நினைவுச்சின்னம் நாவல் வாசிப்பனுபவம் அ.ரெங்கசாமியின் நினைவுச்சின்னம் நாவலை வாசித்தேன். மலாயாவில் நிகழ்ந்த ஜப்பானியப் படையெடுப்பின் போது பர்மாவுக்கும் சயாம் (தாய்லாந்து) இடையில் ரயில் பாதை அமைக்கப்பட்டது. 1942 இல் தொடங்கிய பணிகள் 1944 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய பதினான்கு மாதங்கள் நீண்டன. முறையான உணவு, இட, சுகாதார வசதியின்றி ரயில் பாதை அமைக்க அழைத்துச் செல்லப்பட்ட மலாயாத் தமிழர்கள், ஆங்கிலேயப் போர்க்கைதிகள் உட்பட நூறாயிரத்துக்கும் அதிகமானோர் நோய்களாலும் ஜப்பானியரின் அடக்குமுறையான பணிச்சூழலாலும் இறந்து போயினர். இந்தக் கொடும் வரலாற்றை மையப்படுத்தியே ரெங்கசாமி நினைவுச்சின்னம் நாவலை எழுதியிருக்கிறார். சிலாங்கூரில் இருக்கும் புரூக்லேன்ஸ் தோட்டத்தில் இருந்து ரயில் கட்டுமானப்பணிக்கு அழைத்துச் செல்லப்படும் 30 தொழிலாளர்கள் கொண்ட குழுவொன்றே நாவலில் முதன்மையாக இடம்பெறுகிறது. அந்தக் குழுவில் உடல் வலிமையும் துணிவும் மிக்க இளைஞனான இடும்பனே நாவலின் நாயகன். அந்த 30 தொழிலாளர்களும் கோலாலம்பூர் ரயில் நிலையத்தில் திறந்த வெளி சரக்கு ரயில் வண்டிகளில் சியாமுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். 15 பேர் மட்...