முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அனுபவங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாசிப்பும் செயலும்

 இவ்வாண்டு வாசித்த நூல்களின் பட்டியல் 1.கூளமாதாரி 2. கழிமுகம் 3. கனவுகளைத் துரத்திச் சென்றவனின் கதை 4. சொல்லாததும் உண்மை 5. ஜுவாரா 6. ஹத்திமு ஆயிஷா 7. சலினா 8. ரஞசாவ் செபாஞ்சாங் ஜாலான் 9. மாட் லேலா கீலா 10. செம்மண்ணும் நீலமலர்களும் 11. நினைவுசின்னம் நாவல் 12. குருதிவழி 13. காச்சர் கோச்சர் 14.புத்தம் வீடு 15. கன்னி நாவல் 16. கடல்புரத்தில் 17. ஆகாயத்தாமரை 18.இன்று 19. ஒற்றன் 20. யுத்தங்களுக்கிடையில் 21அசோகமித்திரன் கட்டுரைகள் 22.இலட்சியப்பயணம் 23.`வானம் வசப்படும் 24. கர்ப்ப நிலம் 25. Harimau Jadian 26. அமுதசுரபிகள் 27. அழகான மெளனம் 28.கம்பா நதி 29. குறத்தி முடுக்கு 30. செல்சி நீலம் 31 பிரசாதம் சிறுகதைத் தொகுப்பு 32. அசோகமித்திரன் சிறுகதைகள் 33. கிளி சொன்ன கதை 34. காவியம் 35.கிராமம் நகரம் மாநகரம் 36. ஏறுவெயில்   இவ்வாண்டு தொடக்கத்தில் மாதம் ஒரு மலாய் நாவல் வாசிப்பதென முடிவெடுத்திருந்தேன். வாசிக்க வேண்டிய நாவல்கள், எழுத்தாளர்கள் என மனதுக்குள்ளே சிலவற்றைத் தெரிவு செய்திருந்தேன்.   எல்லாமே முன்னோடி மலாய் எழ...
 சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி பிறந்தநாள் விழா - 25 ஜனவரி 2025 சுவாமிபிரம்மானந்த சரஸ்வதிக்கு 70 வயது பிறந்தநாள் விழா அவரின் நண்பர்களாலும் மாணவர்களாலும் ஒருங்கிணைக்கப்படுகிறதென்று தெரிந்ததுமே அதில் கலந்து கொள்ளலாமென முடிவெடுத்தேன். எழுத்தாளர் ம.நவீனும் அழைத்துக் கேட்க உடனே வருகிறேன் எனச் சொல்லி விட்டேன்.   சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி அவர்களின் தனிப்பட்ட ஆளுமையை நான் அறிந்திருக்கவில்லை. ஆசிரியர்க் கல்விக் கழகத்தில் பயிலும் போது விரிவுரைஞர் தமிழ்மாறன் ஆசிரமத்தில் ஏற்பாடு செய்யும் பாரதி விழாக்களின் போது சுவாமியைச் சந்திப்பேன். அதைச் சந்திப்பு எனச் சொல்வதை விட அணுக்கத்திலிருந்து எந்த அறிமுகமும் இல்லாமல் கொஞ்சம் அகல நின்று பார்ப்பதாகத்தான் சொல்ல வேண்டும். நானும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவில் இருந்ததால், தொடக்கம் முதல் முடிவு வரை நிகழ்ச்சி ஏற்பாட்டுப் பணிகளில் சுவாமியும் இணைந்திருப்பதைக் கண்டிருக்கிறேன். ஆசிரமத்தில் தங்கியிருந்த மாணவர்களிடம் மண்டபத்தில் நாற்காலிகளை அடுக்கச் சொல்வது தொடங்கி அன்னதான மண்டபத்தில் உணவுத் தயாராவது, பரிமாறுவது என எல்லா வேலைகளையும் சுவாமி உடனிருந்து கவனித்துக...

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே...
விஷ்ணுபுரம் விருதுவிழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகப் பங்கேற்றுப் பேச முடியுமா என எழுத்தாளர் ஜெயமோகனிடமிருந்து செய்தி வந்த நாளிலிருந்து அதைப்பற்றியே எண்ணிக் கொண்டிருந்தேன். டிசம்பர் 15 இரவு சென்னையில் தரையிறங்கி கோவைக்கு 12 மணி நேரம் கார்பயணத்திலே விழாவுக்கான முன்னோட்டம் தொடங்கியிருந்தது. எழுத்தாளர் பிரவின் குமார் (பி.கு) எழுத்தாளர் இளம்பரிதி (வழி இணைய இதழின் ஆசிரியர்) என்னையும் எழுத்தாளர் நவீனையும் அழைத்துக் கொண்டு சென்றார்கள். வழிநெடுக இலக்கிய அரட்டையாடல் உறக்கம், விழிப்பு எனத் தொடர்ந்து கொண்டே சென்றது. எதிலும் பங்குபெறாமல் விஷ்ணுபுரம் அமர்வைப் பற்றியே எண்ணம் சுற்றிக் கொண்டிருந்தது. எனக்கு கிடைத்த அமர்வு எல்லா வகையிலும் சமகால மலேசிய தமிழ் இலக்கியத்துக்கும் மற்ற மலேசிய படைப்பாளிகளுக்கும் சேர்த்துக் கிடைத்த அமர்வென்ற எண்ணம் தொடக்கம் முதலே இருந்தது. விஷ்ணுபுரம் விருது விழா    பத்தாண்டுகளுக்கு முன்னர் ஜெயமோகனின் இணையத்தளத்தை வாசிக்கத் தொடங்கியப்போது, விஷ்ணுபுரம் விருதுவிழாவில் பங்கேற்றவர்களின் கடிதங்களை வாசித்து என்றாவது ஒருநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராகக் கலந்து ...