முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வாசிப்பனுபவங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வறண்ட வாழ்வின் சித்திரங்கள்

  பெருமாள் முருகனின் கூளமாதாரி நாவலை வாசித்தேன். மோட்டாங்காடு எனப்படும் வறண்ட காட்டில் பண்ணைக்காரர்களின் ஆடுகளை மேய்க்கும் (ஆளுக்கார பசங்க) பதின் பருவத்துச் சிறுவர்களின் உலகை நாவல் பேசுகிறது. பண்ணைக்காரர்களின் ஆடுகளை மேய்க்கும் கூளையன், நெடும்பன், வவுறி, செவிடி, மொண்டி ஆகிய ஐந்து சிறுவர்களின் உலகையே நாவல் சித்திரிக்கிறது. ஆண்டுக்கு இவ்வளவு என கூலி பேசப்பட்டுக் கொத்தடிமைகளைப் போலவே சிறுவர்கள் ஆடுகளை மேய்க்கவும் பட்டியைத் தூய்மைப்படுத்தும் வேலையைச் செய்கின்றனர். சாதியால் தாழ்த்தப்பட்ட தெலுங்கு பேசும் அருந்ததியர் சாதியைச் சேர்ந்த சிறுவர்களை நிலவுடைமைச் சாதியினரான கவுண்டர்களின் பட்டிகளில் வேலை செய்கின்றனர். ஆடுகளை மேய்க்கக் கிளம்பும் காலையில் குச்சியால் தூக்குப் போசியைத் தூக்கிக் கைபடாமல் முன்னிரவு மீந்து போன கம்மஞ்சோற்றை வைத்து மீண்டும் குச்சியாலே இடையச் சிறுவர்களுக்குத் தருகின்ற அளவு சாதித் தீண்டாமை இருக்கிறது. சிறுவயதிலே குடும்பத்தை விட்டுப் பிரிந்து பண்ணைக்காரர்களின் கொடும் வசவுகளைத் தாங்கி கொண்டு கொடுமையான வேலையையும் செய்யும் சிறுவர்கள் தங்களுக்கான மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்...

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

சலினா- மதிப்பீடுகளைத் தாண்டி

  மலேசியாவில் தேசிய இலக்கியவாதி என்னும் விருதே இலக்கியத்துக்காக அளிக்கப்படும் உயரிய விருது. இந்த விருதைப் பல எழுத்தாளர்கள் பெற்றிருந்தப்போதிலும் எழுத்தாளர் அ.சமாட் சைட்டே தேசிய இலக்கியவாதியாக பெருமளவில் நினைவுக்கூரப்படுவராக இருக்கிறார். அதற்கு முதன்மையான காரணம் இலக்கியத்துறைச் செயற்பாடுகளைத் தாண்டியும் சமாட் சைட்டின் செயற்பாடுகள் விரிந்திருப்பதே எனலாம். ( தமிழ்விக்கிப் பதிவு ) இலக்கியச் செயற்பாடுகளைத் தாண்டி அறிவியல், கணிதப்பாடங்கள் ஆங்கிலமொழியில் கற்பிக்கப்படும் முடிவை எதிர்க்கும் போராட்டம், தேர்தல் அரசியல் சீர்திருத்தம் கோரிய பெர்சே பேரணி எனப் பல போராட்டங்களை அ.சமாட் சைட் முன்னெடுத்திருக்கிறார்;பங்கெடுத்திருக்கிறார். அவருடைய முதல் நாவலான சலினா 1958 ஆம் ஆண்டு எழுதப்பட்டு 1961 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. சலினா நாவல் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய சிங்கப்பூரைக் களமாகக் கொண்டது. இந்தியத் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பொதுப்பணித்துறைக் குடியிருப்பொன்றின் அடுத்து இருக்கும் ஆட்டுக்கொட்டகைகளை அறைகளாகத் தடுத்து உருவாகியிருக்கும் கம்போங் கம்பிங் (ஆட்டுக் கம்பம்) தான் சலினா ந...

மரபும் நவீனமும்

  இவ்வாண்டு தொடக்கத்தில் மாதம் ஒரு மலாய் நாவலை வாசிக்க வேண்டுமென முடிவெடுத்திருந்தேன். அதன்படி மூன்று மாதங்களாக மூன்று நாவல்களை வாசித்திருந்தேன்.   மலேசியாவில் வழங்கப்படும் தேசிய இலக்கியவாதி விருது பெற்றவர்களின் நாவல்கள், முன்னோடிகளின் நாவல்கள் இப்படியாகத்தான் தெரிவு செய்து வாசித்திருந்தேன். ஆனால், அந்தத் தெரிவு சரியானது தானா என்ற குழப்பம் இடையில் எழுந்தது. மலாய் எழுத்தாளர் நண்பர் அஸ்ரினிடம் சில நாவல் பரிந்துரைகளைக் கேட்டேன். அவர் சில நாவல்களைப் பரிந்துரை செய்தார். நான் அதுவரை வாசித்திருந்த நாவல்களின் களம், அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையாக சில நாவல்களைப் பரிந்துரை செய்தார். அவர் குறிப்பிட்ட எல்லா நாவல்களுமே மறுபதிப்பு காணாத நாவல்கள். அந்த நாவல்களைத் தேடிக் கண்டையும் முயற்சியில் ஒவ்வொரு மாதமாக வாசிப்பு தடைபட்டுக் கொண்டே வந்தது. உடனே வாசிப்பும் தடைபட்டு விட்டது. அதுவரையில் வாசித்திருந்த மூன்று நாவல்களும் இலக்கிய அடிப்படையில் கலவையானதாக இருந்தது. எதற்காக மலாய் நாவலை வாசிக்கின்றோம் என்ற கேள்வியெழுந்தது. அறியப்படாத மலாய் சமூகத்தின் வாழ்வை அல்லது அவற்றின் இலக்கியத்தன்மைய...
  அசோகமித்திரனின் இரண்டு கதைகள் அசோகமித்திரனின் இந்திராவுக்கு வீணை கற்று கொள்ள வேண்டும், இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை ஆகிய இரண்டு சிறுகதைகளுக்குமான கால இடைவெளி 21 ஆண்டுகள். முதல் கதை 1959 இல் வெளிவந்திருக்கிறது.   ஒரு இளம்பெண்ணுக்கு உருவாகின்ற வீணை கற்கும் ஆசையின் வழியே நடுத்தரக் குடும்பத்தில் பெண்களின் நிலை தெரிய வருகிறது. இரண்டாம் கதை, அந்த ஆசை ஈடேறாமல் மனதுக்குள் ஏற்படுத்தி விடும் அந்தரங்கமான வடுவொன்றைப் பேசுகிறது. இரு கதைகளுமே குடும்பச் சூழல், நெருக்கடிக்களுக்குள் புதைந்து போயிருக்கின்ற ஒரு பெண்ணின் அந்தரங்கமான உணர்வுகளைச் சொல்லுகின்ற முக்கியமான கதைகள். முதல் கதையில் குடும்பச்சூழலை நேர்த்தியான சித்திரிப்புகளால் அசோகமித்திரன் காட்டுகிறார். விற்பனைப் பிரதிநிதியான அப்பா தேர்வைக் காரணம் காட்டி மகளின் இசை வகுப்புக்குச் செல்லும் ஆர்வத்தைக் கலைக்கிறார். இசை ரசனை இல்லாத அம்மா, கோவில் கச்சேரியில் பாடவிருக்கும் கலைஞரைப் பற்றியத் தகவல்களை அறிந்து கொள்ள கேள்விகளால் இந்திராவைத் துளைத்தெடுத்து கச்சேரியின் போது வாய் பிளந்து தூங்குகிறார். அண்ணனோ, சீட்டு விளையாடும் ஆர்வத...

அகச்சோர்வில் கரைந்த பேரோசை

  ஜகாட் திரைப்படம் குறித்து வந்த எதிர்வினைகளில் மிகமுக்கியமானதாக இயக்குநர் சஞ்ஜய் குமார் குறிப்பிடுவது, // தோட்டத் துண்டாடலின் காரணமாக இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கும் மலாய்க்காரர்களைப் போல பெல்டா போன்ற நிலக்குடியேற்றத்திட்டங்கள் தரப்பட்டிருக்கும் என எண்ணியிருந்தேன். ஆனால், அவர்கள் எவ்வித மாற்றுக் குடியிருப்புகளுக்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படாமல் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருந்ததாக மலாய் ரசிகர் ஒருவர் தன்னிடம் குறிப்பிட்டதைச் சொன்னார். சுதந்திரத்துக்குப் பிந்தைய மலேசிய இந்தியர்களின் வாழ்வில் தோட்டத் துண்டாடலும் நகரத்தை நோக்கிய நகர்வும் மிகமுக்கியமான நிகழ்வுகளாகும். இந்தியர்களின் அரசியல், சமூகப்பொருளியல் சூழலை அறிந்து கொள்ள இநத இரண்டு நிகழ்வுகளுமே மிக முக்கியமானவை. அதனை விளக்குகின்ற கட்டுரைகளும் ஆய்வுகளும் செய்திகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், ஜகாட் படம் காட்டும் வறுமையும் வன்முறையும் நிரம்பிய சூழலுக்குள் வளர்கின்ற சிறுவனுக்குள் நிகழ்கின்ற உளவியல் மாற்றத்தை உயிர்ப்பாகக் காட்டப்படும் போதே அந்தச் சமூகச்சூழலின் நியாயம் ஒரு வாசகனுக்குப் புரிபடுகிறது. ஒரு கல...

உணர்வுகளை மாற்றியமைக்கும் அலை

வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவலை வாசித்தேன்.  மணப்பாடு கடற்கரையை ஒட்டி வாழும் மீனவர்களின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டிருந்தது. சிறிய தீற்றல்களால் ஒரு சித்திரத்தைத் தத்ரூபமாகக் கொண்டு வருவதைப் போல தெற்காகப் பறந்து செல்லும் கடற்காகங்கள், கரையை மோதம் ஓயாத அலைகளின் இரைச்சல், காற்றுக்கு ஆடும் தென்னங்கீற்றுகள் என நுணுக்கமான கடற்கரைப் பின்னணிச் சித்திரிப்புகளால் வன்மம் துரோகம் காமம் துயர் தவிப்பும் மனச்சஞ்சலங்களாலும் ஆன கடற்கரை மக்களின் வாழ்வை வண்ணநிலவன் எழுதியிருக்கிறார். மீனவர்களுக்குள் நிகழும் எல்லா சம்பவங்களிலும் தானும் பங்கெடுத்துத் துயருற்றும் மகிழ்ந்தும் வரும் பவுல் கிழவர், தன் சேகரத்தில் உள்ள பொருட்களைக் கணம் தவறாமல் திறந்து பார்க்கும் சிறுமியைப் போல வீட்டுக்கு முன்னிருக்கும் மனிதர்களையும் கடலையும் பார்வை குன்றிய கண்களால் அளைந்து கொண்டிருக்கும் பெரிய மாமி எனப் பாத்திரங்களும் நாவலை உயிர்ப்புடையதாக்குகிறது. பல தலைமுறைகளாக மரங்களால் ஆன வள்ளங்களில் மீன்பிடித்து வந்த கடல்பகுதியில் மோட்டார் பொருத்திய லோஞ்சுகள் அறிமுகமாகின்றன. கடல் அலைகளின் சுழிகளுக்கேற்ப துடுப்பிட்டு காற்...
  நினைவுச்சின்னம் நாவல் வாசிப்பனுபவம் அ.ரெங்கசாமியின் நினைவுச்சின்னம் நாவலை வாசித்தேன். மலாயாவில் நிகழ்ந்த ஜப்பானியப் படையெடுப்பின் போது பர்மாவுக்கும் சயாம் (தாய்லாந்து) இடையில் ரயில் பாதை அமைக்கப்பட்டது. 1942 இல் தொடங்கிய பணிகள் 1944 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய பதினான்கு மாதங்கள் நீண்டன. முறையான உணவு, இட, சுகாதார வசதியின்றி ரயில் பாதை அமைக்க அழைத்துச் செல்லப்பட்ட மலாயாத் தமிழர்கள், ஆங்கிலேயப் போர்க்கைதிகள் உட்பட நூறாயிரத்துக்கும் அதிகமானோர் நோய்களாலும் ஜப்பானியரின் அடக்குமுறையான பணிச்சூழலாலும் இறந்து போயினர். இந்தக் கொடும் வரலாற்றை மையப்படுத்தியே ரெங்கசாமி நினைவுச்சின்னம் நாவலை எழுதியிருக்கிறார். சிலாங்கூரில் இருக்கும் புரூக்லேன்ஸ் தோட்டத்தில் இருந்து ரயில் கட்டுமானப்பணிக்கு அழைத்துச் செல்லப்படும் 30 தொழிலாளர்கள் கொண்ட குழுவொன்றே நாவலில் முதன்மையாக இடம்பெறுகிறது. அந்தக் குழுவில் உடல் வலிமையும் துணிவும் மிக்க இளைஞனான இடும்பனே நாவலின் நாயகன். அந்த 30 தொழிலாளர்களும் கோலாலம்பூர் ரயில் நிலையத்தில் திறந்த வெளி சரக்கு ரயில் வண்டிகளில் சியாமுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். 15 பேர் மட்...

வயலும் வாழ்க்கையும்

  வயலும் வாழ்க்கையும் ஷானோன் அகமாட்டின் detik detik diri di daerah daif (உட்புற மாவட்டமொன்றிலிருந்த தருணங்கள்) எனும் தன்வரலாற்று நூலைத்தான் முதலில் வாசித்தேன். செய்திகள், தேர்வு வாசிப்புக்காகவும் இல்லாமல் நான் முதன்முதலாக வாசித்த மலாய் புனைவு நூலும் அதுதான். கெடா மாநிலத்தின் உட்புறப்பகுதியான சிக் பகுதியில் கழிந்த தன் பால்யத்தையும் மேற்கல்வி வரையிலான வாழ்வைப் புனைவு கலந்து சொல்லியிருப்பார். மலாய் மக்களின் கிராமப்புற வாழ்வின் சிரமங்கள், நெல் வயல் வேலைகள் எனச் சுவாரசியமாக இருந்ததாக நினைவிருக்கிறது. அதிலும் குறிப்பாக, தன் தந்தையுடன் சேர்ந்து மணிப்புறாவைப் பிடித்து அதைத் துள்ளத்துடிக்கக் கொல்லும் சித்திரமொன்று நன்கு நினைவில் இருக்கிறது. அதற்கடுத்து tivi எனும் குறுநாவலை வாசித்தேன். நெல் விவசாயம் செய்யும் மலாய் மக்களின் வாழ்வுக்குள் நவீனத் தொழிற்நுட்பத்தின் வருகையை ஒரு விவசாயக் குடும்பத்துக்குள் தொலைக்காட்சி முதலில் அறிமுகமாகி அதன் வழியாக விவசாயப் பணிகளுக்குச் செல்லச் சோம்பல் ஏற்பட்டு மெல்லக் குடும்பம் சீரழிவதைச் சொல்லும் படைப்பு திவி. கலை என்பதை விட சமூக விமர்சனத்தை முன்னிலைப்படுத்தும்...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...