முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சீ.முவுக்கு அஞ்சலி

 ''சீ.மு ஒரு சிங்கம் மாதிரி தனித்துத்தான் இருப்பார்'' என்றுதான் எழுத்தாளர் சீ.முத்துசாமியை இலக்கிய நண்பர்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர். 2017 ஆம் ஆண்டு கூலிம் பிரம்ம வித்யாரண்யம் ஆசிரமத்தில் நவீன இலக்கியச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தச் சந்திப்புத்தான் கல்லூரிக்கு வெளியே நான் கலந்து கொண்ட முதல் இலக்கியக்கூட்டம். ஜெயமோகனின் வெண்முரசு நாவல் தொடரையும் அவருடைய எழுத்துகளையும் இடைவிடாமல் வாசித்துக் கொண்டிருந்த காலக்கட்டம். பொதுவாகவே, என்னுடைய தனிப்பட்ட கூச்ச இயல்பால் உரையாடலையோ சந்திப்புகளையோ பெரும்பாலும் தவிர்த்துவிடவே செய்வேன். ஆனால், ஜெயமோகன் நிகழ்ச்சிக்கு வருகிறார் எனும் போது நிச்சயமாகக் கலந்து கொள்ள வேண்டுமென்கிற உந்துதல் எழுந்தது. அப்போதைக்கு  வாசித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் விவாதிக்கவும் எனக்கு தெரிந்த ஒரே இலக்கிய நண்பர் கூலிமைச் சேர்ந்த சு.தினகரன் தான். அவருக்கு நவீன கவிதைகளில் ஆர்வம் இருந்தது. நாளிதழ்களில் தொடர்ச்சியாக கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியிருந்தார்.  நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமென தினகரனும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்...