முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எம்.ஏ.இளஞ்செல்வன் கதைகள்- வாசிப்பனுபவம்

  எழுத்தாளர் எம்.ஏ.இளஞ்செல்வன் முந்தைய தலைமுறை மலேசியப்படைப்பாளிகளில் நன்கு அறியப்பட்டவர். அவருடைய சிறுகதைகள் தொகுப்பை வாசித்தேன். அவர் எழுதிய அனைத்துச் சிறுகதைகளையும் உள்ளடக்கி 1999 ஆண்டு பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. சிறுகதைகள் அனைத்தும் காலவரிசைப்படி இல்லாது முன்பின்னாகவே அச்சிடப்பட்டிருக்கிறது. இளஞ்செல்வனின் தெருப்புழுதி எனும் கதை ஆசிரியர் பயிற்சிக்கழகத்தின் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்ததால் அதை வாசித்திருக்கிறேன். அந்தக் கதையில் கூட சீண்டல் தன்மைதான் பிரதானமான இருக்கும். ஒரு மோசமான சூழலைச் சித்திரித்து அதிலிருந்து மீண்டெழும் சீண்டல் வார்த்தைகள் இருக்கும். அதனால் சீண்டப்பட்டு மனம் மாறும் தருணமொன்றுதான் கதையின் மையமாக இருக்கும். அவரை மலேசிய ஜெயகாந்தன் என்றழைப்பதையும் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், அவருடைய கதைகள் ஒழுக்கவாத, முற்போக்கு கருத்துகள் கொண்ட கதாபாத்திரங்களின் பிரதிநிதிகளும் அதற்கு மறுமுனையில் வறுமை, சூழல் ஆகியவற்றால் சமூகம் ஒதுக்குகின்ற குற்றங்களில் ஈடுபடும் மனிதர்கள் என இருவேறு துருவத்திலே இயங்குகிறது. ஜெயகாந்தனின் மார்க்சியப்பார்வையால் கதைமாந்தர்களில் வெளிப்பட்ட...