முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலகக் கனவு

 அமெரிக்காவில் ஏப்ரல் 1 மற்றும் 2, 2026 நடந்த வாழும் தமிழ் விழா பற்றிய என் மனப்பதிவை எழுத வேண்டுமென எண்ணியிருந்தேன். அது மனப்பதிவு மட்டுமில்லாமல் குறிப்பாக, பயண அனுபவமாக விரிந்திருக்கிறது. அதனை ஒவ்வொரு பதிவாக இடலாம் என்றிருக்கிறேன். கனவு 1 2022 ஆம் ஆண்டு ஜெயமோகன் மலேசியாவுக்கு வந்திருந்தார். ஜார்ஜ் டவுன் இலக்கியத் திருவிழாவின் சிறப்பு` விருந்தினர்களில் ஒருவராக வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியை ஒட்டி கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் பி.கிருஷ்ணனின் ஷேக்ஸ்பியர் நூல்களின் மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போதுதான், ஜெயமோகனிடம் எழுத்தாளர் ம.நவீன் தமிழினி 2000 போன்ற மாநாட்டை ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற யோசனையைச் சொன்னார். அவர் சொன்னப்போது நானும் உடனிருந்தேன். 2000 ஆம் ஆண்டு காலச்சுவடு இதழ் புத்தாயிரத்தில் தமிழிலக்கியத்தில் செல்திசையை ஒட்டி தமிழினி 2000 எனும் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. அதில் மலேசியாவைப் பிரதிநிதித்துக் கல்வியாளர்களே கலந்து கொண்டனர். அவர்களின் கட்டுரைகளை மாநாட்டு மலரில் கண்ட போது அதன் ‘’கல்வியியல் ஆய்வுக்கட்டுரைத் ...