முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பனி உருகுவதில்லை வாசிப்பனுபவம்

எழுதத் தொடங்கும் எழுத்தாளர்கள் நன்கு பழகிய வாழ்வனுபவம், சந்தித்த மனிதர்கள், பழகிய சூழல் ஆகியவற்றையே தங்கள் எழுத்துக்கான மூலப்பொருளாக்குவார்கள். அவ்வாறான பதிவுகளில் நினைவேக்கம் என்பதும் தவிர்க்க முடியாததாக இருக்கும். தான் பெற்ற அறிவனுபவத்தைக் கொண்டு இன்னொரு காலத்தை எழுத்தில் கொண்டு வரும் போது அந்தக் காலக்கட்டத்தின் மீது மெல்லிய ரொமான்டிசிசைஸ் தன்மை எழுந்துவிடுகிறது. அவ்வாறாக இன்னொரு காலக்கட்டத்தின் மேம்பட்ட பக்கங்களைக் காட்ட வேண்டாமென்பதில்லை. ஆனால், அவை அனுபவச் சித்திரிப்பில் தன்னிகழ்வாக எழ வேண்டும். நீண்டகாலத்திற்குப் பின் எழுத்தாளர் அருண்மொழிநங்கை வலைப்பூவில் எழுதத்தொடங்கிய அனுபவப்பதிவுகளும் அவரின் பால்யக்காலம் தொட்டு அமைந்த நிகழ்வுகள், பழகிய மனிதர்களால் ஆனதாகவே இருந்தது. ஆனாலும், ஒவ்வொரு அனுபவப்பதிவும் துருதுருப்பான இளஞ்சிறுமி ஒருத்தியின் அகம் புறச்சூழலைப் பரவசத்துடன் எதிர்கொண்டு பரிணமிப்பதன் அனுபவத்தை அளித்தது. அவரின் விரிவான இலக்கிய வாசிப்பும் வாழ்க்கை அவதானிப்புமே இதைச் சாத்தியமாக்கியிருக்கிறது. அவ்வாறாக, வலைப்பதிவில் வெளிவந்த கட்டுரைகளில் அவரின் வாழ்வனுபவத்தையே முதன்ம

செல்காலமும் அல்காலமும்

ஜெயமோகன். எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட எழுத்தாளர்களாலும் விமர்சகர்களாலும் தமிழின் தலைச்சிறந்த நாவல்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்ட ப.சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி எனும் நாவலை வாசித்தேன். இரண்டாம் உலகப்போரின் தொடக்கம் முதல் இறுதி வரையிலான காலக்கட்டத்தில் தென்கிழக்காசியப் பகுதிகளிலிருந்த சூழலைப் பின்னணியாகக் கொண்டு பாண்டியன் எனும் இளைஞனின் மனவோட்டத்தையும் சாகசச்செயல்களையும் நாவல் சித்தரித்துச் செல்கிறது. பாண்டியனின் சாகசச்செயல்களை மட்டுமே கருத்தில்கொண்டால் ஒரு அதிநாயகனின் நாவலாகக் கூடத் தோன்றக்கூடும். ஆனால், ஒவ்வொரு செயலாற்றும் போதும் உள்ளூர கொள்ளும் சலிப்பின் காரணமாய் நிலையற்று நகர்ந்து கொண்டே இருக்கும் இளைஞனின் கொந்தளிப்பான அகத்துடனான பயணமாக இந்நாவல் அமைந்திருந்தது. ஒவ்வொரு செயலுக்கான பயணத்தின் போதும் மனத்தில் தோன்றுகின்ற பால்யக்கால நினைவெழுச்சி, அறிவு, அனுபவம் ஆகியவற்றால் அடையும் உள்ளூணர்வின் குழப்பங்கள், செயலின் பொருளின்மையால் உண்டாகும் சலிப்பு, உறவு, வணிகம், கேளிக்கை என உலகியல் இன்பங்கள், கடமைகள் அத்தனையும் தாண்டும் போ