இவ்வாண்டு தொடக்கத்தில் மாதமொரு மலாய் நாவலை வாசிக்க வேண்டுமென முடிவெடுத்திருந்தேன். மலாய் இலக்கியத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம்தான் அதற்கான உந்துதல். முதலில் எங்கிருந்து தொடங்குவது, யாரிலிருந்து தொடங்குவதென்ற என்ற எந்தத் தெளிவும் இல்லை. இருந்தாலும், சமூகம், நிலம், வாழ்க்கைப் பின்னணி எனத் தெளிவான புறப்பின்னணிகள் கொண்ட நாவல்களைத் தேடி வாசிக்க வேண்டுமெனத் திட்டமிட்டேன். அவ்வாறான நாவல்கள் இயல்பான ஒரு நெருக்கத்தை வாசிப்பில் தருகிறது. அதனால், அந்நிய நிலம், வாழ்க்கையொன்றை வாசிக்கின்றோம் என்ற சோர்வு தட்டுவதில்லை. வாசிப்பிலிருந்து வெளியேறுவதையும் தடுக்கிறது. சில பண்பாட்டுக் குறிப்புகள், பின்னணிகள் குறித்து நூலுக்கு வெளியே வாசிப்பதைத் தவிர வேறு தடங்கல்கள் இல்லாமல் வாசிப்பைத் தொடர முடிகிறது. இம்மாதம் மூன்றாவது நாவலாக தொடக்கக் கால மலாய் இலக்கியத்தின் முதன்மையான எழுத்தாளராக மதிப்பீடப்படுகின்ற இஷாக் ஹாஜி முகம்மதுவின் அனாக் மாட் லேலா கிலா (பைத்தியக்கார மாட் லேலாவின் பிள்ளை) எனும் நாவலை வாசித்தேன். இஷாக் ஹாஜி முகம்மது மலாய் இலக்கிய உலகில் பாக் சாக்கோ எனும் புனைபெயரில் பரவலாக அறியப...
வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவலை வாசித்தேன். மணப்பாடு கடற்கரையை ஒட்டி வாழும் மீனவர்களின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டிருந்தது. சிறிய தீற்றல்களால் ஒரு சித்திரத்தைத் தத்ரூபமாகக் கொண்டு வருவதைப் போல தெற்காகப் பறந்து செல்லும் கடற்காகங்கள், கரையை மோதம் ஓயாத அலைகளின் இரைச்சல், காற்றுக்கு ஆடும் தென்னங்கீற்றுகள் என நுணுக்கமான கடற்கரைப் பின்னணிச் சித்திரிப்புகளால் வன்மம் துரோகம் காமம் துயர் தவிப்பும் மனச்சஞ்சலங்களாலும் ஆன கடற்கரை மக்களின் வாழ்வை வண்ணநிலவன் எழுதியிருக்கிறார். மீனவர்களுக்குள் நிகழும் எல்லா சம்பவங்களிலும் தானும் பங்கெடுத்துத் துயருற்றும் மகிழ்ந்தும் வரும் பவுல் கிழவர், தன் சேகரத்தில் உள்ள பொருட்களைக் கணம் தவறாமல் திறந்து பார்க்கும் சிறுமியைப் போல வீட்டுக்கு முன்னிருக்கும் மனிதர்களையும் கடலையும் பார்வை குன்றிய கண்களால் அளைந்து கொண்டிருக்கும் பெரிய மாமி எனப் பாத்திரங்களும் நாவலை உயிர்ப்புடையதாக்குகிறது. பல தலைமுறைகளாக மரங்களால் ஆன வள்ளங்களில் மீன்பிடித்து வந்த கடல்பகுதியில் மோட்டார் பொருத்திய லோஞ்சுகள் அறிமுகமாகின்றன. கடல் அலைகளின் சுழிகளுக்கேற்ப துடுப்பிட்டு காற்...