முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாசிப்பும் செயலும்

 இவ்வாண்டு வாசித்த நூல்களின் பட்டியல் 1.கூளமாதாரி 2. கழிமுகம் 3. கனவுகளைத் துரத்திச் சென்றவனின் கதை 4. சொல்லாததும் உண்மை 5. ஜுவாரா 6. ஹத்திமு ஆயிஷா 7. சலினா 8. ரஞசாவ் செபாஞ்சாங் ஜாலான் 9. மாட் லேலா கீலா 10. செம்மண்ணும் நீலமலர்களும் 11. நினைவுசின்னம் நாவல் 12. குருதிவழி 13. காச்சர் கோச்சர் 14.புத்தம் வீடு 15. கன்னி நாவல் 16. கடல்புரத்தில் 17. ஆகாயத்தாமரை 18.இன்று 19. ஒற்றன் 20. யுத்தங்களுக்கிடையில் 21அசோகமித்திரன் கட்டுரைகள் 22.இலட்சியப்பயணம் 23.`வானம் வசப்படும் 24. கர்ப்ப நிலம் 25. Harimau Jadian 26. அமுதசுரபிகள் 27. அழகான மெளனம் 28.கம்பா நதி 29. குறத்தி முடுக்கு 30. செல்சி நீலம் 31 பிரசாதம் சிறுகதைத் தொகுப்பு 32. அசோகமித்திரன் சிறுகதைகள் 33. கிளி சொன்ன கதை 34. காவியம் 35.கிராமம் நகரம் மாநகரம் 36. ஏறுவெயில்   இவ்வாண்டு தொடக்கத்தில் மாதம் ஒரு மலாய் நாவல் வாசிப்பதென முடிவெடுத்திருந்தேன். வாசிக்க வேண்டிய நாவல்கள், எழுத்தாளர்கள் என மனதுக்குள்ளே சிலவற்றைத் தெரிவு செய்திருந்தேன்.   எல்லாமே முன்னோடி மலாய் எழ...

வல்லினம் விருது விழா 2025 அனுபவம்

  இவ்வாண்டுக்கான வல்லினம் விருதுக்கு மேனாள் தேர்வு வாரிய அதிகாரி பி.எம்.மூர்த்தி தேர்வு செய்யப்படுவது குறித்து எழுத்தாளர் ம.நவீன் என்னிடம் குறிப்பிட்டதும், ஒரு கேள்வி எனக்குள் எழுந்தது. அவர் வகித்த பணியைக் கொண்டுதானே அவர் பல பங்களிப்புகளைச் செய்தார் என்பதைப் போல. விருதுக்கு அவர் தேர்வு பெற்றிருக்கும் செய்தியை அவரிடம் சொல்வதற்கு நவீன் என்னையும் அழைத்திருந்தார். அதுவரையில் வல்லினம் நிகழ்ச்சியில் இரண்டொரு முறை சந்திருந்ததும் நான் அறிந்து வைத்திருந்த செய்திகளைக் கொண்டும் மூர்த்தியை மனதுக்குள்ளாக வரையறை செய்து கொண்டேன். அவர் அறிமுகப்படுத்திய படைப்பிலக்கியப் பிரிவு குறிப்பாக சிறுகதைப் பகுதி வழி ஊக்கம் பெற்ற தலைமுறையைச் சேர்ந்தவன் நான். அவரால் உரமூட்டப்பட்டு மலேசியா முழுவதும் இலக்கியப் பாடத்தை மாணவர்கள் தேர்வு பாடமாக எடுக்க துணை நின்ற ஆசிரியர் படையில் ஒருவரான குமாரி ராதாவின் தூண்டுதலாலே நானும் இலக்கியம் பாடத்தைத் தேர்வு செய்திருந்தேன். நான் எஸ்.பி.எம் தேர்வில் அமரும் ஆண்டுக்கு முன்னர்தான் கல்வி அமைச்சின் பாட வரம்பு நிர்ணயத்தால் அறிவியல் பிரிவு மாணவர்கள் தமிழ் இலக்கியம் பாடம் எடுக்க முடியா...

வறண்ட வாழ்வின் சித்திரங்கள்

  பெருமாள் முருகனின் கூளமாதாரி நாவலை வாசித்தேன். மோட்டாங்காடு எனப்படும் வறண்ட காட்டில் பண்ணைக்காரர்களின் ஆடுகளை மேய்க்கும் (ஆளுக்கார பசங்க) பதின் பருவத்துச் சிறுவர்களின் உலகை நாவல் பேசுகிறது. பண்ணைக்காரர்களின் ஆடுகளை மேய்க்கும் கூளையன், நெடும்பன், வவுறி, செவிடி, மொண்டி ஆகிய ஐந்து சிறுவர்களின் உலகையே நாவல் சித்திரிக்கிறது. ஆண்டுக்கு இவ்வளவு என கூலி பேசப்பட்டுக் கொத்தடிமைகளைப் போலவே சிறுவர்கள் ஆடுகளை மேய்க்கவும் பட்டியைத் தூய்மைப்படுத்தும் வேலையைச் செய்கின்றனர். சாதியால் தாழ்த்தப்பட்ட தெலுங்கு பேசும் அருந்ததியர் சாதியைச் சேர்ந்த சிறுவர்களை நிலவுடைமைச் சாதியினரான கவுண்டர்களின் பட்டிகளில் வேலை செய்கின்றனர். ஆடுகளை மேய்க்கக் கிளம்பும் காலையில் குச்சியால் தூக்குப் போசியைத் தூக்கிக் கைபடாமல் முன்னிரவு மீந்து போன கம்மஞ்சோற்றை வைத்து மீண்டும் குச்சியாலே இடையச் சிறுவர்களுக்குத் தருகின்ற அளவு சாதித் தீண்டாமை இருக்கிறது. சிறுவயதிலே குடும்பத்தை விட்டுப் பிரிந்து பண்ணைக்காரர்களின் கொடும் வசவுகளைத் தாங்கி கொண்டு கொடுமையான வேலையையும் செய்யும் சிறுவர்கள் தங்களுக்கான மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்...

Blues- அனுபவம்

சஞ்சய் பெருமாள் இயக்கத்தில் வந்திருக்கும் மூன்றாவது படமான ப்ளூஸ் (Blues) படத்தைப் பார்த்தேன். மலேசியத் தமிழ்த் திரைப்படச் சூழல் இயங்கும் விதத்தை ஒட்டிய விமர்சனத்தையும் அதன் ஊடே தனக்கான அடையாளத்தைத் தேடிக் கண்டடைய ஒரு இளம் இயக்குநர் படும் அக, புறப் போராட்டங்களைப் பற்றியதாகப் படம் இருக்கிறது. சிவம், சக்தி, சிவசக்தி என மூன்று அத்தியாயங்களாகப் படம் பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்று அத்தியாயங்களின் பகுப்பும் அதன் கதாபாத்திரங்கள் வழி இயக்குநர் முன்வைக்க எண்ணுவது ஒரு தத்துவார்த்தமான இணைப்பை என்பதைப் படம் பார்த்து முடிந்ததும் உணர முடிகிறது. முதல் அத்தியாயமான சிவத்தில் கார்த்திகை மைந்தன் எனும் இளைஞன் இயக்குநராகும் கனவுடன் இருக்கிறான். மலேசியத் தமிழ் தொலைக்காட்சிச் சூழலில் படங்களும் நிகழ்ச்சிகளும் இயக்கும் மூத்த இயக்குநரின் உதவியாளராகப் பணிக்குச் சேர்கிறான். தமிழ்நாட்டுப் படங்களின் சாயலுடன் மெல்லுணர்ச்சியோடு எடுக்கப்படும் படங்களின் மீது அவனுக்கு ஆழமான ஓவ்வாமை இருக்கிறது. ஆனால், தான் இயக்க எண்ணும் படத்துக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறான். இன்னொரு புறத்தில், அவனுடைய காதலியான சுபாவுடனான...