முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
விஷ்ணுபுரம் விருதுவிழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகப் பங்கேற்றுப் பேச முடியுமா என எழுத்தாளர் ஜெயமோகனிடமிருந்து செய்தி வந்த நாளிலிருந்து அதைப்பற்றியே எண்ணிக் கொண்டிருந்தேன். டிசம்பர் 15 இரவு சென்னையில் தரையிறங்கி கோவைக்கு 12 மணி நேரம் கார்பயணத்திலே விழாவுக்கான முன்னோட்டம் தொடங்கியிருந்தது. எழுத்தாளர் பிரவின் குமார் (பி.கு) எழுத்தாளர் இளம்பரிதி (வழி இணைய இதழின் ஆசிரியர்) என்னையும் எழுத்தாளர் நவீனையும் அழைத்துக் கொண்டு சென்றார்கள். வழிநெடுக இலக்கிய அரட்டையாடல் உறக்கம், விழிப்பு எனத் தொடர்ந்து கொண்டே சென்றது. எதிலும் பங்குபெறாமல் விஷ்ணுபுரம் அமர்வைப் பற்றியே எண்ணம் சுற்றிக் கொண்டிருந்தது. எனக்கு கிடைத்த அமர்வு எல்லா வகையிலும் சமகால மலேசிய தமிழ் இலக்கியத்துக்கும் மற்ற மலேசிய படைப்பாளிகளுக்கும் சேர்த்துக் கிடைத்த அமர்வென்ற எண்ணம் தொடக்கம் முதலே இருந்தது. விஷ்ணுபுரம் விருது விழா    பத்தாண்டுகளுக்கு முன்னர் ஜெயமோகனின் இணையத்தளத்தை வாசிக்கத் தொடங்கியப்போது, விஷ்ணுபுரம் விருதுவிழாவில் பங்கேற்றவர்களின் கடிதங்களை வாசித்து என்றாவது ஒருநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராகக் கலந்து நிகழ்ச்சி

கடலுக்கு அப்பால்; வாழ்வென்னும் சோர்வுக்கு அப்பால்

  ப.சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் நாவலை வாசித்தேன். மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளில் ஜப்பானியாராட்சிக் காலக்கட்டத்தில் எழுந்த சுபாஸ் சந்திரபோஸ் தோற்றுவித்த ஐ.என்.ஏ எனப்படும் இந்திய தேசிய ராணுவம் உண்டாக்கிய எழுச்சி குறிப்பிடத்தக்கது. அதனை மையப்படுத்தித் தமிழில் வெளிவந்திருக்கும் முக்கியமான நாவல்களாக இமயத்தியாகம், கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி ஆகிய நாவல்களைக் குறிப்பிட முடியும். கடலுக்கு அப்பால் நாவல் ஜப்பானியராட்சியின் வீழ்ச்சியிலிருந்தே தொடங்குகிறது. ஜப்பானியருடன் நல்லுறவைப் பேணிய இந்தியத் தேசிய ராணுவத்தினர் பர்மா எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் சென்று இந்திய விடுதலையைப்   பெற்றுத் தந்துவிட வேண்டுமென முனைந்தனர். அந்தப் பயணத்தையும் அம்முயற்சியின் வீழ்ச்சியையும் இமயத்தியாகம் நாவல் பேசியது. அந்த முயற்சி தோல்வி கண்டதற்கு ஒருவகையில் ஜப்பானிய ராணுவத்தினரின் ஆதரவின்மையும் காரணமாக இருந்தது. கடலுக்கு அப்பால் நாவல், இரண்டாம் உலகப்போர் முடியும் தருவாயில் தொடங்குகிறது. அச்சமயத்தில் மலாயாவில் ஜப்பானியர்கள் சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். ஜப்பானி