முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நினைவில் வாழும் பிம்பம்

"எனக்கு தெரிந்த அர்ச்சகர் ஒருவர் இருந்தார்.   என்னை மனிதன் ஆக்கியவர் அவர்தான்…. தமிழ்நாட்டுக்காரர்… என்பது வயது இருக்கும்"  எனச் சொல்லி முடித்த கணமே தோள்பட்டையுடன் உடலைச் சற்றே உயர்த்திக் காட்டி  "நல்ல தாட்டிகம்… அவர் பெயர் சிங்காரவேலு பழனிவேலு…." எனப் பெரியப்பா எந்தக் கதையை எங்கிருந்து தொடங்கினாலும் எனக்கு அவருடைய அடுத்த பேச்சு தொடங்கி உடல் அசைவுகள், குரல் மாற்றம் என எல்லாவற்றையும் முன்கூட்டியே சொல்லிவிடமுடியும். அந்தளவுக்கு அவருடன் உரையாடியிருக்கிறேன். அப்படி அவர் சித்திரித்த சம்பவங்கள், மனிதர்கள்தான் அவர் மறைந்து போய் 16 நாட்களான பின்பும் மனதுக்குள் படமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. சட்டென எண்ணும்போது ஒருவிதமான ஆசுவாசத்துடன் கூடிய சோகம்தான் எழுகிறது. அவருடனான நீண்ட உரையாடல்கள்தான் நினைவுக்கு வருகின்றன. எந்தக் குடும்ப நிகழ்ச்சியாக இருந்தாலும் மூலையில் நாங்கள் இருவர் மட்டும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். வள்ளலார் தொடங்கி காந்தி, சந்திரபோஸ், நேரு இப்படித்தான் என் வயதுக்கும் பக்குவத்துக்கும் மீறிய அரசியல், ஆன்மீக ஆளுமைகளைப் பற்றி இருவரும் பேசிக்கொண்டிருப்போம். ...