முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பயண அனுபவங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறைபட்ட கலை

  விஷ்ணுபுரம் விருது விழாவில் பேராசிரியர் மு.இளங்கோவனைச் சந்தித்தோம். விஷ்ணுபுரம் அமைப்பினர் வழங்கும் அறிவுசார் பங்களிப்பாற்றிய ஆய்வாளர்களுக்கான தூரன் விருதை 2023 ஆம் ஆண்டு பெற்றிருந்தார். தமிழறிஞர்கள் பலரையும் நேரில் சந்தித்தும் அவர்களின் குடும்பத்தினர், ஊரார், நண்பர்கள் எனப் பலரைச் சந்தித்தும் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்த அரிய பணியை அவர் செய்திருக்கிறார். மலேசியாவுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டு இங்குள்ள தமிழறிஞர்களின் வாழ்வையும் தொகுத்திருக்கிறார்.  https://muelangovan.blogspot.com/ பேராசிரியர் இளங்கோவனின் வலைப்பக்கம் நானும் நவீனும் செல்ல விரும்பிய தஞ்சைப் பயணத்துக்குச் சில உதவிகளைச் செய்தார். அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலைக் காண எங்களை அழைத்துச் சென்றார். சிறுவயதில் அவர் பார்த்த கங்கை கொண்ட சோழபுரக் கோவிலுக்கருகில் இருந்த புதர்காடுகள் பின்னர் சீரமைக்கப்பட்டதாகச் சொன்னார்.   அந்தி சாயும் நேரத்தில் சென்றிருந்ததால், இருள் கவிவதற்குள் மொத்த கோவிலையும் விரைவாகப் பார்த்துவிடவேண்டுமென விரைவாகவே சுற்றிவந்தோம். கோவிலுக்கு வெளியே இடப்புறத்தில் இருந்...

எழுத்தாளர் பெருந்தேவியுடனான சந்திப்பு

  காலையில், எழுத்தாளர் பெருந்தேவியைச் சந்திக்கும் திட்டத்தை லதா சொன்னார். பெருந்தேவி முகநூலில் இருந்த சமயத்தில் அவருடைய கவிதைகளையும் உடல் அரசியல் பால் தொடரின் சில பகுதிகளையும் வாசித்திருக்கிறேன். ஒரு சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல் மாடியின் கடைசி வீட்டுக்குள் எங்களைப் பெருந்தேவி அழைத்துச் சென்றார். வீட்டுக்குள் நுழைந்ததும், கணநேரம் எதாவது பேசிக்கொள்ளாமல் எங்களையே வெறித்துப் பார்த்தார் பெருந்தேவி. பேச்சிலும் பார்வையிலும் கனிவுடன் ஒவ்வொன்றாக விசாரித்துக் கொண்டிருந்தார். மதிய உணவு சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டுமெனச் சொல்லியிருந்தார். அவருடைய வீட்டைப் பார்த்த மாதிரியாக சக்கரை அம்மா எனும் 19 ஆம் நூற்றாண்டு சித்தர் கோவில் இருப்பதையும் சொன்னார். திரு.வி.க போன்றவர்கள் கூட சக்கரை அம்மாவின் ஆற்றலைக் கண்டு பேசியிருக்கிறார்கள் எனச் சொன்னார். மிளகு ரசம், பருப்புத் துவையலுடன் நெய்யும் அப்பளமுமாய் தமிழ்நாட்டிலருந்த நாட்களில் மிக அருமையான உணவுகளில் ஒன்றைத் தந்தார். உணவு முடித்தப் பின், மாமல்லப்புரம் செல்லும் திட்டத்தைச் சொன்னார்.  சென்னைக்கு வந்தால் மாமல்லப்புரம் சென்று பார்த்து...

ஏசுவின் பிறப்பு

  பயண நினைவுகளில் சில தருணங்கள் நேரில் உணர்ந்ததைக் காட்டிலும் பின்னர் எண்ணிப்பார்க்கும் போது இன்னுமே விரிவானதாகத் தெரிகிறது. 2023 டிசம்பரில் நிகழ்ந்த முதல் இந்தியப்பயணம் பற்றி எழுத வேண்டுமெனப் பலநாட்களாக எண்ணம் இருந்தது. அதில் சில தருணங்களைப் பற்றி மட்டும் எழுதிப் பார்க்கிறேன்.   மலேசியாவுக்குத் திரும்புவதற்கு இரு நாட்களுக்கு முன் தான் தஞ்சையிலிருந்து ரயிலிலே சென்னையை வந்தோம். சென்னையில் முதல் நாள், எழுத்தாளர் ம.நவீனின் தாரா நாவல் அறிமுகக்கூட்டம் நிகழ்ந்தது. அந்த நாவலை ம.நவீன் எழுதத் தொடங்கி பெயரிடுவதற்கான குறியை நேபாளத்தில் பெற்றது தொடங்கி முதல் பிரதியை வாசித்தது முதலாக உடனிருந்திருக்கிறேன். நிகழ்ச்சியில் பேசுவதற்கான குறிப்புகளை எழுத்தாளர் சு.வேணுகோபால் , நானும் நவீனும் தங்கியிருந்த விடுதி அறையில்தான் தயார் செய்தார். அறையை விட்டு எங்குமே அகலாமல் கையிலிருக்கும் புத்தகத்தை மல்லாந்தும் உட்கார்ந்தும் என மாறி மாறி வாசித்துக் கொண்டிருந்தார்.   கோவையில் விஷ்ணுபுரம் விருது விழாவில் அவரைச் சந்தித்திருந்தேன். என் பெயரை அரவிந்து…அரவிந்து எனச் சொல்லி அழைத்துப் பேசினார். விழாவின் இ...
 நேபாளப்பயணம் 15 இணைய வசதி இல்லாமல் தெரியாத இடத்தில் சென்று வர தனித்துணிச்சல் வேண்டும். எப்படி யோசித்தாலும் விடுதியின் பெயரைக் கொண்டு திரும்பி வந்துவிடுவார்களென நினைத்துக் கொண்டேன். எங்களின் விமானம் இரவு மணி 8.40 என்பதால் 4.30 க்கெல்லாம் விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. கணேஷ் அவர்களைக் கொண்டு வரும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் எல்லாம் முதலில் தங்கும் விடுதிக்குச் செல்லுங்கள். நான் ஆனந்தியுடன் அவர்கள் மூவரையும் அழைத்து வருகிறேன் என்றார் என மிக நிதானமாகச் சொன்னார். அவருடன் கந்தா எனப்படும் கந்தசாமியும் களத்தில் இறங்கி தேடத்தொடங்கினார். நாங்கள் பேருந்திலேறி உட்கார்ந்து சில நிமிடங்களிலே கந்தசாமி மூவரையும் பேருந்துக்கு அழைத்து வந்தார். அந்தப் பதற்றமான சூழலில் மிக வேடிக்கையாகப் பேசி கொஞ்ச நேரத்தில் சூழலை இலகுவாக்கிவிட்டார். அங்கிருந்து செல்வதற்கு முன்னர் விடுதிக்குச் சென்று சாப்பிடவேண்டிய மதிய உணவுக்கான ஆர்டரைக் கொடுத்தோம். மறுநாள் வேலைக்குச் சென்றுவிட வேண்டுமென நினைத்திருந்ததால் பயன நேரம், தயார் செய்யும் நேரம் என என நேரக்கணக்கில் மூழ்கியிருந்தேன். பட்டென்று மயூரி...
 நேபாளப்பயணம் 14 குமாரி கோவிலில் இருந்து வெளியேறி நடந்து செல்லும் போதே அடுத்தப் பயணத்திட்டத்துக்குத் தயாரானோம். குமாரியாக இருப்பவர்கள் பூப்பெய்தியவுடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடுகின்றனர். தலேஜு தேவி, அவர்களிலே தன்னை வெளிப்படுத்திக் கொள்ள நினைக்கிறாள். அவ்வாறு, குமாரியாக இருந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய சனிரா பஜராச்சாரியாவைச் சந்திக்கும் வாய்ப்பையும் கோகிலாத்தான் சாத்தியப்படுத்தியிருந்தார். சனிராவைப் பார்க்கும் திட்டத்தை நவீன் குறிப்பிட்டதும் உடனே மலையேற்றத்துடன் முடியவிருந்த பயணத்தை உடனே மூன்று நாட்கள் நீடிக்க சம்மதம் தெரிவித்தேன். அதன் பிறகு, கோகிலா சனிராவை பி.பி.சி வானொலிக்காகக் கண்டிருந்த நேர்காணல், அவரைப் பற்றிய கட்டுரைகளையும் புலனக்குழுவில் பகிர்ந்திருந்தார். பொதுவாக, குமாரி பண்பாட்டைப் பற்றி சொல்லப்படும் கடுமையான சோதனைகள், கட்டுப்பாடு மிகுந்த வாழ்க்கை ஆகியவற்றில் உண்மையில்லை என நேர்காணல்களில் சனிரா தெரிவித்தார். அத்துடன் தொலைகாட்சி பார்ப்பதற்கும் நண்பர்களுடன் இருப்பதற்குமான வாய்ப்பும் தனக்கிருந்ததாகத் தெரிவித்தார். குமாரி பண்பாட்டின் இறுக்கமான வாழ்க்கைமுறை ப...
 நேபாளப்பயணம் 13 பேருந்திலிருந்து இறங்கி நடக்கும் போது நவீன் வழக்கம் போல வேடிக்கையாக எதையோ சொல்லிச் சிரித்தார். குமாரி கோவிலுக்குச் சென்று குமாரியைப் பார்ப்பதென்பது நேபாளப்பயணத்திட்டத்தின் முதன்மைத் திட்டமாக மாறியது கோகிலாவால்தான். அவர்தான், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து சுரேஷிடம் சொல்லிப் பயணத்திட்டத்தில் இணைத்தார். குமாரி கோவில் அமைந்திருக்கும் தர்பாரி சதுக்கப்பகுதியில் மேட்டில் ஏறினோம். எங்களைச் சுற்றிலும் மரக்கட்டுமானத்தால் ஆன பழைமையான கோவில்களும் கடைகளும் அமைந்திருந்தன.   முன்னர் அரச மாளிகையாகவும் அதனைச் சுற்றிலும் உள்ள பகுதியாகவும் அப்பகுதி இருந்திருக்க வேண்டும். இப்போது, புழுதியும் தூசும் படிந்து காலத்துள் மெல்ல மக்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. நவீன் வேகமாக நடந்து மேடேறினார். நாங்கள் பின்னாலே நடந்து சென்றோம். குமாரியின் வருகையைத் தவற விட்டுவிடக்கூடாது என எண்ணியிருக்க வேண்டும். கட்டிடங்களின் பழைமைத் தோற்றம் நடக்கையில் இன்னொரு காலத்துள் பிரயாணம் செய்வதைப் போல தோன்றச் செய்தது.                           ...
  அதற்கடுத்து இரு நேபாளப் பெண்கள் மேடையிலேறி நேபாளின் நான்கு முதன்மை இனக்குழுக்களின் நடனங்களை ஆடத்தொடங்கினர். முதலில் நேவார் ,ஷெர்பா, டிமால் என மூன்று இனக்குழு நடனமும் ஒரு நாட்டுப்புற நடனமும் ஆடப்பட்டது.   நேவார் நடனத்தின் போது இரு பெண்களும் கெண்டியிலிருந்து நீரை ஊற்றுவதான பாவனைகள் அதிகம் இருந்தன. விருந்தினர்களை வரவேற்கும் பாணியிலான நடனமாக இருக்கலாம் என்று நினைத்தேன். அடுத்ததாக, ஷெர்பா நடனம் ஆடப்பட்டது. கூர்க்கா இனக்குழுவைப் போலவே உலகம் முழுவதும் ஷெர்பாவும் அறியப்பட்ட இனக்குழு. எவரெஸ்ட் மலையேற்றத்துக்குப் பெரிதும் துணையாக இருப்பவர்கள் ஷெர்ப்பாக்களே. நீண்டகாலமாக மலைப்பகுதியில் வாழ்வதால், மரபணுவாகவே உயிர்வளி குறைந்த உயரமான பகுதிகளிலும் நன்கு சுவாசிக்கும் ஆற்றலை ஷெர்பா மக்கள் பெற்றிருக்கின்றனர். கைகளை அசைத்தும் உடலைத் தாழ்த்தியும் ஷெர்பா மக்களின் நடனம் அமைந்திருந்தது, அதற்கடுத்து டிமல் நடனம் ஆடப்பட்டது, மூன்று நடனங்களிலும் பிரதானமாக கையசைவுகளும் உடலசைவுகளுமே இருந்தன. காற்றோட்டம் மிகுந்த பகுதியென்பதால், அதற்கேற்பவே நடனங்களும் காற்றுக்கு வளைந்து கொடுத்தாடுவதாகவே இருந்தன. அந்தந்தப் ...