முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சை.பீர் முகம்மதுவின் சிறுகதைகள் வாசிப்பனுபவம்

 சை.பீர் முகம்மதுவின் சிறுகதைகள் வாசிப்பனுபவம்   எழுத்தாளர் சை.பீர் முகம்மதுவின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். 2008 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டிருக்கும் இச்சிறுகதைத் தொகுதியில் மொத்தம் 20 சிறுகதைகள் அமைந்திருக்கின்றன. சை.பீர் முகம்மதுவின் கதைகளில் கதைசொல்லியின் குரல் உரத்து ஒலிக்கிறது. கதைக்குள் இந்த உரத்தக் குரல் சில இடங்களில் சமூகத்தின் பொது மனநிலையை விமர்சனம் செய்வதாகவும் அதையே நகல் செய்து இறுதியில் அதிலிருந்து நழுவி உணர்வெழுச்சித் தருணங்களைக் கண்டடைவதாகவும் அமைந்திருக்கிறது. சை.பீர்.முகம்மதுவின் கதைகளின் பொதுத்தன்மையாக கதையின் இறுதியில் நிகழ்ந்துவிடும் உணர்வெழுச்சித்தருணங்களையே குறிப்பிடலாம். தொகுப்பின் தலைப்புக்குரிய கதையான பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் கதையில் தமிழ்நாட்டிலிருந்து தோட்டங்கள்தோறும் மேடை நாடகம் அரங்கேற்ற மலேசியாவுக்கு வரும் குழுவிலிருக்கும் மாரி என்பவன் உள்ளூர் பெண்ணைக் காதலித்து மலேசியாவிலே நிரந்தரமாகத் தங்கிவிடுகிறான். தமிழ்நாட்டில் கற்றுக் கொண்ட பயாஸ்கோப் காட்டும் தொழிலைக் கொண்டு தோட்டங்கள்தோறும் திருவிழாக்களில் பயாஸ்கோப் படம
 மருத்துவர் சண்முகசிவாவின் எட்டுச் சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுதியை வாசித்தேன், 2018 ஆம் ஆண்டு வல்லினம் மற்றும் யாவரும் பதிப்பகமும் இணைந்து பதிப்பித்திருக்கும் இந்நூலில் முந்தையத் தொகுப்பிலிருந்து இரண்டு கதைகளும் புதிய கதைகளாக ஆறு கதைகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவர் சண்முகசிவா ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் நலமுடன் வாழ்வோமங்கத்தின் வாயிலாகத்தான் அறிவேன். அதன் பின்னர், மயில் மாத இதழில் ஒவ்வொரு மாதமும் விழி வாசல் வழியே என்ற தொடரில் கட்டுரைகள் எழுதி வந்ததை வாசித்திருக்கிறேன். பல கவிதை மேற்கோள்களும், புதிய திறப்புகளை அளிக்கும் கட்டுரைத்தொடருக்காகவே மயில் இதழை வாங்கி வாசித்திருக்கிறேன். அதன் பின்னால் மைஸ்கில் அறவாரியம் நடத்திய இதழிலும் அவரின் மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் என்கிற மருத்துவக் கேள்விப்பதில் நூலிலிருந்து சில கேள்விப்பதில்களை வாசித்திருக்கிறேன். அதிலும் பல நவீன கவிதை வரிகளை மேற்கோள்காட்டி பதில்களை எழுதியிருப்பார். எந்தக் கேள்விக்கும் இந்த நோய் என்றோ இதுதான் தீர்வு என்றோ நேரடியான பதில் அளிக்காமல் உளவியல், இலக்கியம், நகைச்சுவை எனத் தொட்டு விரியும் பதில்கள் வாசிக்க