஜப்பானியர் ஆட்சிக்காலக் கொடுமைகளை வயது முதிர்ந்த பாட்டிகள் சில சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். விநோதமான தண்டனைகள், புரியாத ஒரிரு ஜப்பானிய சொற்கள், பஞ்சக்கால உணவு வகைகள், ஜப்பானியரின் உடைகள், பெரிய வாள்கள் ஆகியவற்றைச் சிறுவர்களுக்கே உரிய வியப்புடன் சொல்ல கேட்டிருக்கிறேன். பள்ளிப்பாட வரலாறு என்பதும் ஜப்பானியாராட்சியை இருண்ட காலக்கட்டமாகவே வகைப்படுத்துகிறது.     இந்த வரலாற்றை முப்பரிமாண அனுபவமாக இமயத்தியாகம் அளித்தது. ஜப்பானியர்கள் மலாயாவைக் கைபற்றுவதில் இருந்து நாவல் தொடங்குகிறது. மலாயா நிலப்பரப்பை முழுவதும் அங்குலம் அங்குலமாய் அளந்ததைப் போன்ற துல்லிய அறிவும், பிரிட்டன் படைகளின் பலத்தையும் வேவுபார்த்து முழுவதுமாய் அறிந்து வைத்திருக்கின்றனர். பாங்காக்கில் செயல்பட்டு வரும் இந்திய சுதந்திரச் சங்கத்துடனும் தொடர்புகளை ஏற்படுத்தித் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். அதன் நீட்சியாகவே, ராஷ் பிகாரி போஸ் தொடங்கிய ஐ.என்.ஏ எனப்படும் இந்திய தேசிய ராணுவத்தையும் கிழக்காச