எழுத்தாளர் ஹம்சா உசேனை எனக்கு அறிமுகம் செய்தது மலாய் எழுத்தாளரும் செம்மையாக்குநருமான அஸ்ரின் பவ்ஸிதான். மலாய் நாவல் உலகில் ஹம்சா தனித்துவமானவர் எனக் குறிப்பிட்டு அவரின் நாவல்களை வாசிக்க அஸிரின் தான் பரிந்துரை செய்தார். எழுத்தாளர் ஹம்சா அப்துல் மஜிட் பின் ஹுசேன் சிங்கப்பூரைச் சேர்ந்த மலாய் எழுத்தாளர். இலக்கிய உலகில் ஹம்சா ஹுசேன் அல்லது பாக் எனும் பெயரிலே அறியப்படுகிறார். https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=11b77927-df80-4e6b-b953-d2240292abd8 ஹம்சா ஹுசேனின் வாழ்க்கைக் குறிப்பு Hamzah Hussein மலாய் இலக்கிய உலகில் மிகப் புகழ்பெற்ற முன்னோடி இலக்கிய இயக்கமான அஸாஸ் 50 (Asas 50) இல் ஹம்சா மிகத் தீவிரமாக இயங்கியிருக்கிறார். அந்த அமைப்பில் கலை கலைக்காகவா அல்லது மக்களுக்ககாவா எனும் விவாதம் எழுந்திருக்கிறது. ஹம்சா கலை கலைக்காகத்தான் எனும் தரப்பை ஆதரித்து அந்த அமைப்பிலிருந்தே வெளியேறியிருக்கிறார். சிங்கப்பூரில் பிரபலமாக இயங்கிய ஷா பிரதர்ஸ் படத் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியிருக்கிறார். பின்னாளில், ...