நீண்ட பயணமாக இருக்குமென்பதால் வழியிலே வெண்டிஸ் பர்கர் கடையில் ஒரு கோழி சாண்ட்விச்சை வாங்கி தந்தார். இடப்பக்க ஒட்டுநர் இருக்கை, இம்பிரியல் கணக்கு என எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டும் அமெரிக்காவில் பர்கர், சாண்ட்விச் என எல்லாமே மலேசியாவைக் காட்டிலும் அளவில் பெரிதாகவே இருந்தது. வழியில் வித்தியாசமான விளம்பரப் பலகைகள் தென்பட்டன. சந்தேகத்துக்குரிய இணையரா எங்கள் தனியார் துப்பறிவாளரை நாடவும் என்று ஒரு பலகை இருந்தது. உங்கள் ஐ டி எண் நினைவில் இல்லையா..அமெரிக்க மறதொ நோய் கழகத்தில் இணையுங்கள். அதோடு வழிமுழுவதும் அழகிய சுவர் கிறுக்கல்கள் இருந்தன. எட்ட முடியாத மேம்பாலச் சுவர்களில் கூட எப்படியோ ஏறி வரைந்திருந்தனர். ஒரு எதிர்ப்பு கலையாக ( rebel) சுவர் கிறுக்கல்கள் இருப்பதாக பழனி ஜோதி குறிப்பிட்டார். வழியில் ஹட்சன் ஆற்றின் கீழ் கட்டப்பட்டிருக்கும் ஹோல்லாந்து சுரங்கத்தைக் கடந்து நியு ஜெர்சிக்கு வந்தோம். நியு யார்க்கு நேர் எதிராக நியு ஜெர்சி ஒரு மெளனத்துடன் இருந்தது. தளிருக்குக் காத்திருந்த மொட்டை மரங்களும் பருவம் பொறுக்காது பூத்துக் குலுங்கத் தொடங்கிய செர்ரி மரங்களுமாக நகரம் அழகாக இருந்தது. எனக்...
கோவிட் பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் வீட்டுக்குள்ளே எல்லாரும் முடங்கியிருந்த சூழலில்தான் சிகண்டி நாவலை நவீன் உச்சவிசையுடன் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு நாளுக்கு ஒர் அத்தியாயமென சிகண்டி நாவலை நவீன் ஊக்கத்துடன் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தார். அதை முதலில் வாசிக்க நேர்ந்த ஒரு சில வாசகர்களில் நானும் ஒருவன் என்றவகையில் ஒரு இலக்கிய உபாசகனின் தரிசனத்தை அருகிலிருந்து பார்த்த அனுபவமாகத்தான் அதனைக் குறிப்பிட வேண்டும். சரியாக மதியத்துக்குள்ளாக எழுதிய அத்தியாயங்களை எனுக்கு அனுப்பிவிடுவார். அதனை உடனே வாசித்துக் குரல்பதிவாகவோ அல்லது கட்டுரையாகவோ என்னுடைய கருத்துகளை அனுப்பிவைப்பேன். அதில் உடன்பாடில்லாத சிலவற்றைக் கூட துடுக்காகக் கூறியிருக்கிறேன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு அதனைப் பற்றிய எதிர்க்கேள்விகளுடன் எனக்கு அழைத்துப் பேசுவார். பல சமயங்களில் என்னுடைய எழுத்தில் இருக்கும் தெளிவு நேர்ப்பேச்சிலும் உரையாடலிலும் இருப்பதில்லை. தேவைப்படும் நேரத்தில் கைகளுக்கு எட்டாத பாதாளக்கரண்டியாகச் சொற்கள் பதுங்கி கொள்ளும். அப்பொழுதெல்லாம் நான் சொல்லும் உதிரிச் சொற்களைக் கொண்டு நான...