முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிரிவு நிரந்தரமல்ல நாவல் வாசிப்பனுபவம்

  பிரிவு நிரந்தரமல்ல நாவல் நாவலில் சொல்லப்படும் உணர்ச்சிகள், கதைகள் எல்லாமே வாசக அனுபவமாக ஆவதில்தான் அதன் ஏற்பு அமைந்திருக்கிறது. வாசகனுபவமாக ஆகாதவை நுண்மையான கதைச்சட்டகத்தைக் கொண்டிருந்தாலும் தேர்ந்த இலக்கியப்படைப்பாக மாறுவதில்லை. பிரிவு நிரந்தரமல்ல நாவல் வாசகனுபவமாக புனைவை மாற்றாமல் எல்லாவற்றையும் தொட்டுச் செல்லும் நாவலாகவே பார்க்க முடிகிறது. 2008 ஆம் ஆண்டு மலேசிய எழுத்தாளர் சங்கம் நடத்தில் நாவல் போட்டியில் இரண்டாம் பரிசினைப் பெற்ற நாவல் கி.சுப்ரமணியம் எழுதிய பிரிவு நிரந்தரமல்ல என்னும் நாவல். 1940களின் பிற்பகுதி தொடங்கி 1960கள் வரையில் மலேசியாவில் தலைமறைவு இயக்கமாய்ச் செயற்பட்டுவந்த கம்யுனிஸ்டு இயக்கத்தில் தீவிரமாய்ப் பங்கேற்கின்ற இளைஞனொருவனின் அனுபவங்களையே மையமிட்டே நாவல் அமைக்கப்படுகிறது. 1940 களின் இறுதியில் பகாவ் பகுதியில் இருக்கும் தோட்டமொன்றில் பணியாற்றும் பெருமாள் என்னும் இளைஞன் தோட்டத்தில் ஒடுக்குமுறை நிலவும் பணிச்சூழல், குறைந்த சம்பளம், அடக்குமுறைகள் காரணமாய்க் கம்யுனிஸ்டு இயக்கத்தால் ஈர்க்கப்படுகிறான். தன்னுடன் பிறந்த எழுவரில் மூத்தவளுக்குத் திருமணம் செய்விக்கின்ற வ...

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை   பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான   ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...

பலவீனமான லட்சிய உருவகம்

எழுத்தாளர் கோ.முனியாண்டியின் ராமனின் நிறங்கள் (2010) நாவலை வாசித்தேன். எழுத்தாளர் கோ.முனியாண்டி மலேசியாவில் புதுக்கவிதை வளர்ச்சிக்கு வித்திடுகின்ற வகையில் புதுக்கவிதை மாநாடுகள் நடத்திய முன்னோடிகளில் ஒருவர். மேலும் செய்தியாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.  மலேசியாவில் 1950களிலே ரப்பருக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட செம்பனைப்பயிர் 1980களில் தான் ரப்பருக்கு மாற்றாக அதிகளவில் பயிர் செய்யப்பட்டது. இதற்கிடையிலான காலக்கட்டத்தில், செம்பனைப்பயிர்கள் நல்ல விளைச்சலைத் தராததால் தோட்ட முதலாளிகள் செம்பனைப்பயிரை நடுவதில் தயக்கம் காட்டினர். இந்தக் காலக்கட்டத்தில், மலேசியாவில் தோட்ட நிர்வாகியாகப் பணியாற்றிய ஸ்காட்லாந்தைச் சேர்ந்த Leslie Davidson என்பவர், மலேசியாவை ஒத்த தட்பவெப்ப நிலை கொண்ட கெமரூன் நாட்டில் செம்பனைப்பயிர் ஊட்டத்துடன் வளர்வதற்கான காரணத்தைக் கண்டறிய அந்நாட்டுக்குப் பயணப்பட்டு ஆய்வுகளை மேற்கொள்கிறார். இறுதியில், செம்பனைப்பயிரின் பூக்களில் கேமரூண் வீவல்ஸ் ( Elaeidobius kamerunicus weevils ) எனும் பூச்சியினம் நடத்தும் மகரந்தச்சேர்கையினாலே அதிக மகசூல் சாத்தியமாகிறதென்பதை அறிந்து அதனை மலேச...

அந்தரங்கப்பாவனைகளின் அவிழ்ப்பு- சம்ஸ்காரா நாவல்

  யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய கன்னட நாவலான சம்ஸ்காரா நாவலை வாசித்தேன். தமிழ்நாட்டுக்குப் பயணம் சென்றிருந்தப்போது தஞ்சையில் துருவம் இலக்கிய அமைப்பினர் நினைவுப்பரிசாக இந்நாவலைத் தந்திருந்தனர். நவீனத்துவக் காலக்கட்ட நாவல்களுக்கே உரிய மனித மனத்தை ஊடுருவிப் பார்க்கும் விமர்சனப்பார்வையைத்தான் இந்நாவல் கொண்டிருந்தது. சமூக, சமய ஆச்சாரங்களையும் தவத்தைப் போலவே கடைப்பிடிக்கும் பிராணேஸாச்சாரியாருக்கும் அவற்றை மீறி இன்ப நுகர்வே ஆன வாழ்வில் திளைக்கும் நாரணப்பனுக்குமான முரணை முன்வைத்தே நாவல் மனித இயல்பை விசாரம் செய்கிறது. மாத்வ பிராமணர்கள் செறிந்து வாழும் துர்வாசப்புரம் அக்கிரக்காரப் பகுதியில் பெரும் வேதவிற்பன்னராக பிராணேஸாச்சாரியார் இருக்கிறார். அந்தச் சமூகத்தின் அன்றாடத்தில் ஆழ வேரூன்றியிருக்கும் ஆச்சாரவாதக் கேள்விகளுக்கு வேதங்களிலிருந்தும் மனு தருமத்திலிருந்தும் விடைகளைக் கண்டு தருவதில் பெரும்புகழ் பெற்றவராகத் திகழ்கிறார். வேதங்களை முழுமையாகக் கற்று தேர்ந்து அதனைக் கொண்டு வாதம் புரிவதிலும் அவரிடமிருக்கும் திறன் அக்கிரக்காரத்தில் உள்ளவர்களால் மெச்சப்படுகிறது. உலக இன்பங்களில் கவனம் செல்லாமல...

இளந்தமிழன் சிறுகதைகள்- கற்பிதங்களின் பிரதிபலிப்பு

  எழுத்தாளர் இளந்தமிழனின் 45 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை வாசித்தேன். 1978 முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் எழுதப்பட்ட 45 கதைகள் கொண்ட தொகுப்பு முஸ்தபா அறக்கட்டளையின் கரிகாற்சோழன் விருதைப் பெற்றிருக்கிறது. சிறுகதைகளின் பின்னணி இளந்தமிழனின் முதல் சிறுகதை 1978 ஆம் ஆண்டு வானம்பாடி இதழில் வெளிவந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து 1980 களின் இறுதி வரையிலும் தொடர்ந்தாற்போல வானம்பாடி, மலேசிய நண்பன், தமிழ் ஓசை என மலேசியாவின் முன்னணி வார,மாத இதழ்களில் இளந்தமிழனின் கதைகள் வெளிவந்திருக்கின்றன. அவர் எழுதிய கதைகளுக்கான உடனடி எதிர்வினைகள் கதைகளில் வெளிப்பட்டிருக்கின்றன என்பதை கதைகளின் தொடக்கத்தில் அளிக்கும் குறிப்புகளின் வாயிலாக அறிய முடிகிறது. தொடக்கக்காலச் சிறுகதைகளில் கலகக்கார எழுத்தாளராகச் சமூக விமர்சனத்தை முன்வைக்கும் கதைகளை எழுதியிருக்கிறார். அந்தக் கதைகளை வாசித்து வாசகர்கள் காதல் கதைகளை எழுதத்தெரியாதா எனக் கேட்க அதனையும் எழுதுகிறார். வானம்பாடி இதழில் சாதியின் கார்ணமாய்த் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சமூகச்சூழலை நேரடியாகக் கண்டிக்கும் தொனியில் எழுதப்பட்ட புனிதங்கள் புரையோடுவதில்லை என்ற கதை  50...

மானசரோவர் நாவல் வாசிப்பனுபவம்

  அசோகமித்திரனின் மானசரோவர் நாவலை வாசித்தேன்.  மான்சரோவர் புண்ணியத் தலங்களில் ஒன்று என்பதை அறிந்திருக்கிறேன். பனிமலைச்சிகரத்திலிருக்கும் தலத்துக்குச் சென்று புனித நீரில் தீர்த்தமாடுவதன் மூலம் செய்த தீவினைகள் கழியுமென்பது நம்பிக்கை. இப்படியாக மனித மனம் கொள்கின்ற சஞ்சலங்களுக்கான தீர்வினைச் சமயங்கள் குறிப்பிடவே செய்கின்றன.  மானசரோவர் நாவலும் மனம் அடைகின்ற சஞ்சலங்களாலும் குற்றவுணர்வுகளாலும் ஏற்படுகிற சுமைக்கான கழுவாயைத் தேடியலையும் இருவேறு பாத்திரங்கள் மேற்கொள்ளும் அகப்பயணத்தையே பேசுகிறது.  நாவலின் மையப்பாத்திரமான கோபாலன் படத்தயாரிப்பு அரங்கத்தின் கதை இலாகாவில் பணியாற்றுகிறான். கலையிலக்கிய ஆர்வமிருந்தும் வாழ்க்கைத்தேவைக்காக இதழ்கள், படங்கள் என மாறி மாறி பணிபுரிகிறான். அந்தக் கலையிலக்கிய ஆர்வம் சினிமா என்னும் பெரும்புகழும் பணத்தையும் தரக்கூடிய ஊடகத்தில் சாத்தியமான வளர்ச்சியைப் பெறுவதற்கு மேற்கொள்ளக்கூடிய போலி முயற்சிகளை நிராகரிக்கச் செய்கிறது. அதன் விளைவாகக் குடும்பம் வறுமையில் தள்ளாடுகிறது. இந்த ஊசலாட்டத்தில் மனைவி ஜம்பகத்துக்கு ஏற்படும் மனப்பிறழ்வு, மகனின் இறப்பு என ம...

மலேசிய இந்தியர்களின் அரசியல் வரைபடம்

  எனக்கு ஒன்பது வயதிருக்கும் போதே நாளிதழ் செய்திகளை நாள் தவறாமல் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். நாளிதழ் வாசிக்காமல் ஒரு நாளைக் கடக்க முடியாத அளவு நாளிதழ் வாசிப்பு பித்து பதினேழு வயது வரை தொடர்ந்தது. நாளிதழில் வரும் அரசியல் செய்திகள், பிரமுகர்களின் பெயர்கள், நிகழ்வுகள் அத்தனையும் மனப்பாடமாகத் தெரியும். வீட்டுக்கு வரும் உறவினர்கள், நண்பர்களிடம் என் அரசியல் அறிவை ஒப்பிப்பதை ஒரு கடமையாகவே செய்து வந்தேன். அந்தப் பெயர்களையும் நிகழ்வுகளையும் விளையாட்டைப் போல சொல்லிக் காட்டுவேன்.  அரசியல் செய்திகளைப் பேசுவதென்பது அரட்டையாடலாக மாறி உரையாடலைக் கெடுப்பதாகவும் சலிப்பூட்டுவதாகவும் அமைவதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். சலிப்பையும் வெறுப்பையும் விதைக்கும் செய்திகளே பரபரப்பு கருதி நாளிதழ்களில் கவனம் பெறுகின்றன. இன்றைக்கும்  ஊடகங்களில் அவைப் பரவலாகப் பகிரப்பட்டு உடனடி எதிர்வினைகள் பெற்று அடுத்தடுத்து வரும் செய்திகளால் விரைவில் மறைகின்றன. ஆனால், அவை உருவாக்கும் சலிப்பு, அச்சம் எப்பொழுதும் இங்கு இருக்கிறது. ஆனால், ஒரு காலக்கட்டத்தில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளையும் செய்திகளையும் பெரும் வ...