முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மானசரோவர் நாவல் வாசிப்பனுபவம்

  அசோகமித்திரனின் மானசரோவர் நாவலை வாசித்தேன்.  மான்சரோவர் புண்ணியத் தலங்களில் ஒன்று என்பதை அறிந்திருக்கிறேன். பனிமலைச்சிகரத்திலிருக்கும் தலத்துக்குச் சென்று புனித நீரில் தீர்த்தமாடுவதன் மூலம் செய்த தீவினைகள் கழியுமென்பது நம்பிக்கை. இப்படியாக மனித மனம் கொள்கின்ற சஞ்சலங்களுக்கான தீர்வினைச் சமயங்கள் குறிப்பிடவே செய்கின்றன.  மானசரோவர் நாவலும் மனம் அடைகின்ற சஞ்சலங்களாலும் குற்றவுணர்வுகளாலும் ஏற்படுகிற சுமைக்கான கழுவாயைத் தேடியலையும் இருவேறு பாத்திரங்கள் மேற்கொள்ளும் அகப்பயணத்தையே பேசுகிறது.  நாவலின் மையப்பாத்திரமான கோபாலன் படத்தயாரிப்பு அரங்கத்தின் கதை இலாகாவில் பணியாற்றுகிறான். கலையிலக்கிய ஆர்வமிருந்தும் வாழ்க்கைத்தேவைக்காக இதழ்கள், படங்கள் என மாறி மாறி பணிபுரிகிறான். அந்தக் கலையிலக்கிய ஆர்வம் சினிமா என்னும் பெரும்புகழும் பணத்தையும் தரக்கூடிய ஊடகத்தில் சாத்தியமான வளர்ச்சியைப் பெறுவதற்கு மேற்கொள்ளக்கூடிய போலி முயற்சிகளை நிராகரிக்கச் செய்கிறது. அதன் விளைவாகக் குடும்பம் வறுமையில் தள்ளாடுகிறது. இந்த ஊசலாட்டத்தில் மனைவி ஜம்பகத்துக்கு ஏற்படும் மனப்பிறழ்வு, மகனின் இறப்பு என ம...

மலேசிய இந்தியர்களின் அரசியல் வரைபடம்

  எனக்கு ஒன்பது வயதிருக்கும் போதே நாளிதழ் செய்திகளை நாள் தவறாமல் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். நாளிதழ் வாசிக்காமல் ஒரு நாளைக் கடக்க முடியாத அளவு நாளிதழ் வாசிப்பு பித்து பதினேழு வயது வரை தொடர்ந்தது. நாளிதழில் வரும் அரசியல் செய்திகள், பிரமுகர்களின் பெயர்கள், நிகழ்வுகள் அத்தனையும் மனப்பாடமாகத் தெரியும். வீட்டுக்கு வரும் உறவினர்கள், நண்பர்களிடம் என் அரசியல் அறிவை ஒப்பிப்பதை ஒரு கடமையாகவே செய்து வந்தேன். அந்தப் பெயர்களையும் நிகழ்வுகளையும் விளையாட்டைப் போல சொல்லிக் காட்டுவேன்.  அரசியல் செய்திகளைப் பேசுவதென்பது அரட்டையாடலாக மாறி உரையாடலைக் கெடுப்பதாகவும் சலிப்பூட்டுவதாகவும் அமைவதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். சலிப்பையும் வெறுப்பையும் விதைக்கும் செய்திகளே பரபரப்பு கருதி நாளிதழ்களில் கவனம் பெறுகின்றன. இன்றைக்கும்  ஊடகங்களில் அவைப் பரவலாகப் பகிரப்பட்டு உடனடி எதிர்வினைகள் பெற்று அடுத்தடுத்து வரும் செய்திகளால் விரைவில் மறைகின்றன. ஆனால், அவை உருவாக்கும் சலிப்பு, அச்சம் எப்பொழுதும் இங்கு இருக்கிறது. ஆனால், ஒரு காலக்கட்டத்தில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளையும் செய்திகளையும் பெரும் வ...

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே...
விஷ்ணுபுரம் விருதுவிழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகப் பங்கேற்றுப் பேச முடியுமா என எழுத்தாளர் ஜெயமோகனிடமிருந்து செய்தி வந்த நாளிலிருந்து அதைப்பற்றியே எண்ணிக் கொண்டிருந்தேன். டிசம்பர் 15 இரவு சென்னையில் தரையிறங்கி கோவைக்கு 12 மணி நேரம் கார்பயணத்திலே விழாவுக்கான முன்னோட்டம் தொடங்கியிருந்தது. எழுத்தாளர் பிரவின் குமார் (பி.கு) எழுத்தாளர் இளம்பரிதி (வழி இணைய இதழின் ஆசிரியர்) என்னையும் எழுத்தாளர் நவீனையும் அழைத்துக் கொண்டு சென்றார்கள். வழிநெடுக இலக்கிய அரட்டையாடல் உறக்கம், விழிப்பு எனத் தொடர்ந்து கொண்டே சென்றது. எதிலும் பங்குபெறாமல் விஷ்ணுபுரம் அமர்வைப் பற்றியே எண்ணம் சுற்றிக் கொண்டிருந்தது. எனக்கு கிடைத்த அமர்வு எல்லா வகையிலும் சமகால மலேசிய தமிழ் இலக்கியத்துக்கும் மற்ற மலேசிய படைப்பாளிகளுக்கும் சேர்த்துக் கிடைத்த அமர்வென்ற எண்ணம் தொடக்கம் முதலே இருந்தது. விஷ்ணுபுரம் விருது விழா    பத்தாண்டுகளுக்கு முன்னர் ஜெயமோகனின் இணையத்தளத்தை வாசிக்கத் தொடங்கியப்போது, விஷ்ணுபுரம் விருதுவிழாவில் பங்கேற்றவர்களின் கடிதங்களை வாசித்து என்றாவது ஒருநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராகக் கலந்து ...

கடலுக்கு அப்பால்; வாழ்வென்னும் சோர்வுக்கு அப்பால்

  ப.சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் நாவலை வாசித்தேன். மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளில் ஜப்பானியாராட்சிக் காலக்கட்டத்தில் எழுந்த சுபாஸ் சந்திரபோஸ் தோற்றுவித்த ஐ.என்.ஏ எனப்படும் இந்திய தேசிய ராணுவம் உண்டாக்கிய எழுச்சி குறிப்பிடத்தக்கது. அதனை மையப்படுத்தித் தமிழில் வெளிவந்திருக்கும் முக்கியமான நாவல்களாக இமயத்தியாகம், கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி ஆகிய நாவல்களைக் குறிப்பிட முடியும். கடலுக்கு அப்பால் நாவல் ஜப்பானியராட்சியின் வீழ்ச்சியிலிருந்தே தொடங்குகிறது. ஜப்பானியருடன் நல்லுறவைப் பேணிய இந்தியத் தேசிய ராணுவத்தினர் பர்மா எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் சென்று இந்திய விடுதலையைப்   பெற்றுத் தந்துவிட வேண்டுமென முனைந்தனர். அந்தப் பயணத்தையும் அம்முயற்சியின் வீழ்ச்சியையும் இமயத்தியாகம் நாவல் பேசியது. அந்த முயற்சி தோல்வி கண்டதற்கு ஒருவகையில் ஜப்பானிய ராணுவத்தினரின் ஆதரவின்மையும் காரணமாக இருந்தது. கடலுக்கு அப்பால் நாவல், இரண்டாம் உலகப்போர் முடியும் தருவாயில் தொடங்குகிறது. அச்சமயத்தில் மலாயாவில் ஜப்பானியர்கள் சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றனர்...
 நேபாளப்பயணம் 15 இணைய வசதி இல்லாமல் தெரியாத இடத்தில் சென்று வர தனித்துணிச்சல் வேண்டும். எப்படி யோசித்தாலும் விடுதியின் பெயரைக் கொண்டு திரும்பி வந்துவிடுவார்களென நினைத்துக் கொண்டேன். எங்களின் விமானம் இரவு மணி 8.40 என்பதால் 4.30 க்கெல்லாம் விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. கணேஷ் அவர்களைக் கொண்டு வரும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் எல்லாம் முதலில் தங்கும் விடுதிக்குச் செல்லுங்கள். நான் ஆனந்தியுடன் அவர்கள் மூவரையும் அழைத்து வருகிறேன் என்றார் என மிக நிதானமாகச் சொன்னார். அவருடன் கந்தா எனப்படும் கந்தசாமியும் களத்தில் இறங்கி தேடத்தொடங்கினார். நாங்கள் பேருந்திலேறி உட்கார்ந்து சில நிமிடங்களிலே கந்தசாமி மூவரையும் பேருந்துக்கு அழைத்து வந்தார். அந்தப் பதற்றமான சூழலில் மிக வேடிக்கையாகப் பேசி கொஞ்ச நேரத்தில் சூழலை இலகுவாக்கிவிட்டார். அங்கிருந்து செல்வதற்கு முன்னர் விடுதிக்குச் சென்று சாப்பிடவேண்டிய மதிய உணவுக்கான ஆர்டரைக் கொடுத்தோம். மறுநாள் வேலைக்குச் சென்றுவிட வேண்டுமென நினைத்திருந்ததால் பயன நேரம், தயார் செய்யும் நேரம் என என நேரக்கணக்கில் மூழ்கியிருந்தேன். பட்டென்று மயூரி...
 நேபாளப்பயணம் 14 குமாரி கோவிலில் இருந்து வெளியேறி நடந்து செல்லும் போதே அடுத்தப் பயணத்திட்டத்துக்குத் தயாரானோம். குமாரியாக இருப்பவர்கள் பூப்பெய்தியவுடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடுகின்றனர். தலேஜு தேவி, அவர்களிலே தன்னை வெளிப்படுத்திக் கொள்ள நினைக்கிறாள். அவ்வாறு, குமாரியாக இருந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய சனிரா பஜராச்சாரியாவைச் சந்திக்கும் வாய்ப்பையும் கோகிலாத்தான் சாத்தியப்படுத்தியிருந்தார். சனிராவைப் பார்க்கும் திட்டத்தை நவீன் குறிப்பிட்டதும் உடனே மலையேற்றத்துடன் முடியவிருந்த பயணத்தை உடனே மூன்று நாட்கள் நீடிக்க சம்மதம் தெரிவித்தேன். அதன் பிறகு, கோகிலா சனிராவை பி.பி.சி வானொலிக்காகக் கண்டிருந்த நேர்காணல், அவரைப் பற்றிய கட்டுரைகளையும் புலனக்குழுவில் பகிர்ந்திருந்தார். பொதுவாக, குமாரி பண்பாட்டைப் பற்றி சொல்லப்படும் கடுமையான சோதனைகள், கட்டுப்பாடு மிகுந்த வாழ்க்கை ஆகியவற்றில் உண்மையில்லை என நேர்காணல்களில் சனிரா தெரிவித்தார். அத்துடன் தொலைகாட்சி பார்ப்பதற்கும் நண்பர்களுடன் இருப்பதற்குமான வாய்ப்பும் தனக்கிருந்ததாகத் தெரிவித்தார். குமாரி பண்பாட்டின் இறுக்கமான வாழ்க்கைமுறை ப...