முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
  பேயின் கதை   இவ்வாண்டு வாசித்த நூல்களில் மிகவும் சுவாரசியமும் தாக்கத்தையும் ஏற்படுத்திய நூலாக Pai Naa எனும் நூலைக் குறிப்பிடவேண்டும். பொதுவாகவே, ஆங்கிலத்தில் வாசிக்கச் சிரமம் இருப்பதால் கொஞ்ச நாட்கள் எடுத்து நிதானமாகவே வாசித்து முடித்தேன். 1940 களில் ஜப்பானியப் படையெடுப்பின் போது சுங்கை லெம்பிங் எனும் ஈயவளம் மிகுந்த சிற்றூரில் காட்டில் தப்பித்து வாழ்ந்த நோனா பேக்கர் எனும் வெள்ளைக்காரப் பெண்ணின் வாழ்வனுபவம்தான் இந்நூல். என்னுடைய வீடு அமைந்திருக்கும் குவாந்தான் நகரிலிருந்து சில பத்து கிலோமீட்டர் தூரத்தில்தான் சுங்கை லெம்பிங் இருக்கிறதென்பது நூலின் ஆங்கிலத்தைக் கடந்து வாசிக்கச் செய்வதாக இருந்தது. அதிலும், பள்ளியிலும் குடும்பத்துடனும் அந்நகரத்துக்குச் செல்லும் போதெல்லாம் தவறாமல் செல்லும் ஈய அருங்காட்சியகம்தான் நோனா பேக்கரின் வீடாக இருந்தது என்பதும் கூடுதல் ஆர்வத்தை எழுப்பியது. அங்கு ஈயம் எடுக்கப்பட்டதற்கான எஞ்சிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் அருங்காட்சியகத்தில் ஈய வரலாற்றுடன் வெள்ளை இனப் பெண்ணொருத்தியின் உருவம் தெரிந்திருப்பதாகவும் தட்டச்சு இயந்திரச் சத்தம் கேட்பதாகவும் வாய்மொழிச் செய்