முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Better Call Saul தொடர்

 Better Call Saul தொடரைப் பார்த்து முடித்தேன். Breaking Bad தொடரின் prequel ஆன Better Call Saul இல் ஆறு பருவங்கள் அறுபத்து மூன்று எப்பிசோட்கள் கொண்ட நெடுந்தொடர்.  தான் வாதிடுகின்ற வாதிக்குச் சாதகமாக வழக்கை மாற்றியமைத்தும் ஆதாரங்களை மாற்றியமைத்தும் உடனடியாக வழக்கை நடத்தும் பெட்டிக்கடை வழக்கறிஞராகவே ஜேம்ஸ் மெக்கில் அறிமுகமாகிறான். அரிதாகவே மாற்றப்படும் நீதித்துறை விதிகளில்  தளர்வுகளை ஏற்படுத்திப் பேரம் பேசுகிறான்.  ஒருவகையில் அவனுடைய திறமையை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தாலே இதைச் செய்கிறான். தன் வழக்கறிஞர் சேவையைக் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்திக் கொள்வதன் மூலமாகச் சில்லறைக் குற்றங்களுக்கு வாதிடுகிறான். அவனுடைய முயற்சிகள் எதோ ஒருவகையில் மீள மீள தோல்வியுறுகின்றன.  முழுமையாக விரும்பவோ அல்லது வெறுத்து ஒதுக்கவும் முடியாத இருமைத்தன்மை கொண்டவனான ஜேம்ஸ் மெக்கில் பாத்திரத்தில் Bob Odenkirk மிகச்சிறப்பாக நடித்திருந்தார். எல்லாவற்றையும் உடனே செய்து முடித்து விடத்துடிக்கும் அவசரமும் குறுக்கு வழி தேடும் இயல்பும் ஜேம்ஸ் மெக்கில்லின் இளவயதிலே அமைந்துவிடுகிறது. வழக்கறிஞரானப் பின்பும் அதனையே பின்பற்றுகிறா