முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

குள்ளச்சித்தன் சரித்திரம்

11 ஜூன் 2022 அன்று வல்லினம் ஏற்பாட்டில் நிகழ்ந்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் படைப்புலக அரங்கில் குள்ளச்சித்தன் சரித்திரம் நாவலை ஒட்டி ஆற்றப்பட்ட உரை.   குள்ளச்சித்தன் சரித்திரம்-வாசிப்புப் பார்வை அறிமுகம் புதுமைப்பித்தனின் காஞ்சனை சிறுகதையில் எழுத்தாளர் ஒருவர் அன்றாட வாழ்வின் சலிப்புச் சுழலுக்குள்   வாழ்வார். எழுத்தின் வாயிலாக அவர் கற்பனையிலும் அறிதலிலும் சென்று தொடக் கூடிய தூரங்களுக்கு மாறாக நிகர் வாழ்க்கையில் அன்றாடத்தின், யதார்த்ததின் சலிப்புக்குள் சிக்கியிருப்பார். மனித வித்து அநாதி காலந்தொட்டு இன்று வரையில் நினைத்துநினைத்துத் தேய்ந்து தடமாகிவிட்டன்பாதையில்தான் இந்தக் கட்டை வண்டி செல்கிறது. அதிலும் மனசை, கயிற்றை முதுகில் போட்டுவிட்டுத் தானே போகும்படி விட்டுவிடுவது என்றால், இந்த விபத்துகளையெல்லாம் பொருட்படுத்தலாமா   நவீன வாழ்வின் சிக்கலும் கூட. அந்தச் சலிப்புச் சுழலிருந்து விடுபட புனைவுக்கும் வாழ்வுக்குமான கோட்டை அழித்துப் பார்க்கும் மாற்று அனுபவமே கதையாக அமைந்திருக்கும். அவருடைய வீட்டுக்குப் பிச்சைக்காரியாக வரும் பெண்ணை வீட்டு வேலைக்காரியாக மனைவி அமர்த்...

மஹாத்மன் சிறுகதைகள்

 மஹாத்மன் சிறுகதைகள் வாசிப்பனுபவம் தமிழ் விக்கி பக்கத்தில் மலேசிய எழுத்தாளர்கள் சிலரைக் குறித்த பதிவை உருவாக்கும் போது எழுத்தாளர் மஹாத்மனைக் குறித்துத் தரவுகளை இணையத்தில் தேடினேன். ஒரு நேர்காணல், சிறுகதைத் தொகுப்பு மீதான விமர்சனக் கட்டுரை என மிகச் சொற்பமானத் தகவல்களே இருந்தன. அவரின் ஒ லாவே கதை மட்டும்தான் கதையாக இருந்ததாக சிங்கப்பூர் எழுத்தாளர் இளங்கோ தன்னிடம் சொன்னதாக நேர்ப்பேச்சில் சிரித்துக் கொண்டே சொன்னது நினைவுக்கு வந்தது. அவரது சிறுகதைத் தொகுப்பை எடுத்து வாசித்தேன். அவர் வெளியீட்டிருக்கும் ஒரே நூலும் அதுதான் நினைக்கிறேன். தொகுப்பில் இருந்த 8 கதைகளையும் வாசித்த பின்னர், நேரடி வாழ்வில் பெற்ற அனுபவங்களும், சொல்ல கேட்ட கதைகளும் எப்பொழுது கதையாக உருமாறுகின்றன என்ற கேள்வியும் உடன் எழுந்தது. மஹாத்மன் எழுதிய கதைகள் யாவும் நேரடியான அனுபவப்பதிவிலிருந்தும் கண்டும் கேட்ட கதைகளிலிருந்தும் அமைந்தவை. இதைத் தன்னுடைய நேர்காணலிலும் குறிப்பிடுகிறார். அதைப் போல ஒவ்வொரு கதையும் நான் எனத் தன்னிலையில் தொடங்கி ஒற்றை மனிதனின் அகச் சிக்கல்களை ஒட்டியே அமைகிறது. மஹாத்மன் முன்வைக்கும் பாத்திரம் எல்லா க...

பனி உருகுவதில்லை வாசிப்பனுபவம்

எழுதத் தொடங்கும் எழுத்தாளர்கள் நன்கு பழகிய வாழ்வனுபவம், சந்தித்த மனிதர்கள், பழகிய சூழல் ஆகியவற்றையே தங்கள் எழுத்துக்கான மூலப்பொருளாக்குவார்கள். அவ்வாறான பதிவுகளில் நினைவேக்கம் என்பதும் தவிர்க்க முடியாததாக இருக்கும். தான் பெற்ற அறிவனுபவத்தைக் கொண்டு இன்னொரு காலத்தை எழுத்தில் கொண்டு வரும் போது அந்தக் காலக்கட்டத்தின் மீது மெல்லிய ரொமான்டிசிசைஸ் தன்மை எழுந்துவிடுகிறது. அவ்வாறாக இன்னொரு காலக்கட்டத்தின் மேம்பட்ட பக்கங்களைக் காட்ட வேண்டாமென்பதில்லை. ஆனால், அவை அனுபவச் சித்திரிப்பில் தன்னிகழ்வாக எழ வேண்டும். நீண்டகாலத்திற்குப் பின் எழுத்தாளர் அருண்மொழிநங்கை வலைப்பூவில் எழுதத்தொடங்கிய அனுபவப்பதிவுகளும் அவரின் பால்யக்காலம் தொட்டு அமைந்த நிகழ்வுகள், பழகிய மனிதர்களால் ஆனதாகவே இருந்தது. ஆனாலும், ஒவ்வொரு அனுபவப்பதிவும் துருதுருப்பான இளஞ்சிறுமி ஒருத்தியின் அகம் புறச்சூழலைப் பரவசத்துடன் எதிர்கொண்டு பரிணமிப்பதன் அனுபவத்தை அளித்தது. அவரின் விரிவான இலக்கிய வாசிப்பும் வாழ்க்கை அவதானிப்புமே இதைச் சாத்தியமாக்கியிருக்கிறது. அவ்வாறாக, வலைப்பதிவில் வெளிவந்த கட்டுரைகளில் அவரின் வாழ்வனுபவத்தையே முதன்ம...

செல்காலமும் அல்காலமும்

ஜெயமோகன். எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட எழுத்தாளர்களாலும் விமர்சகர்களாலும் தமிழின் தலைச்சிறந்த நாவல்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்ட ப.சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி எனும் நாவலை வாசித்தேன். இரண்டாம் உலகப்போரின் தொடக்கம் முதல் இறுதி வரையிலான காலக்கட்டத்தில் தென்கிழக்காசியப் பகுதிகளிலிருந்த சூழலைப் பின்னணியாகக் கொண்டு பாண்டியன் எனும் இளைஞனின் மனவோட்டத்தையும் சாகசச்செயல்களையும் நாவல் சித்தரித்துச் செல்கிறது. பாண்டியனின் சாகசச்செயல்களை மட்டுமே கருத்தில்கொண்டால் ஒரு அதிநாயகனின் நாவலாகக் கூடத் தோன்றக்கூடும். ஆனால், ஒவ்வொரு செயலாற்றும் போதும் உள்ளூர கொள்ளும் சலிப்பின் காரணமாய் நிலையற்று நகர்ந்து கொண்டே இருக்கும் இளைஞனின் கொந்தளிப்பான அகத்துடனான பயணமாக இந்நாவல் அமைந்திருந்தது. ஒவ்வொரு செயலுக்கான பயணத்தின் போதும் மனத்தில் தோன்றுகின்ற பால்யக்கால நினைவெழுச்சி, அறிவு, அனுபவம் ஆகியவற்றால் அடையும் உள்ளூணர்வின் குழப்பங்கள், செயலின் பொருளின்மையால் உண்டாகும் சலிப்பு, உறவு, வணிகம், கேளிக்கை என உலகியல் இன்பங்கள், கடமைகள் அத்தனையும் தாண்டும் போ...
  பேயின் கதை   இவ்வாண்டு வாசித்த நூல்களில் மிகவும் சுவாரசியமும் தாக்கத்தையும் ஏற்படுத்திய நூலாக Pai Naa எனும் நூலைக் குறிப்பிடவேண்டும். பொதுவாகவே, ஆங்கிலத்தில் வாசிக்கச் சிரமம் இருப்பதால் கொஞ்ச நாட்கள் எடுத்து நிதானமாகவே வாசித்து முடித்தேன். 1940 களில் ஜப்பானியப் படையெடுப்பின் போது சுங்கை லெம்பிங் எனும் ஈயவளம் மிகுந்த சிற்றூரில் காட்டில் தப்பித்து வாழ்ந்த நோனா பேக்கர் எனும் வெள்ளைக்காரப் பெண்ணின் வாழ்வனுபவம்தான் இந்நூல். என்னுடைய வீடு அமைந்திருக்கும் குவாந்தான் நகரிலிருந்து சில பத்து கிலோமீட்டர் தூரத்தில்தான் சுங்கை லெம்பிங் இருக்கிறதென்பது நூலின் ஆங்கிலத்தைக் கடந்து வாசிக்கச் செய்வதாக இருந்தது. அதிலும், பள்ளியிலும் குடும்பத்துடனும் அந்நகரத்துக்குச் செல்லும் போதெல்லாம் தவறாமல் செல்லும் ஈய அருங்காட்சியகம்தான் நோனா பேக்கரின் வீடாக இருந்தது என்பதும் கூடுதல் ஆர்வத்தை எழுப்பியது. அங்கு ஈயம் எடுக்கப்பட்டதற்கான எஞ்சிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் அருங்காட்சியகத்தில் ஈய வரலாற்றுடன் வெள்ளை இனப் பெண்ணொருத்தியின் உருவம் தெரிந்திருப்பதாகவும் தட்டச்சு இயந்திரச் சத்தம் கேட்பதாகவும் வாய்மொ...

போயாக் சிறுகதைத் தொகுப்பு கதைகளின் வாசிப்பனுபவங்கள்

  போயாக் சிறுகதைத் தொகுப்பு கதைகளின் வாசிப்பனுபவங்கள் பழங்குடிச் சமூகத்தின் ஒழுங்குகளைப் பேணும் ஈபான் சமூகத்தில் நாகரீக அடையாளத்துடன் வரும் ஆசிரியரின் பாலியல் தடுமாற்றத்தையும் பழங்குடி அறத்தையுமே போயாக் சிறுகதையில் காண முடிகிறது. விநோதமான மாந்தீரிகச் சடங்குகள், தாய்வழிச் சமூகம் என்பதால் பெண்களைப் பிற இனத்தவர்களுக்குத் திருமணம் புரிந்து வைப்பதைத் தடுக்கின்றனர். இதைப் போன்ற தகவல்களைத் தாண்டி சிறுகதையில் மிகவும் கவர்ந்தவை முதலைக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் ஒப்பந்தம். ஒருவகையில் மனிதன் முதலையைத் தின்றும் மீண்டும் முதலை மனிதனையும் தின்றும் இயற்கையான அறமொன்றை நிலைநாட்டிக் கொள்கின்றனர். ஒருவேளை இவற்றை மதம் தீண்டுகிற போது அவை சடங்குகளாக, புனிதமாகக் கட்டமைக்கப்படும். புனிதமாகக் கட்டமைக்கப்படுபவற்றை மீறும் சுதந்திரத்தைக் குற்றவுணர்ச்சி மூலம் மனிதன் பெற்றுக் கொள்ளலாம். கதைசொல்லியும் பாலியல் மீறல் செய்து வெளியேற பார்க்கிறான். அவனே முதலையாக மாறி ஒப்பந்தத்தை மீறுகிறான். படகில் செல்லும் போது பிரதி மாற்றம் செய்யப்பட்டவனாய், அறமொன்றின் முன்னாலான தவிப்புடன் நிற்கிறான். மூன்று தலைமுறை ஆண்களி...