முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
  தீம்புனல் நாவல் வாசிப்பனுபவம் எழுத்தாளர் கார்ல் மார்க்ஸின் தீம்புனல் நாவலை வாசித்து முடித்தேன். அதையொட்டி முன்னரே எழுத்தாளர் ஜெயமோகனின் உரையொன்றை யூடியுபில் கேட்டிருக்கிறேன். கார்ல் மார்க்ஸ் என்ற பெயரும் தீம்புனலும் கம்யூனிசச் சித்தாந்ததை ஒட்டிய நாவலாக இருக்கும் என்ற அனுமானத்தைக் கொடுத்திருந்தது. ஆனால், இந்த நாவல் நிலவுடைமை பின்புலம் கொண்ட விவசாயக் குடும்பம் ஒன்றின் வீழ்ச்சியையொட்டிச் சமகால தமிழ்வாழ்வின் போக்கைப் பற்றியதாகவே இருந்தது. முன்னமே தமிழில் விவசயக் குடும்பங்களின் வீழ்ச்சியை முன்வைத்திருக்கும் சு.வேணுகோபால், இமயம் போன்ற படைப்பாளிகளின் புனைவுகளையும் நினைவுப்படுத்துவதாக இருந்தது. அந்தப் புனைவுகளிலிருந்து கார்ல் மார்க்ஸின் நாவல் வேறுபடும் அல்லது புதியதாகத் தொட்டுக் காட்டும் இடத்தையே இந்நாவலில் தொடக்கம் முதலே தேடினேன். அந்த விவசாய வாழ்விலும் எழுந்துவரும் சித்திரிப்புகளும் அனுபவங்களுமாகவே இருந்தன. முன்னரே, தெரிந்த வாழ்வு என்றாலும் அதனுள் அமைந்திருக்கும் மனித உறவுகளின் சிடுக்குகள், சமூகக்கட்டமைப்பின் மாற்றங்களால் துலங்கிவரும் வாழ்வின் தரிசனம் நிச்சயம் மற்ற நாவல்களிலிருந்து வேறுப
 வாடிவாசல் நாவல் வாசிப்பனுபவம் சி. சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவல் ஒரு நிறைவான சிறுகதையை வாசித்த உணர்வை அளித்தது. மாட்டுக்கு ரோசம் வந்தாலும் ஆகாது மனிதனுக்கு ரோசம் வந்தாலும் ஆகாது என்கிற நாவலின் இறுதி வரி இந்நாவலின் ஒட்டுமொத்த வாசிப்பனுபவத்தின் தரிசனமாக இருக்கிறது. தன் தந்தையைக் குத்திக் கிழித்த மாட்டை அடக்குவதற்காக பிச்சி எனும் இளைஞன் செல்லாயி ஜல்லிகட்டுக்கு வருகிறான். அந்தக் காளை ஜமினின் பெருமைக்குரிய சின்னமாகவும் இருக்கிறது. இன்னொருவகையில் நிலப்பிரபு ஒருவரின் செல்வாக்கு, செல்வம் ஆகியவற்றின் வடிவாகவே அதன் திமிறல், பேரூரு இருக்கிறது என ஊகிக்கலாம். அந்த மாட்டை அடக்கும் சாகசத்தின் சித்தரிப்புகளாகவே நாவல் விரிகிறது. வாடிவாசலில் நின்று கண்முன்னே ஜல்லிக்கட்டைப் பார்க்கும் உணர்வை இந்நாவலின் சித்தரிப்பின் வாயிலாக சி.சு.செல்லப்பா அளிக்கிறார். நாவலின் பிச்சியின் நண்பனாக வரும் மருதன், ஊர் கிழவரின் பாத்திரம் நன்றாக அமைந்திருந்தது. ஊர் கிழவன் ஒவ்வொரு மாட்டையிம் பற்றிக் குறிப்பிடும் நுட்பங்கள், அவன் தந்தையைப் பற்றியும் மாடணைவது பற்றிச் சொல்லும் குறிப்புகளும் போர்ச்சூழலில் இருக்கும் வீரனுக்கு உரைக
 மணற்கடிகை நாவல் வாசிப்பனுபவம் ஏதேனும் இரைச்சல் அல்லது தொடர் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தால் எனக்குத் தூக்கம் நன்கு வரும். உறக்கமற்ற இரவுகளில் நிசப்தபே பெரும் அச்சமாகச் சூழ்ந்து கொள்ளும். சூழ இருக்கும் நிசபத்தின் பேரிரைச்சலைக் களைய ஏதேனும் ஒலியைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். மணற்கடிகை நாவலை வாசித்து முடிக்கும் வரை ஓயாத சிறு இரைச்சலொன்று ஒலித்துக் கொண்டிருந்ததாகவே இருந்தது. குறுக்கும் நெடுக்குமாகப் பின்னிச் செல்கிற தறிச்சத்தமாகவும் இயந்திரங்களின் கலவையொலிகளாகவும் இருந்தன. திருப்பூர் எனும் இந்தியாவின் மாபெரும் தொழிற்நகரொன்றின் பாரம்பரியத் தொழிற்முறையிலிருந்து நவீனத் தொழில் உலகுக்குள் செல்லும் காலக்கட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு நாவல் எழுந்திருக்கிறது. சிறு வயதில் நகரங்களைப் பார்க்கும் போது வியப்பில் ஆழ்த்துவது அதன் ஒழுங்கும் பிரம்மாண்டமும்தான். கார்கள் ஓயாமல் எதையோ நோக்கி விரைவதும், கட்டிடங்கள் உயர்ந்து செறிவாக, சாலைகள் மேல் கீழாக இருப்பது பயத்தையும் வியப்பையும் ஆழ்த்தும். அதே நகரில் வந்து இருக்கும் போது அதன் பிரம்மாண்டங்கள், ஒழுங்குக்குள் அமைகிற வாழ்வு குறித்த விசாரமே இந்நாவலை எல்லா நகரு