முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மஹாத்மன் சிறுகதைகள்

 மஹாத்மன் சிறுகதைகள் வாசிப்பனுபவம் தமிழ் விக்கி பக்கத்தில் மலேசிய எழுத்தாளர்கள் சிலரைக் குறித்த பதிவை உருவாக்கும் போது எழுத்தாளர் மஹாத்மனைக் குறித்துத் தரவுகளை இணையத்தில் தேடினேன். ஒரு நேர்காணல், சிறுகதைத் தொகுப்பு மீதான விமர்சனக் கட்டுரை என மிகச் சொற்பமானத் தகவல்களே இருந்தன. அவரின் ஒ லாவே கதை மட்டும்தான் கதையாக இருந்ததாக சிங்கப்பூர் எழுத்தாளர் இளங்கோ தன்னிடம் சொன்னதாக நேர்ப்பேச்சில் சிரித்துக் கொண்டே சொன்னது நினைவுக்கு வந்தது. அவரது சிறுகதைத் தொகுப்பை எடுத்து வாசித்தேன். அவர் வெளியீட்டிருக்கும் ஒரே நூலும் அதுதான் நினைக்கிறேன். தொகுப்பில் இருந்த 8 கதைகளையும் வாசித்த பின்னர், நேரடி வாழ்வில் பெற்ற அனுபவங்களும், சொல்ல கேட்ட கதைகளும் எப்பொழுது கதையாக உருமாறுகின்றன என்ற கேள்வியும் உடன் எழுந்தது. மஹாத்மன் எழுதிய கதைகள் யாவும் நேரடியான அனுபவப்பதிவிலிருந்தும் கண்டும் கேட்ட கதைகளிலிருந்தும் அமைந்தவை. இதைத் தன்னுடைய நேர்காணலிலும் குறிப்பிடுகிறார். அதைப் போல ஒவ்வொரு கதையும் நான் எனத் தன்னிலையில் தொடங்கி ஒற்றை மனிதனின் அகச் சிக்கல்களை ஒட்டியே அமைகிறது. மஹாத்மன் முன்வைக்கும் பாத்திரம் எல்லா கதைகள