முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

விமர்சனக்கட்டுரைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அகச்சோர்வில் கரைந்த பேரோசை

  ஜகாட் திரைப்படம் குறித்து வந்த எதிர்வினைகளில் மிகமுக்கியமானதாக இயக்குநர் சஞ்ஜய் குமார் குறிப்பிடுவது, // தோட்டத் துண்டாடலின் காரணமாக இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கும் மலாய்க்காரர்களைப் போல பெல்டா போன்ற நிலக்குடியேற்றத்திட்டங்கள் தரப்பட்டிருக்கும் என எண்ணியிருந்தேன். ஆனால், அவர்கள் எவ்வித மாற்றுக் குடியிருப்புகளுக்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படாமல் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருந்ததாக மலாய் ரசிகர் ஒருவர் தன்னிடம் குறிப்பிட்டதைச் சொன்னார். சுதந்திரத்துக்குப் பிந்தைய மலேசிய இந்தியர்களின் வாழ்வில் தோட்டத் துண்டாடலும் நகரத்தை நோக்கிய நகர்வும் மிகமுக்கியமான நிகழ்வுகளாகும். இந்தியர்களின் அரசியல், சமூகப்பொருளியல் சூழலை அறிந்து கொள்ள இநத இரண்டு நிகழ்வுகளுமே மிக முக்கியமானவை. அதனை விளக்குகின்ற கட்டுரைகளும் ஆய்வுகளும் செய்திகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், ஜகாட் படம் காட்டும் வறுமையும் வன்முறையும் நிரம்பிய சூழலுக்குள் வளர்கின்ற சிறுவனுக்குள் நிகழ்கின்ற உளவியல் மாற்றத்தை உயிர்ப்பாகக் காட்டப்படும் போதே அந்தச் சமூகச்சூழலின் நியாயம் ஒரு வாசகனுக்குப் புரிபடுகிறது. ஒரு கல...

அரசியல் விழிப்புணர்வில் சிக்கிய கலை

  இவ்வாண்டு தொடக்கத்தில் மாதமொரு மலாய் நாவலை வாசிக்க வேண்டுமென முடிவெடுத்திருந்தேன். மலாய் இலக்கியத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம்தான் அதற்கான உந்துதல். முதலில் எங்கிருந்து தொடங்குவது, யாரிலிருந்து தொடங்குவதென்ற என்ற எந்தத் தெளிவும் இல்லை. இருந்தாலும், சமூகம், நிலம், வாழ்க்கைப் பின்னணி எனத் தெளிவான புறப்பின்னணிகள் கொண்ட நாவல்களைத் தேடி வாசிக்க வேண்டுமெனத் திட்டமிட்டேன். அவ்வாறான நாவல்கள் இயல்பான ஒரு நெருக்கத்தை வாசிப்பில் தருகிறது. அதனால், அந்நிய நிலம், வாழ்க்கையொன்றை வாசிக்கின்றோம் என்ற சோர்வு தட்டுவதில்லை. வாசிப்பிலிருந்து வெளியேறுவதையும் தடுக்கிறது. சில பண்பாட்டுக் குறிப்புகள், பின்னணிகள் குறித்து நூலுக்கு வெளியே வாசிப்பதைத் தவிர வேறு தடங்கல்கள் இல்லாமல் வாசிப்பைத் தொடர முடிகிறது. இம்மாதம் மூன்றாவது நாவலாக தொடக்கக் கால மலாய் இலக்கியத்தின் முதன்மையான எழுத்தாளராக மதிப்பீடப்படுகின்ற இஷாக் ஹாஜி முகம்மதுவின் அனாக் மாட் லேலா கிலா (பைத்தியக்கார மாட் லேலாவின் பிள்ளை)   எனும் நாவலை வாசித்தேன். இஷாக் ஹாஜி முகம்மது மலாய் இலக்கிய உலகில் பாக் சாக்கோ எனும் புனைபெயரில் பரவலாக அறியப...

ஜுவாரா - குரூரத்தின் காலடித்தடம்

  2023 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு விருந்தினராகச் சென்றிருந்தேன். அந்தச் சந்திப்பின் ஊடே இன்னொரு முக்கியமான பொறுப்பும் எனக்குத் தரப்பட்டிருந்தது. அவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த மலாய் மொழி எழுத்தாளர் எஸ்.எம்ஷாக்கிரின் அவைக்கு மட்டுறுத்துணராகப் பொறுப்பேற்று நடத்துவது. முன்னரே ஷாக்கிரை ஒரு முறை சந்தித்து அவருடைய படைப்புலக அறிமுகத்தைக் குறித்து உரையாடியதைத் தவிர பெரிய முன் தயாரிப்புகள் இல்லாமல்தான் அந்த அவையை வழிநடத்தினேன். அந்த அவையில் முன்வைக்கப்பட்ட கேள்விகள் வழியேதான் மலேசியாவில் இருக்கும் பன்மொழி இலக்கியச் சூழல் எவ்வித உரையாடல்களும் இன்றி தத்தம் தனித்தனித் தீவாந்திரங்களாகச் செயற்படுகிறதென்ற உணர்வு உறுதிபட்டுக் கொண்டே வந்தது. அதற்கடுத்த என்னுடைய அவையிலும் கூட மலாய் மொழி இலக்கியத்தை வாசிக்கிறீர்களா… அதன் செல்திசை குறித்துச் சொல்லுங்கள் போன்ற கேள்விகளுக்குத் தெரியாதென்ற பதிலை அளிக்க மிகுந்த குற்றவுணர்வாக இருந்தது. நேரடி அனுபவங்களிலிருந்தும் செய்திகளிலிருந்தும் பெறும் தகவல்களைக் கொண்டு மற்ற மொழி இலக்கியங்களை அணுகுவதும் அபத்தமாக இருந...

பலவீனமான லட்சிய உருவகம்

எழுத்தாளர் கோ.முனியாண்டியின் ராமனின் நிறங்கள் (2010) நாவலை வாசித்தேன். எழுத்தாளர் கோ.முனியாண்டி மலேசியாவில் புதுக்கவிதை வளர்ச்சிக்கு வித்திடுகின்ற வகையில் புதுக்கவிதை மாநாடுகள் நடத்திய முன்னோடிகளில் ஒருவர். மேலும் செய்தியாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.  மலேசியாவில் 1950களிலே ரப்பருக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட செம்பனைப்பயிர் 1980களில் தான் ரப்பருக்கு மாற்றாக அதிகளவில் பயிர் செய்யப்பட்டது. இதற்கிடையிலான காலக்கட்டத்தில், செம்பனைப்பயிர்கள் நல்ல விளைச்சலைத் தராததால் தோட்ட முதலாளிகள் செம்பனைப்பயிரை நடுவதில் தயக்கம் காட்டினர். இந்தக் காலக்கட்டத்தில், மலேசியாவில் தோட்ட நிர்வாகியாகப் பணியாற்றிய ஸ்காட்லாந்தைச் சேர்ந்த Leslie Davidson என்பவர், மலேசியாவை ஒத்த தட்பவெப்ப நிலை கொண்ட கெமரூன் நாட்டில் செம்பனைப்பயிர் ஊட்டத்துடன் வளர்வதற்கான காரணத்தைக் கண்டறிய அந்நாட்டுக்குப் பயணப்பட்டு ஆய்வுகளை மேற்கொள்கிறார். இறுதியில், செம்பனைப்பயிரின் பூக்களில் கேமரூண் வீவல்ஸ் ( Elaeidobius kamerunicus weevils ) எனும் பூச்சியினம் நடத்தும் மகரந்தச்சேர்கையினாலே அதிக மகசூல் சாத்தியமாகிறதென்பதை அறிந்து அதனை மலேச...

இளந்தமிழன் சிறுகதைகள்- கற்பிதங்களின் பிரதிபலிப்பு

  எழுத்தாளர் இளந்தமிழனின் 45 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை வாசித்தேன். 1978 முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் எழுதப்பட்ட 45 கதைகள் கொண்ட தொகுப்பு முஸ்தபா அறக்கட்டளையின் கரிகாற்சோழன் விருதைப் பெற்றிருக்கிறது. சிறுகதைகளின் பின்னணி இளந்தமிழனின் முதல் சிறுகதை 1978 ஆம் ஆண்டு வானம்பாடி இதழில் வெளிவந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து 1980 களின் இறுதி வரையிலும் தொடர்ந்தாற்போல வானம்பாடி, மலேசிய நண்பன், தமிழ் ஓசை என மலேசியாவின் முன்னணி வார,மாத இதழ்களில் இளந்தமிழனின் கதைகள் வெளிவந்திருக்கின்றன. அவர் எழுதிய கதைகளுக்கான உடனடி எதிர்வினைகள் கதைகளில் வெளிப்பட்டிருக்கின்றன என்பதை கதைகளின் தொடக்கத்தில் அளிக்கும் குறிப்புகளின் வாயிலாக அறிய முடிகிறது. தொடக்கக்காலச் சிறுகதைகளில் கலகக்கார எழுத்தாளராகச் சமூக விமர்சனத்தை முன்வைக்கும் கதைகளை எழுதியிருக்கிறார். அந்தக் கதைகளை வாசித்து வாசகர்கள் காதல் கதைகளை எழுதத்தெரியாதா எனக் கேட்க அதனையும் எழுதுகிறார். வானம்பாடி இதழில் சாதியின் கார்ணமாய்த் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சமூகச்சூழலை நேரடியாகக் கண்டிக்கும் தொனியில் எழுதப்பட்ட புனிதங்கள் புரையோடுவதில்லை என்ற கதை  50...

குள்ளச்சித்தன் சரித்திரம்

11 ஜூன் 2022 அன்று வல்லினம் ஏற்பாட்டில் நிகழ்ந்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் படைப்புலக அரங்கில் குள்ளச்சித்தன் சரித்திரம் நாவலை ஒட்டி ஆற்றப்பட்ட உரை.   குள்ளச்சித்தன் சரித்திரம்-வாசிப்புப் பார்வை அறிமுகம் புதுமைப்பித்தனின் காஞ்சனை சிறுகதையில் எழுத்தாளர் ஒருவர் அன்றாட வாழ்வின் சலிப்புச் சுழலுக்குள்   வாழ்வார். எழுத்தின் வாயிலாக அவர் கற்பனையிலும் அறிதலிலும் சென்று தொடக் கூடிய தூரங்களுக்கு மாறாக நிகர் வாழ்க்கையில் அன்றாடத்தின், யதார்த்ததின் சலிப்புக்குள் சிக்கியிருப்பார். மனித வித்து அநாதி காலந்தொட்டு இன்று வரையில் நினைத்துநினைத்துத் தேய்ந்து தடமாகிவிட்டன்பாதையில்தான் இந்தக் கட்டை வண்டி செல்கிறது. அதிலும் மனசை, கயிற்றை முதுகில் போட்டுவிட்டுத் தானே போகும்படி விட்டுவிடுவது என்றால், இந்த விபத்துகளையெல்லாம் பொருட்படுத்தலாமா   நவீன வாழ்வின் சிக்கலும் கூட. அந்தச் சலிப்புச் சுழலிருந்து விடுபட புனைவுக்கும் வாழ்வுக்குமான கோட்டை அழித்துப் பார்க்கும் மாற்று அனுபவமே கதையாக அமைந்திருக்கும். அவருடைய வீட்டுக்குப் பிச்சைக்காரியாக வரும் பெண்ணை வீட்டு வேலைக்காரியாக மனைவி அமர்த்...