முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

எம்.ஏ.இளஞ்செல்வன் கதைகள்- வாசிப்பனுபவம்

  எழுத்தாளர் எம்.ஏ.இளஞ்செல்வன் முந்தைய தலைமுறை மலேசியப்படைப்பாளிகளில் நன்கு அறியப்பட்டவர். அவருடைய சிறுகதைகள் தொகுப்பை வாசித்தேன். அவர் எழுதிய அனைத்துச் சிறுகதைகளையும் உள்ளடக்கி 1999 ஆண்டு பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. சிறுகதைகள் அனைத்தும் காலவரிசைப்படி இல்லாது முன்பின்னாகவே அச்சிடப்பட்டிருக்கிறது. இளஞ்செல்வனின் தெருப்புழுதி எனும் கதை ஆசிரியர் பயிற்சிக்கழகத்தின் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்ததால் அதை வாசித்திருக்கிறேன். அந்தக் கதையில் கூட சீண்டல் தன்மைதான் பிரதானமான இருக்கும். ஒரு மோசமான சூழலைச் சித்திரித்து அதிலிருந்து மீண்டெழும் சீண்டல் வார்த்தைகள் இருக்கும். அதனால் சீண்டப்பட்டு மனம் மாறும் தருணமொன்றுதான் கதையின் மையமாக இருக்கும். அவரை மலேசிய ஜெயகாந்தன் என்றழைப்பதையும் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், அவருடைய கதைகள் ஒழுக்கவாத, முற்போக்கு கருத்துகள் கொண்ட கதாபாத்திரங்களின் பிரதிநிதிகளும் அதற்கு மறுமுனையில் வறுமை, சூழல் ஆகியவற்றால் சமூகம் ஒதுக்குகின்ற குற்றங்களில் ஈடுபடும் மனிதர்கள் என இருவேறு துருவத்திலே இயங்குகிறது. ஜெயகாந்தனின் மார்க்சியப்பார்வையால் கதைமாந்தர்களில் வெளிப்பட்ட...

சீனலட்சுமி சிறுகதைத் தொகுப்பு வாசிப்பனுபவம்

எழுத்தாளர் கனகலதாவின் சீனலட்சுமி கதைத் தொகுப்பை வாசித்தேன். சிங்கப்பூரைக் களமாகக் கொண்டு வெவ்வேறு பின்னணி கொண்ட பெண்களின் கதைகளை எழுதியிருக்கிறார். இந்த அத்தனை கதைகளிலும் உள்ள பொதுவான தன்மையாகக் கதையில் இருக்கும் ஆசிரியரின் கதைசொல்லலைக் காண முடிகிறது. இந்தக் கதைகளில் அனைத்திலும் பாத்திரங்களுக்கிடையிலான உரையாடல் என்பது மிகக் குறைவானதாகவே இருக்கின்றது. ஆசிரியரே கதை நிகழும் களம், நிகழ்ச்சிகளைச் சொல்லிச் செல்கின்றார். இவ்வகையான கதைகளை வாசிக்கின்ற போது, வாசகனுக்குக் கதையின் போக்கை அழுத்தமாக நிறுவ ஆசிரியர் நம்பகமான தகவல்களைச் சொல்ல வேண்டியதாக இருக்கின்றது. கதை தானே நிகழும் போது பாத்திரத்துடன் வாசகனுக்கு உருவாகும் அணுக்கத்தை, ஆசிரியரின் கதை சொல்லல் தன்மை எடுத்துக் கொள்கிறது. அந்த வகையில் கதை சொல்லலில் நம்பகமும் வாசகன் கதையை உள்வாங்கி கொள்ளும் வகையிலான சித்திரிப்பும் கூடிய கதைகளை எழுத்தாளர் லதா இந்தத் தொகுப்பில் நிகழ்த்தியிருக்கிறார் எனலாம். இந்தத் தொகுப்பின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்றாக நிர்வாணம் கதையைக் குறிப்பிடலாம். எப்பொழுதும் சிரிப்பும் கம்பீரமும் தோன்ற இருக்கும் அம்மாவுக்கு ஏற்படும் ...

குள்ளச்சித்தன் சரித்திரம்

11 ஜூன் 2022 அன்று வல்லினம் ஏற்பாட்டில் நிகழ்ந்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் படைப்புலக அரங்கில் குள்ளச்சித்தன் சரித்திரம் நாவலை ஒட்டி ஆற்றப்பட்ட உரை.   குள்ளச்சித்தன் சரித்திரம்-வாசிப்புப் பார்வை அறிமுகம் புதுமைப்பித்தனின் காஞ்சனை சிறுகதையில் எழுத்தாளர் ஒருவர் அன்றாட வாழ்வின் சலிப்புச் சுழலுக்குள்   வாழ்வார். எழுத்தின் வாயிலாக அவர் கற்பனையிலும் அறிதலிலும் சென்று தொடக் கூடிய தூரங்களுக்கு மாறாக நிகர் வாழ்க்கையில் அன்றாடத்தின், யதார்த்ததின் சலிப்புக்குள் சிக்கியிருப்பார். மனித வித்து அநாதி காலந்தொட்டு இன்று வரையில் நினைத்துநினைத்துத் தேய்ந்து தடமாகிவிட்டன்பாதையில்தான் இந்தக் கட்டை வண்டி செல்கிறது. அதிலும் மனசை, கயிற்றை முதுகில் போட்டுவிட்டுத் தானே போகும்படி விட்டுவிடுவது என்றால், இந்த விபத்துகளையெல்லாம் பொருட்படுத்தலாமா   நவீன வாழ்வின் சிக்கலும் கூட. அந்தச் சலிப்புச் சுழலிருந்து விடுபட புனைவுக்கும் வாழ்வுக்குமான கோட்டை அழித்துப் பார்க்கும் மாற்று அனுபவமே கதையாக அமைந்திருக்கும். அவருடைய வீட்டுக்குப் பிச்சைக்காரியாக வரும் பெண்ணை வீட்டு வேலைக்காரியாக மனைவி அமர்த்...

மஹாத்மன் சிறுகதைகள்

 மஹாத்மன் சிறுகதைகள் வாசிப்பனுபவம் தமிழ் விக்கி பக்கத்தில் மலேசிய எழுத்தாளர்கள் சிலரைக் குறித்த பதிவை உருவாக்கும் போது எழுத்தாளர் மஹாத்மனைக் குறித்துத் தரவுகளை இணையத்தில் தேடினேன். ஒரு நேர்காணல், சிறுகதைத் தொகுப்பு மீதான விமர்சனக் கட்டுரை என மிகச் சொற்பமானத் தகவல்களே இருந்தன. அவரின் ஒ லாவே கதை மட்டும்தான் கதையாக இருந்ததாக சிங்கப்பூர் எழுத்தாளர் இளங்கோ தன்னிடம் சொன்னதாக நேர்ப்பேச்சில் சிரித்துக் கொண்டே சொன்னது நினைவுக்கு வந்தது. அவரது சிறுகதைத் தொகுப்பை எடுத்து வாசித்தேன். அவர் வெளியீட்டிருக்கும் ஒரே நூலும் அதுதான் நினைக்கிறேன். தொகுப்பில் இருந்த 8 கதைகளையும் வாசித்த பின்னர், நேரடி வாழ்வில் பெற்ற அனுபவங்களும், சொல்ல கேட்ட கதைகளும் எப்பொழுது கதையாக உருமாறுகின்றன என்ற கேள்வியும் உடன் எழுந்தது. மஹாத்மன் எழுதிய கதைகள் யாவும் நேரடியான அனுபவப்பதிவிலிருந்தும் கண்டும் கேட்ட கதைகளிலிருந்தும் அமைந்தவை. இதைத் தன்னுடைய நேர்காணலிலும் குறிப்பிடுகிறார். அதைப் போல ஒவ்வொரு கதையும் நான் எனத் தன்னிலையில் தொடங்கி ஒற்றை மனிதனின் அகச் சிக்கல்களை ஒட்டியே அமைகிறது. மஹாத்மன் முன்வைக்கும் பாத்திரம் எல்லா க...

பனி உருகுவதில்லை வாசிப்பனுபவம்

எழுதத் தொடங்கும் எழுத்தாளர்கள் நன்கு பழகிய வாழ்வனுபவம், சந்தித்த மனிதர்கள், பழகிய சூழல் ஆகியவற்றையே தங்கள் எழுத்துக்கான மூலப்பொருளாக்குவார்கள். அவ்வாறான பதிவுகளில் நினைவேக்கம் என்பதும் தவிர்க்க முடியாததாக இருக்கும். தான் பெற்ற அறிவனுபவத்தைக் கொண்டு இன்னொரு காலத்தை எழுத்தில் கொண்டு வரும் போது அந்தக் காலக்கட்டத்தின் மீது மெல்லிய ரொமான்டிசிசைஸ் தன்மை எழுந்துவிடுகிறது. அவ்வாறாக இன்னொரு காலக்கட்டத்தின் மேம்பட்ட பக்கங்களைக் காட்ட வேண்டாமென்பதில்லை. ஆனால், அவை அனுபவச் சித்திரிப்பில் தன்னிகழ்வாக எழ வேண்டும். நீண்டகாலத்திற்குப் பின் எழுத்தாளர் அருண்மொழிநங்கை வலைப்பூவில் எழுதத்தொடங்கிய அனுபவப்பதிவுகளும் அவரின் பால்யக்காலம் தொட்டு அமைந்த நிகழ்வுகள், பழகிய மனிதர்களால் ஆனதாகவே இருந்தது. ஆனாலும், ஒவ்வொரு அனுபவப்பதிவும் துருதுருப்பான இளஞ்சிறுமி ஒருத்தியின் அகம் புறச்சூழலைப் பரவசத்துடன் எதிர்கொண்டு பரிணமிப்பதன் அனுபவத்தை அளித்தது. அவரின் விரிவான இலக்கிய வாசிப்பும் வாழ்க்கை அவதானிப்புமே இதைச் சாத்தியமாக்கியிருக்கிறது. அவ்வாறாக, வலைப்பதிவில் வெளிவந்த கட்டுரைகளில் அவரின் வாழ்வனுபவத்தையே முதன்ம...