முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மலேசிய இந்தியர்களின் அரசியல் வரைபடம்

  எனக்கு ஒன்பது வயதிருக்கும் போதே நாளிதழ் செய்திகளை நாள் தவறாமல் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். நாளிதழ் வாசிக்காமல் ஒரு நாளைக் கடக்க முடியாத அளவு நாளிதழ் வாசிப்பு பித்து பதினேழு வயது வரை தொடர்ந்தது. நாளிதழில் வரும் அரசியல் செய்திகள், பிரமுகர்களின் பெயர்கள், நிகழ்வுகள் அத்தனையும் மனப்பாடமாகத் தெரியும். வீட்டுக்கு வரும் உறவினர்கள், நண்பர்களிடம் என் அரசியல் அறிவை ஒப்பிப்பதை ஒரு கடமையாகவே செய்து வந்தேன். அந்தப் பெயர்களையும் நிகழ்வுகளையும் விளையாட்டைப் போல சொல்லிக் காட்டுவேன்.  அரசியல் செய்திகளைப் பேசுவதென்பது அரட்டையாடலாக மாறி உரையாடலைக் கெடுப்பதாகவும் சலிப்பூட்டுவதாகவும் அமைவதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். சலிப்பையும் வெறுப்பையும் விதைக்கும் செய்திகளே பரபரப்பு கருதி நாளிதழ்களில் கவனம் பெறுகின்றன. இன்றைக்கும்  ஊடகங்களில் அவைப் பரவலாகப் பகிரப்பட்டு உடனடி எதிர்வினைகள் பெற்று அடுத்தடுத்து வரும் செய்திகளால் விரைவில் மறைகின்றன. ஆனால், அவை உருவாக்கும் சலிப்பு, அச்சம் எப்பொழுதும் இங்கு இருக்கிறது. ஆனால், ஒரு காலக்கட்டத்தில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளையும் செய்திகளையும் பெரும் வரைபடமாகத் தொகு

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே