முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

போயாக் சிறுகதைத் தொகுப்பு கதைகளின் வாசிப்பனுபவங்கள்

  போயாக் சிறுகதைத் தொகுப்பு கதைகளின் வாசிப்பனுபவங்கள் பழங்குடிச் சமூகத்தின் ஒழுங்குகளைப் பேணும் ஈபான் சமூகத்தில் நாகரீக அடையாளத்துடன் வரும் ஆசிரியரின் பாலியல் தடுமாற்றத்தையும் பழங்குடி அறத்தையுமே போயாக் சிறுகதையில் காண முடிகிறது. விநோதமான மாந்தீரிகச் சடங்குகள், தாய்வழிச் சமூகம் என்பதால் பெண்களைப் பிற இனத்தவர்களுக்குத் திருமணம் புரிந்து வைப்பதைத் தடுக்கின்றனர். இதைப் போன்ற தகவல்களைத் தாண்டி சிறுகதையில் மிகவும் கவர்ந்தவை முதலைக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் ஒப்பந்தம். ஒருவகையில் மனிதன் முதலையைத் தின்றும் மீண்டும் முதலை மனிதனையும் தின்றும் இயற்கையான அறமொன்றை நிலைநாட்டிக் கொள்கின்றனர். ஒருவேளை இவற்றை மதம் தீண்டுகிற போது அவை சடங்குகளாக, புனிதமாகக் கட்டமைக்கப்படும். புனிதமாகக் கட்டமைக்கப்படுபவற்றை மீறும் சுதந்திரத்தைக் குற்றவுணர்ச்சி மூலம் மனிதன் பெற்றுக் கொள்ளலாம். கதைசொல்லியும் பாலியல் மீறல் செய்து வெளியேற பார்க்கிறான். அவனே முதலையாக மாறி ஒப்பந்தத்தை மீறுகிறான். படகில் செல்லும் போது பிரதி மாற்றம் செய்யப்பட்டவனாய், அறமொன்றின் முன்னாலான தவிப்புடன் நிற்கிறான். மூன்று தலைமுறை ஆண்களி...
    அஷேரா நாவல் வாசிப்பனுபவம் சயந்தனின் அஷேரா நாவலை வாசித்தேன். ஈழப்போருக்குப் பிந்தைய போராளிகளின் மனநிலையை ஒட்டிய நாவலாக அமைந்திருக்கிறது. வளரிளம் பருவத்திலே போராளி குழுக்களில் பங்கேற்பவர்கள் வாழ்வின் ஒரு பகுதியைப் போரின் உக்கிரத்தையும் உயிரச்சத்துடனே எதிர்கொள்கின்றனர். போர் விழுமியங்களான தியாகம், இலட்சியம் ஆகியவையை அச்சங்கொள்ளச் செய்கின்ற தண்டனைகளின் வாயிலாகவும் இயக்க நடவடிக்கைகளாக முன்வைக்கப்படுகிறது. இந்தச் சூழலில், இயல்பாக மனத்தில் எழுகின்ற காதல், சாவச்சம் ஆகியவை தறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதிலிருந்து தப்பித்து வெளியேறுகிற முன்னாள் போராளிகள் இருவரை மையமிட்டே நாவல் அமைகிறது. சுவிர்சுலாந்தின் மொர்கார்தென் அகதிகள் முகாமிலிருந்து நாவல் தொடங்குகிறது. மெர்கார்தென் குன்றின் அருகில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் சுவிஸைக் கைபற்ற ஆஸ்திரிய நாட்டு இளவரசன் தலைமையில் படையெடுப்பு அங்கு நடைபெறுகிறது. அதனைச் சுவிஸ் நாட்டு தளபதி முறியடிக்கிறான். அந்த உக்கிரமான போரிலிருந்து தப்ப ஆஸ்திரிய நாட்டு வீரர்கள் அங்கிருக்கின்ற ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த முகாமி...
  தண்ணீர் நாவல் வாசிப்பனுபவம் அசோகமித்திரனின் தண்ணீர் நாவலை சில ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்தப்போது தண்ணீர் சிக்கலைப் பற்றிய நாவலாகவே எண்ணினேன். பித்தளைத் தவலையொன்றின் அடியில் வண்டலாகப் படிந்திருக்கும் துருவேறிய கலங்கிய நீரை நினைவுக்குக் கொண்டு வருகிறது. ஆனால், இப்பொழுது அந்த நாவலை மீள்வாசிப்பு செய்கின்ற போது துருவேரிய நீர், கோடைக்காலத்துத் தூறல், பெருமழை, சாக்கடை நீர் எனத் தண்ணீரின் வண்ண மாற்றத்தையும் எல்லாவற்றிலும் தன்னை இருத்திக் கொள்கிற நீரின் தன்மையையும் ஒருங்கே கண்முன்னால் கொண்டு வருகிறது. சென்னை போன்ற பெருநகரொன்றின் ஒண்டு குடித்தனத்தில் தன் தங்கையுடன் ஜமுனா வாடகைக்கு இருக்கிறாள். சினிமாவில் நடிக்கும் ஆசையினால் பாஸ்கர் ராவ் எனும் படத்தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிபவனிடம் சேர்ந்து தயாரிப்பாளர்களையும் வினியோகஸ்தர்களையும் சந்தித்து வருகிறாள். அவ்வாறான சந்திப்பில், அவர்களை மகிழ்விக்க பாலியல் சார்ந்த கேளிக்கைகளுக்கு இணங்குகிறாள். பாஸ்கர் ராவினால் ஜமுனா ஏமாற்றப்படுவதாகவே சாயா எண்ணுகிறாள். அலுவலகம் ஒன்றில் வேலை செய்கிறாள். அவளது கணவன் ராணுவத்தில் வேலை செய்கிறான்.   எப்பொழுதும்...
  இமயத்தியாகம் நாவல் வாசிப்பனுபவம்   எழுத்தாளர் அ.ரெங்கசாமி எழுதிய இமயத்தியாகம் நாவலை வாசித்தேன். என்னுடைய வளரிளம் பருவத்தில் ஜப்பானியர் ஆட்சிக்காலக் கொடுமைகளை வயது முதிர்ந்த பாட்டிகள் சில சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். விநோதமான தண்டனைகள், புரியாத ஒரிரு ஜப்பானிய சொற்கள், பஞ்சக்கால உணவு வகைகள், ஜப்பானியரின் உடைகள், பெரிய வாள்கள் ஆகியவற்றைச் சிறுவர்களுக்கே உரிய வியப்புடன் சொல்ல கேட்டிருக்கிறேன். பள்ளிப்பாட வரலாறு என்பதும் ஜப்பானியாராட்சியை இருண்ட காலக்கட்டமாகவே வகைப்படுத்துகிறது.     இந்த வரலாற்றை முப்பரிமாண அனுபவமாக இமயத்தியாகம் அளித்தது. ஜப்பானியர்கள் மலாயாவைக் கைபற்றுவதில் இருந்து நாவல் தொடங்குகிறது. மலாயா நிலப்பரப்பை முழுவதும் அங்குலம் அங்குலமாய் அளந்ததைப் போன்ற துல்லிய அறிவும், பிரிட்டன் படைகளின் பலத்தையும் வேவுபார்த்து முழுவதுமாய் அறிந்து வைத்திருக்கின்றனர். பாங்காக்கில் செயல்பட்டு வரும் இந்திய சுதந்திரச் சங்கத்துடனும் தொடர்புகளை ஏற்படுத்தித் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். அதன் நீட்சியாகவே, ராஷ் பிகாரி போஸ் தொடங்கிய ஐ.என்.ஏ எனப்படும் இந்திய தேசிய ராண...
  தீம்புனல் நாவல் வாசிப்பனுபவம் எழுத்தாளர் கார்ல் மார்க்ஸின் தீம்புனல் நாவலை வாசித்து முடித்தேன். அதையொட்டி முன்னரே எழுத்தாளர் ஜெயமோகனின் உரையொன்றை யூடியுபில் கேட்டிருக்கிறேன். கார்ல் மார்க்ஸ் என்ற பெயரும் தீம்புனலும் கம்யூனிசச் சித்தாந்ததை ஒட்டிய நாவலாக இருக்கும் என்ற அனுமானத்தைக் கொடுத்திருந்தது. ஆனால், இந்த நாவல் நிலவுடைமை பின்புலம் கொண்ட விவசாயக் குடும்பம் ஒன்றின் வீழ்ச்சியையொட்டிச் சமகால தமிழ்வாழ்வின் போக்கைப் பற்றியதாகவே இருந்தது. முன்னமே தமிழில் விவசயக் குடும்பங்களின் வீழ்ச்சியை முன்வைத்திருக்கும் சு.வேணுகோபால், இமயம் போன்ற படைப்பாளிகளின் புனைவுகளையும் நினைவுப்படுத்துவதாக இருந்தது. அந்தப் புனைவுகளிலிருந்து கார்ல் மார்க்ஸின் நாவல் வேறுபடும் அல்லது புதியதாகத் தொட்டுக் காட்டும் இடத்தையே இந்நாவலில் தொடக்கம் முதலே தேடினேன். அந்த விவசாய வாழ்விலும் எழுந்துவரும் சித்திரிப்புகளும் அனுபவங்களுமாகவே இருந்தன. முன்னரே, தெரிந்த வாழ்வு என்றாலும் அதனுள் அமைந்திருக்கும் மனித உறவுகளின் சிடுக்குகள், சமூகக்கட்டமைப்பின் மாற்றங்களால் துலங்கிவரும் வாழ்வின் தரிசனம் நிச்சயம் மற்ற நாவல்களிலிருந்து வ...
 வாடிவாசல் நாவல் வாசிப்பனுபவம் சி. சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவல் ஒரு நிறைவான சிறுகதையை வாசித்த உணர்வை அளித்தது. மாட்டுக்கு ரோசம் வந்தாலும் ஆகாது மனிதனுக்கு ரோசம் வந்தாலும் ஆகாது என்கிற நாவலின் இறுதி வரி இந்நாவலின் ஒட்டுமொத்த வாசிப்பனுபவத்தின் தரிசனமாக இருக்கிறது. தன் தந்தையைக் குத்திக் கிழித்த மாட்டை அடக்குவதற்காக பிச்சி எனும் இளைஞன் செல்லாயி ஜல்லிகட்டுக்கு வருகிறான். அந்தக் காளை ஜமினின் பெருமைக்குரிய சின்னமாகவும் இருக்கிறது. இன்னொருவகையில் நிலப்பிரபு ஒருவரின் செல்வாக்கு, செல்வம் ஆகியவற்றின் வடிவாகவே அதன் திமிறல், பேரூரு இருக்கிறது என ஊகிக்கலாம். அந்த மாட்டை அடக்கும் சாகசத்தின் சித்தரிப்புகளாகவே நாவல் விரிகிறது. வாடிவாசலில் நின்று கண்முன்னே ஜல்லிக்கட்டைப் பார்க்கும் உணர்வை இந்நாவலின் சித்தரிப்பின் வாயிலாக சி.சு.செல்லப்பா அளிக்கிறார். நாவலின் பிச்சியின் நண்பனாக வரும் மருதன், ஊர் கிழவரின் பாத்திரம் நன்றாக அமைந்திருந்தது. ஊர் கிழவன் ஒவ்வொரு மாட்டையிம் பற்றிக் குறிப்பிடும் நுட்பங்கள், அவன் தந்தையைப் பற்றியும் மாடணைவது பற்றிச் சொல்லும் குறிப்புகளும் போர்ச்சூழலில் இருக்கும் வீரனுக்கு ...
 மணற்கடிகை நாவல் வாசிப்பனுபவம் ஏதேனும் இரைச்சல் அல்லது தொடர் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தால் எனக்குத் தூக்கம் நன்கு வரும். உறக்கமற்ற இரவுகளில் நிசப்தபே பெரும் அச்சமாகச் சூழ்ந்து கொள்ளும். சூழ இருக்கும் நிசபத்தின் பேரிரைச்சலைக் களைய ஏதேனும் ஒலியைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். மணற்கடிகை நாவலை வாசித்து முடிக்கும் வரை ஓயாத சிறு இரைச்சலொன்று ஒலித்துக் கொண்டிருந்ததாகவே இருந்தது. குறுக்கும் நெடுக்குமாகப் பின்னிச் செல்கிற தறிச்சத்தமாகவும் இயந்திரங்களின் கலவையொலிகளாகவும் இருந்தன. திருப்பூர் எனும் இந்தியாவின் மாபெரும் தொழிற்நகரொன்றின் பாரம்பரியத் தொழிற்முறையிலிருந்து நவீனத் தொழில் உலகுக்குள் செல்லும் காலக்கட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு நாவல் எழுந்திருக்கிறது. சிறு வயதில் நகரங்களைப் பார்க்கும் போது வியப்பில் ஆழ்த்துவது அதன் ஒழுங்கும் பிரம்மாண்டமும்தான். கார்கள் ஓயாமல் எதையோ நோக்கி விரைவதும், கட்டிடங்கள் உயர்ந்து செறிவாக, சாலைகள் மேல் கீழாக இருப்பது பயத்தையும் வியப்பையும் ஆழ்த்தும். அதே நகரில் வந்து இருக்கும் போது அதன் பிரம்மாண்டங்கள், ஒழுங்குக்குள் அமைகிற வாழ்வு குறித்த விசாரமே இந்நாவலை எல்லா ...