முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கெல்லிஸ் ஸ்மித்தின் சுரங்கப்பாதை

  மலேசியா பிரிட்டன் காலனி நாடாக இருந்த சமயத்தில் உலகளவில் மிக முக்கியமான ஈயம், ரப்பர் உற்பத்தி நாடாக இருந்தது. மலேசியாவின் தொழிற்வளர்ச்சி மிகுந்த, ரயில் தடம் கொண்ட நகரங்கள் யாவும் ஈயம், ரப்பர் உற்பத்தி, ஏற்றுமதி தொழிலில் மிக முக்கியமான நகரங்களாக அமைந்தவையே. ரயில் தடத்தின் முக்கியமான நிலையங்களைக் கொண்டே அதைக் கவனிக்கலாம். அன்றைய காலனிய அதிகாரிகளும் தோட்ட முதலாளிகளும் தங்குவதற்காக அமைக்கப்பட்ட வீடுகள், விடுதிகள் இன்றைக்குப் பெரும்பாலும் சுற்றுலாதளங்களாகவும் சில கைவிடப்பட்டும் கிடக்கின்றன. உலகின் ஆழமான ஈயச்சுரங்கமான பகாங் மாநிலத்தில் அமைந்திருக்கும் சுங்கை லெம்பிங்கில் இருக்கும் சுரங்க நிர்வாகியின் இல்லம் அரும்பொருள்காட்சியகமாக மாற்றப்பட்டுப் பரமாரிக்கப்படுகின்றது. ஈயத்தொழிலில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், இயந்திரங்கள், வெள்ளையர்கள் பயன்படுத்திய தளவாடங்கள் ஆகியவைக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இல்லத்தின் முக்கிய ஈர்ப்பாக அமைவது அங்கு இன்னுமிருப்பதாகச் சொல்லப்படும் வெள்ளைக்காரர்களின் ஆவி நடமாட்டம். அங்கு வசிக்கும் மக்களும் சுற்றுலாப்பயணிகளும் கண்டதாகச் சொல்லப்படும் ஆவி நடமாட்டம் பலரை...

காதுகள் நாவல் வாசிப்பனுபவம்

  தனக்குத்தானே பேசிக்கொள்ளும் பழக்கம் இளவயதில் பள்ளி முடிந்து தனித்திருக்கும் மாலைப் பொழுதுகளில் உருவானது என எண்ணுகிறேன். காண்கின்ற படம், நாள்தோறும் வாசிக்கின்ற நாளிதழ் செய்திகள், பள்ளியில் நடந்த சம்பவங்கள் இப்படியாகப் பலராகவும் உருமாறிப் பேசி, வாதிட்டுக் கொள்வேன். இதைத் தவிர, எதைச் செய்தாலும் உள்ளிருந்து உற்றுநோக்கிக் குரல் எழுப்பும் உள்ளுணர்வின் குரலும் அங்கிருந்தே உருவானது. பொதுவாகவே, மற்றவர்களிடம் அதிகமும் பேசாத இயல்பினாலும் வெளியுலக வாசம் குறைவாக இருந்ததாலும் இவை உருவாகியிருந்தது. சமயங்களில் பேச வேண்டிய அல்லது எதிர்வினையாற்ற தவறுகின்ற பொழுதுகளில் நேரும் குற்றவுணர்ச்சியை நேர் செய்யும் தப்பித்தல் வழிமுறையாகவும் இதை உணர்ந்து குறுகிப் போயிருக்கிறேன். ஆனால், எதோ ஒரு பொழுதில் உள்ளிருந்து ஒலிக்கும் குரலை இயல்பானதாக அனுமதிக்கவே செய்திருக்கிறேன். காதுகள் நாவலின் மையப்பாத்திரமான மகாலிங்கத்தின் காதுகளில் ஒலிக்கும் அந்நியர்களின் குரல்களை என்னுடைய உள்ளுணர்வு குரலுடன் தான் தொடர்புறுத்தி வாசித்தேன். அந்த அனுபவத்தை வாசிக்கும் போதே உள்ளூர நடுக்கமெழுந்தது. வணிகக்குடும்பத்தில் பிறந்த மகாலிங்கம...

Better Call Saul தொடர்

 Better Call Saul தொடரைப் பார்த்து முடித்தேன். Breaking Bad தொடரின் prequel ஆன Better Call Saul இல் ஆறு பருவங்கள் அறுபத்து மூன்று எப்பிசோட்கள் கொண்ட நெடுந்தொடர்.  தான் வாதிடுகின்ற வாதிக்குச் சாதகமாக வழக்கை மாற்றியமைத்தும் ஆதாரங்களை மாற்றியமைத்தும் உடனடியாக வழக்கை நடத்தும் பெட்டிக்கடை வழக்கறிஞராகவே ஜேம்ஸ் மெக்கில் அறிமுகமாகிறான். அரிதாகவே மாற்றப்படும் நீதித்துறை விதிகளில்  தளர்வுகளை ஏற்படுத்திப் பேரம் பேசுகிறான்.  ஒருவகையில் அவனுடைய திறமையை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தாலே இதைச் செய்கிறான். தன் வழக்கறிஞர் சேவையைக் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்திக் கொள்வதன் மூலமாகச் சில்லறைக் குற்றங்களுக்கு வாதிடுகிறான். அவனுடைய முயற்சிகள் எதோ ஒருவகையில் மீள மீள தோல்வியுறுகின்றன.  முழுமையாக விரும்பவோ அல்லது வெறுத்து ஒதுக்கவும் முடியாத இருமைத்தன்மை கொண்டவனான ஜேம்ஸ் மெக்கில் பாத்திரத்தில் Bob Odenkirk மிகச்சிறப்பாக நடித்திருந்தார். எல்லாவற்றையும் உடனே செய்து முடித்து விடத்துடிக்கும் அவசரமும் குறுக்கு வழி தேடும் இயல்பும் ஜேம்ஸ் மெக்கில்லின் இளவயதிலே அமைந்துவிடுகிறது. வழக்கறிஞரானப் பின்ப...

சை.பீர் முகம்மதுவின் சிறுகதைகள் வாசிப்பனுபவம்

 சை.பீர் முகம்மதுவின் சிறுகதைகள் வாசிப்பனுபவம்   எழுத்தாளர் சை.பீர் முகம்மதுவின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். 2008 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டிருக்கும் இச்சிறுகதைத் தொகுதியில் மொத்தம் 20 சிறுகதைகள் அமைந்திருக்கின்றன. சை.பீர் முகம்மதுவின் கதைகளில் கதைசொல்லியின் குரல் உரத்து ஒலிக்கிறது. கதைக்குள் இந்த உரத்தக் குரல் சில இடங்களில் சமூகத்தின் பொது மனநிலையை விமர்சனம் செய்வதாகவும் அதையே நகல் செய்து இறுதியில் அதிலிருந்து நழுவி உணர்வெழுச்சித் தருணங்களைக் கண்டடைவதாகவும் அமைந்திருக்கிறது. சை.பீர்.முகம்மதுவின் கதைகளின் பொதுத்தன்மையாக கதையின் இறுதியில் நிகழ்ந்துவிடும் உணர்வெழுச்சித்தருணங்களையே குறிப்பிடலாம். தொகுப்பின் தலைப்புக்குரிய கதையான பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் கதையில் தமிழ்நாட்டிலிருந்து தோட்டங்கள்தோறும் மேடை நாடகம் அரங்கேற்ற மலேசியாவுக்கு வரும் குழுவிலிருக்கும் மாரி என்பவன் உள்ளூர் பெண்ணைக் காதலித்து மலேசியாவிலே நிரந்தரமாகத் தங்கிவிடுகிறான். தமிழ்நாட்டில் கற்றுக் கொண்ட பயாஸ்கோப் காட்டும் தொழிலைக் கொண்டு தோட்டங்கள்தோறும் திருவிழாக்களில் பயாஸ...
 மருத்துவர் சண்முகசிவாவின் எட்டுச் சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுதியை வாசித்தேன், 2018 ஆம் ஆண்டு வல்லினம் மற்றும் யாவரும் பதிப்பகமும் இணைந்து பதிப்பித்திருக்கும் இந்நூலில் முந்தையத் தொகுப்பிலிருந்து இரண்டு கதைகளும் புதிய கதைகளாக ஆறு கதைகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவர் சண்முகசிவா ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் நலமுடன் வாழ்வோமங்கத்தின் வாயிலாகத்தான் அறிவேன். அதன் பின்னர், மயில் மாத இதழில் ஒவ்வொரு மாதமும் விழி வாசல் வழியே என்ற தொடரில் கட்டுரைகள் எழுதி வந்ததை வாசித்திருக்கிறேன். பல கவிதை மேற்கோள்களும், புதிய திறப்புகளை அளிக்கும் கட்டுரைத்தொடருக்காகவே மயில் இதழை வாங்கி வாசித்திருக்கிறேன். அதன் பின்னால் மைஸ்கில் அறவாரியம் நடத்திய இதழிலும் அவரின் மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் என்கிற மருத்துவக் கேள்விப்பதில் நூலிலிருந்து சில கேள்விப்பதில்களை வாசித்திருக்கிறேன். அதிலும் பல நவீன கவிதை வரிகளை மேற்கோள்காட்டி பதில்களை எழுதியிருப்பார். எந்தக் கேள்விக்கும் இந்த நோய் என்றோ இதுதான் தீர்வு என்றோ நேரடியான பதில் அளிக்காமல் உளவியல், இலக்கியம், நகைச்சுவை எனத் தொட்டு விரியும் பதில்கள் வாசி...

எம்.ஏ.இளஞ்செல்வன் கதைகள்- வாசிப்பனுபவம்

  எழுத்தாளர் எம்.ஏ.இளஞ்செல்வன் முந்தைய தலைமுறை மலேசியப்படைப்பாளிகளில் நன்கு அறியப்பட்டவர். அவருடைய சிறுகதைகள் தொகுப்பை வாசித்தேன். அவர் எழுதிய அனைத்துச் சிறுகதைகளையும் உள்ளடக்கி 1999 ஆண்டு பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. சிறுகதைகள் அனைத்தும் காலவரிசைப்படி இல்லாது முன்பின்னாகவே அச்சிடப்பட்டிருக்கிறது. இளஞ்செல்வனின் தெருப்புழுதி எனும் கதை ஆசிரியர் பயிற்சிக்கழகத்தின் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்ததால் அதை வாசித்திருக்கிறேன். அந்தக் கதையில் கூட சீண்டல் தன்மைதான் பிரதானமான இருக்கும். ஒரு மோசமான சூழலைச் சித்திரித்து அதிலிருந்து மீண்டெழும் சீண்டல் வார்த்தைகள் இருக்கும். அதனால் சீண்டப்பட்டு மனம் மாறும் தருணமொன்றுதான் கதையின் மையமாக இருக்கும். அவரை மலேசிய ஜெயகாந்தன் என்றழைப்பதையும் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், அவருடைய கதைகள் ஒழுக்கவாத, முற்போக்கு கருத்துகள் கொண்ட கதாபாத்திரங்களின் பிரதிநிதிகளும் அதற்கு மறுமுனையில் வறுமை, சூழல் ஆகியவற்றால் சமூகம் ஒதுக்குகின்ற குற்றங்களில் ஈடுபடும் மனிதர்கள் என இருவேறு துருவத்திலே இயங்குகிறது. ஜெயகாந்தனின் மார்க்சியப்பார்வையால் கதைமாந்தர்களில் வெளிப்பட்ட...

சீனலட்சுமி சிறுகதைத் தொகுப்பு வாசிப்பனுபவம்

எழுத்தாளர் கனகலதாவின் சீனலட்சுமி கதைத் தொகுப்பை வாசித்தேன். சிங்கப்பூரைக் களமாகக் கொண்டு வெவ்வேறு பின்னணி கொண்ட பெண்களின் கதைகளை எழுதியிருக்கிறார். இந்த அத்தனை கதைகளிலும் உள்ள பொதுவான தன்மையாகக் கதையில் இருக்கும் ஆசிரியரின் கதைசொல்லலைக் காண முடிகிறது. இந்தக் கதைகளில் அனைத்திலும் பாத்திரங்களுக்கிடையிலான உரையாடல் என்பது மிகக் குறைவானதாகவே இருக்கின்றது. ஆசிரியரே கதை நிகழும் களம், நிகழ்ச்சிகளைச் சொல்லிச் செல்கின்றார். இவ்வகையான கதைகளை வாசிக்கின்ற போது, வாசகனுக்குக் கதையின் போக்கை அழுத்தமாக நிறுவ ஆசிரியர் நம்பகமான தகவல்களைச் சொல்ல வேண்டியதாக இருக்கின்றது. கதை தானே நிகழும் போது பாத்திரத்துடன் வாசகனுக்கு உருவாகும் அணுக்கத்தை, ஆசிரியரின் கதை சொல்லல் தன்மை எடுத்துக் கொள்கிறது. அந்த வகையில் கதை சொல்லலில் நம்பகமும் வாசகன் கதையை உள்வாங்கி கொள்ளும் வகையிலான சித்திரிப்பும் கூடிய கதைகளை எழுத்தாளர் லதா இந்தத் தொகுப்பில் நிகழ்த்தியிருக்கிறார் எனலாம். இந்தத் தொகுப்பின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்றாக நிர்வாணம் கதையைக் குறிப்பிடலாம். எப்பொழுதும் சிரிப்பும் கம்பீரமும் தோன்ற இருக்கும் அம்மாவுக்கு ஏற்படும் ...