முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அந்தரங்கப்பாவனைகளின் அவிழ்ப்பு- சம்ஸ்காரா நாவல்

  யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய கன்னட நாவலான சம்ஸ்காரா நாவலை வாசித்தேன். தமிழ்நாட்டுக்குப் பயணம் சென்றிருந்தப்போது தஞ்சையில் துருவம் இலக்கிய அமைப்பினர் நினைவுப்பரிசாக இந்நாவலைத் தந்திருந்தனர். நவீனத்துவக் காலக்கட்ட நாவல்களுக்கே உரிய மனித மனத்தை ஊடுருவிப் பார்க்கும் விமர்சனப்பார்வையைத்தான் இந்நாவல் கொண்டிருந்தது. சமூக, சமய ஆச்சாரங்களையும் தவத்தைப் போலவே கடைப்பிடிக்கும் பிராணேஸாச்சாரியாருக்கும் அவற்றை மீறி இன்ப நுகர்வே ஆன வாழ்வில் திளைக்கும் நாரணப்பனுக்குமான முரணை முன்வைத்தே நாவல் மனித இயல்பை விசாரம் செய்கிறது. மாத்வ பிராமணர்கள் செறிந்து வாழும் துர்வாசப்புரம் அக்கிரக்காரப் பகுதியில் பெரும் வேதவிற்பன்னராக பிராணேஸாச்சாரியார் இருக்கிறார். அந்தச் சமூகத்தின் அன்றாடத்தில் ஆழ வேரூன்றியிருக்கும் ஆச்சாரவாதக் கேள்விகளுக்கு வேதங்களிலிருந்தும் மனு தருமத்திலிருந்தும் விடைகளைக் கண்டு தருவதில் பெரும்புகழ் பெற்றவராகத் திகழ்கிறார். வேதங்களை முழுமையாகக் கற்று தேர்ந்து அதனைக் கொண்டு வாதம் புரிவதிலும் அவரிடமிருக்கும் திறன் அக்கிரக்காரத்தில் உள்ளவர்களால் மெச்சப்படுகிறது. உலக இன்பங்களில் கவனம் செல்லாமல் பி

இளந்தமிழன் சிறுகதைகள்- கற்பிதங்களின் பிரதிபலிப்பு

  எழுத்தாளர் இளந்தமிழனின் 45 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை வாசித்தேன். 1978 முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் எழுதப்பட்ட 45 கதைகள் கொண்ட தொகுப்பு முஸ்தபா அறக்கட்டளையின் கரிகாற்சோழன் விருதைப் பெற்றிருக்கிறது. சிறுகதைகளின் பின்னணி இளந்தமிழனின் முதல் சிறுகதை 1978 ஆம் ஆண்டு வானம்பாடி இதழில் வெளிவந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து 1980 களின் இறுதி வரையிலும் தொடர்ந்தாற்போல வானம்பாடி, மலேசிய நண்பன், தமிழ் ஓசை என மலேசியாவின் முன்னணி வார,மாத இதழ்களில் இளந்தமிழனின் கதைகள் வெளிவந்திருக்கின்றன. அவர் எழுதிய கதைகளுக்கான உடனடி எதிர்வினைகள் கதைகளில் வெளிப்பட்டிருக்கின்றன என்பதை கதைகளின் தொடக்கத்தில் அளிக்கும் குறிப்புகளின் வாயிலாக அறிய முடிகிறது. தொடக்கக்காலச் சிறுகதைகளில் கலகக்கார எழுத்தாளராகச் சமூக விமர்சனத்தை முன்வைக்கும் கதைகளை எழுதியிருக்கிறார். அந்தக் கதைகளை வாசித்து வாசகர்கள் காதல் கதைகளை எழுதத்தெரியாதா எனக் கேட்க அதனையும் எழுதுகிறார். வானம்பாடி இதழில் சாதியின் கார்ணமாய்த் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சமூகச்சூழலை நேரடியாகக் கண்டிக்கும் தொனியில் எழுதப்பட்ட புனிதங்கள் புரையோடுவதில்லை என்ற கதை  5000 க்கும்