இவ்வாண்டு தொடக்கத்தில் மாதம் ஒரு மலாய் நாவலை வாசிக்க வேண்டுமென முடிவெடுத்திருந்தேன். அதன்படி மூன்று மாதங்களாக மூன்று நாவல்களை வாசித்திருந்தேன். மலேசியாவில் வழங்கப்படும் தேசிய இலக்கியவாதி விருது பெற்றவர்களின் நாவல்கள், முன்னோடிகளின் நாவல்கள் இப்படியாகத்தான் தெரிவு செய்து வாசித்திருந்தேன். ஆனால், அந்தத் தெரிவு சரியானது தானா என்ற குழப்பம் இடையில் எழுந்தது. மலாய் எழுத்தாளர் நண்பர் அஸ்ரினிடம் சில நாவல் பரிந்துரைகளைக் கேட்டேன். அவர் சில நாவல்களைப் பரிந்துரை செய்தார். நான் அதுவரை வாசித்திருந்த நாவல்களின் களம், அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையாக சில நாவல்களைப் பரிந்துரை செய்தார். அவர் குறிப்பிட்ட எல்லா நாவல்களுமே மறுபதிப்பு காணாத நாவல்கள். அந்த நாவல்களைத் தேடிக் கண்டையும் முயற்சியில் ஒவ்வொரு மாதமாக வாசிப்பு தடைபட்டுக் கொண்டே வந்தது. உடனே வாசிப்பும் தடைபட்டு விட்டது. அதுவரையில் வாசித்திருந்த மூன்று நாவல்களும் இலக்கிய அடிப்படையில் கலவையானதாக இருந்தது. எதற்காக மலாய் நாவலை வாசிக்கின்றோம் என்ற கேள்வியெழுந்தது. அறியப்படாத மலாய் சமூகத்தின் வாழ்வை அல்லது அவற்றின் இலக்கியத்தன்மைய...