முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜகாட்- சூழல் மாற்றும் மனிதர்கள்

  2015 ஆம் ஆண்டு முகநூலில் தொடர்ச்சியாக எழுத்தாளர்கள் ம.நவீன், பாலமுருகன் ஆகியோர் எழுதிய பதிவுகளின் வாயிலாகவே ஜகாட் படத்தைப் பார்க்கும் உந்துதல் எழுந்தது. என்னுடைய நண்பர்கள் பலருக்கும் மலேசியப் படத்தைத் திரையரங்கில் பார்ப்பதில் தயக்கமிருந்தது. எனக்கும் கூட ஒரிரண்டு மலேசியப்படங்களைத் திரையரங்கில் பார்த்த கசப்பான அனுபவங்கள் இருந்தன. ஆனால், ஜகாட் படத்தின் முன்னோட்டம் , போஸ்டர் வடிவமைப்பு, படத்தையொட்டி வெளியீடப்பட்ட பாடல் ( ஜகாட்ன்னா நல்லா பையன் ) எல்லாமே அது வரையில் நான் பார்த்திருந்த மலேசியப் படங்களைக் காட்டிலும் வித்தியாசமான படமாக ஜகாட் இருக்குமென்ற எண்ணத்தை உருவாக்கியது. அதோடு, மலேசியாவில் தமிழர்கள் மத்தியில் அதிகளவு புழங்கி தமிழ்மயப்பட்டுவிட்ட சொற்களில் ஜகாட் என்பது முக்கியமானது. ''அவன் ரொம்ப ஜகாட் புடிச்சவன், ஜகாட் காக்கி, ஜகாடானவன்'' என மிகச் சாதாரணமாக கொஞ்சம் அடாவடியான அல்லது ஒழுங்குகளைப் பின்பற்றாதவர்களைச் சுட்ட மிக இயல்பாக மலேசியத் தமிழர்களிடம் புழங்கிய சொல் அது. இப்படியாக, படத்தின் தலைப்பே மலேசியத் தமிழர்களின் வாழ்வியலுடன் நெருங்கியத் தொடர்பிருப்பதை உணர்த்தியது. ...