முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குள்ளச்சித்தன் சரித்திரம்

11 ஜூன் 2022 அன்று வல்லினம் ஏற்பாட்டில் நிகழ்ந்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் படைப்புலக அரங்கில் குள்ளச்சித்தன் சரித்திரம் நாவலை ஒட்டி ஆற்றப்பட்ட உரை.   குள்ளச்சித்தன் சரித்திரம்-வாசிப்புப் பார்வை அறிமுகம் புதுமைப்பித்தனின் காஞ்சனை சிறுகதையில் எழுத்தாளர் ஒருவர் அன்றாட வாழ்வின் சலிப்புச் சுழலுக்குள்   வாழ்வார். எழுத்தின் வாயிலாக அவர் கற்பனையிலும் அறிதலிலும் சென்று தொடக் கூடிய தூரங்களுக்கு மாறாக நிகர் வாழ்க்கையில் அன்றாடத்தின், யதார்த்ததின் சலிப்புக்குள் சிக்கியிருப்பார். மனித வித்து அநாதி காலந்தொட்டு இன்று வரையில் நினைத்துநினைத்துத் தேய்ந்து தடமாகிவிட்டன்பாதையில்தான் இந்தக் கட்டை வண்டி செல்கிறது. அதிலும் மனசை, கயிற்றை முதுகில் போட்டுவிட்டுத் தானே போகும்படி விட்டுவிடுவது என்றால், இந்த விபத்துகளையெல்லாம் பொருட்படுத்தலாமா   நவீன வாழ்வின் சிக்கலும் கூட. அந்தச் சலிப்புச் சுழலிருந்து விடுபட புனைவுக்கும் வாழ்வுக்குமான கோட்டை அழித்துப் பார்க்கும் மாற்று அனுபவமே கதையாக அமைந்திருக்கும். அவருடைய வீட்டுக்குப் பிச்சைக்காரியாக வரும் பெண்ணை வீட்டு வேலைக்காரியாக மனைவி அமர்த்துவாள். அதற்கு