முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வரலாற்றில் பதிவாகும் அகமொழி

மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை எனும் நூலின் வாயிலாகத்தான் வரலாற்றுத் தொகுப்பாளரான மா. ஜானகிராமனை அறிந்து கொண்டேன். கல்லூரி நூலகத்தில் இருந்த அந்த நூலை ஒரிரு நாட்களிலே வாசித்து முடித்தேன். ஐந்நூறுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட நூலில் ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களையும் கள ஆய்வின் வழி கண்ட தரவுகளையும் திரட்டி மலேசிய இந்தியர்களின் நூற்றாண்டு கால வரலாற்றை ஜானகிராமன் உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்திருந்தார். மலேசிய இந்தியர்கள் அதிகாரத்தரப்பால் வஞ்சிக்கப்பட்டனர் என்பது பலரும் பேச்சுவாக்கில் சொல்வதுதான். அதற்குச் சான்றாக சில ஆவணங்களையும் காட்டமுடியும். ஆனால், ஜானகிராமனின் தனித்துவமென்பது ஒரு சாமானியனின் பின்புலத்திலிருந்து அந்த ஆவணங்களையும் தரவுகளையும் அணுகியதே எனலாம்.                                                   ஜானகிராமனின் புதிய நூல் பின்னர், 2022 ஆம் ஆண்டு வல்லினம் விருது அவருக்கு வழங்கப்பட்டப்போது அவரை நேர்காணல் செய்யவும் ஆவணப்படத்தை இயக்குகின்ற வா...