முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சீனலட்சுமி சிறுகதைத் தொகுப்பு வாசிப்பனுபவம்

எழுத்தாளர் கனகலதாவின் சீனலட்சுமி கதைத் தொகுப்பை வாசித்தேன். சிங்கப்பூரைக் களமாகக் கொண்டு வெவ்வேறு பின்னணி கொண்ட பெண்களின் கதைகளை எழுதியிருக்கிறார். இந்த அத்தனை கதைகளிலும் உள்ள பொதுவான தன்மையாகக் கதையில் இருக்கும் ஆசிரியரின் கதைசொல்லலைக் காண முடிகிறது. இந்தக் கதைகளில் அனைத்திலும் பாத்திரங்களுக்கிடையிலான உரையாடல் என்பது மிகக் குறைவானதாகவே இருக்கின்றது. ஆசிரியரே கதை நிகழும் களம், நிகழ்ச்சிகளைச் சொல்லிச் செல்கின்றார். இவ்வகையான கதைகளை வாசிக்கின்ற போது, வாசகனுக்குக் கதையின் போக்கை அழுத்தமாக நிறுவ ஆசிரியர் நம்பகமான தகவல்களைச் சொல்ல வேண்டியதாக இருக்கின்றது. கதை தானே நிகழும் போது பாத்திரத்துடன் வாசகனுக்கு உருவாகும் அணுக்கத்தை, ஆசிரியரின் கதை சொல்லல் தன்மை எடுத்துக் கொள்கிறது. அந்த வகையில் கதை சொல்லலில் நம்பகமும் வாசகன் கதையை உள்வாங்கி கொள்ளும் வகையிலான சித்திரிப்பும் கூடிய கதைகளை எழுத்தாளர் லதா இந்தத் தொகுப்பில் நிகழ்த்தியிருக்கிறார் எனலாம். இந்தத் தொகுப்பின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்றாக நிர்வாணம் கதையைக் குறிப்பிடலாம். எப்பொழுதும் சிரிப்பும் கம்பீரமும் தோன்ற இருக்கும் அம்மாவுக்கு ஏற்படும்