முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பாய்மரக்கப்பல் நாவல் வாசிப்பனுபவம்

  எழுத்தாளர் பாவண்ணனின் பாய்மரக்கப்பல் நாவலை வாசித்தேன். பிரெஞ்சு புதுவை, கடலூர் பகுதியில் 1920கள் தொடங்கி 1980 களின் பிற்பகுதி வரையில் நடக்கும் காலமாற்றத்தைத்தான் நாவல் களமாகக் கொண்டிருக்கிறது. நிலவுடைமைச் சாதியைச் சேர்ந்த முத்துசாமி எனும் சம்சாரியின் வாழ்வையே நாவல் பிரதானமாகப் பேசுகிறது. பங்காளிச் சண்டைகள், கடன் தொல்லை, பயிர்ச்சேத நட்டம் ஆகிய அழுத்தங்களால் பரம்பரை நிலத்தை அதிகாரச் சாதியைச் சேர்ந்த ரெட்டிக்கு அடிமாட்டு விலைக்கு விற்று வேற்று ஊரில் குடியேறி நிலத்தைக் குத்தகைக்கு   எடுத்துப் பயிர் செய்யத் தொடங்குகிறார். உழைப்பால் நிலம் பெருக்கி நிலை உயர்ந்து வருபவரின் தலைமுறையினர் மெல்ல விவசாயத்திலிருந்து அந்நியப்பட்டு வீழ்ச்சியடையத் தொடங்கும் சித்திரத்தையே பாய்மரக்கப்பல் நாவல் காட்டுகிறது. ஒரு காலக்கட்டத்தில் நிகழும் சமூக அரசியல் பொருளியல் மாற்றங்கள் மரபாக இருந்து வருகின்ற அமைப்புகளுக்குள் கொண்டு வருகின்ற வீழ்ச்சியின் சித்திரத்தை முன்வைத்து நிறைய புனைவுகள் தமிழில் முன்னரே எழுதப்பட்டிருக்கின்றன. காலனியாதிக்கத்தால் அறிமுகமாகும் ஹோமியோபதி மருத்துவத்தை மரபார்ந்த ஆயுர்வேத மருத்...

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

கோசலை நாவல்

  தமிழ்ப்பிரபாவின் இரண்டாவது நாவலான கோசலையை வாசித்தேன். 80,90 களில் வெளிவந்த நூல்களின் காகித அட்டைப்படத்தைப் போலவே எழுத்துருவும் வடிவமைப்பையும் கொண்டு கோசலையின் அட்டைப்படம் தயாராகியிருக்கிறது. தமிழ்ப்பிரபாவின் முந்தைய நாவலான பேட்டையைப் போலவே நடையிலிருக்கும் சரளமும் எளிமையும் வாசிப்பில் ஈர்ப்பை உருவாக்குகிறது. சென்னையில் சிந்தாதிரிப் பேட்டையில் வாழும் குள்ளமான உருவமும் கூன் விழுந்த உடல் அமைப்பும் கொண்ட கோசலை எனும் பாத்திரத்தைச் சுற்றியே நாவல் நகர்கிறது. உடற்குறை, அவமதிப்பு, இழப்புகள் எனத் தான் எதிர்கொள்ளும் எல்லா சிக்கலையும் செயலூக்கத்துக்கான உந்துவிசையாக கோசலையால் மாற்றிக்கொள்ள முடிகிறது. தோற்றம் தரும் தாழ்வுணர்வால் குடும்பத்துக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டு மூடுண்ட வாழ்க்கையைத் தெரிவு செய்கின்ற கோசலை, அதிலிருந்து வெளிப்பட்டு மெல்ல சமூகத்தை நோக்கியப் பயணத்துக்குத் தயாராகுவதையே கோசலையின் கதையோட்டம். காட்சியாகும் உணர்வுகள் கோசலை நாவலின் முதன்மை பலமே துண்டுத் துண்டான காட்சிகளில் பாத்திரங்களின் மனவுணர்வுகளைக் கடத்துவதையும் பாத்திர வார்ப்பில் வெளிப்படும் முரணையும் சொல்லலாம். வேலை ம...

சிறைபட்ட கலை

  விஷ்ணுபுரம் விருது விழாவில் பேராசிரியர் மு.இளங்கோவனைச் சந்தித்தோம். விஷ்ணுபுரம் அமைப்பினர் வழங்கும் அறிவுசார் பங்களிப்பாற்றிய ஆய்வாளர்களுக்கான தூரன் விருதை 2023 ஆம் ஆண்டு பெற்றிருந்தார். தமிழறிஞர்கள் பலரையும் நேரில் சந்தித்தும் அவர்களின் குடும்பத்தினர், ஊரார், நண்பர்கள் எனப் பலரைச் சந்தித்தும் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்த அரிய பணியை அவர் செய்திருக்கிறார். மலேசியாவுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டு இங்குள்ள தமிழறிஞர்களின் வாழ்வையும் தொகுத்திருக்கிறார்.  https://muelangovan.blogspot.com/ பேராசிரியர் இளங்கோவனின் வலைப்பக்கம் நானும் நவீனும் செல்ல விரும்பிய தஞ்சைப் பயணத்துக்குச் சில உதவிகளைச் செய்தார். அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலைக் காண எங்களை அழைத்துச் சென்றார். சிறுவயதில் அவர் பார்த்த கங்கை கொண்ட சோழபுரக் கோவிலுக்கருகில் இருந்த புதர்காடுகள் பின்னர் சீரமைக்கப்பட்டதாகச் சொன்னார்.   அந்தி சாயும் நேரத்தில் சென்றிருந்ததால், இருள் கவிவதற்குள் மொத்த கோவிலையும் விரைவாகப் பார்த்துவிடவேண்டுமென விரைவாகவே சுற்றிவந்தோம். கோவிலுக்கு வெளியே இடப்புறத்தில் இருந்...

எழுத்தாளர் பெருந்தேவியுடனான சந்திப்பு

  காலையில், எழுத்தாளர் பெருந்தேவியைச் சந்திக்கும் திட்டத்தை லதா சொன்னார். பெருந்தேவி முகநூலில் இருந்த சமயத்தில் அவருடைய கவிதைகளையும் உடல் அரசியல் பால் தொடரின் சில பகுதிகளையும் வாசித்திருக்கிறேன். ஒரு சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல் மாடியின் கடைசி வீட்டுக்குள் எங்களைப் பெருந்தேவி அழைத்துச் சென்றார். வீட்டுக்குள் நுழைந்ததும், கணநேரம் எதாவது பேசிக்கொள்ளாமல் எங்களையே வெறித்துப் பார்த்தார் பெருந்தேவி. பேச்சிலும் பார்வையிலும் கனிவுடன் ஒவ்வொன்றாக விசாரித்துக் கொண்டிருந்தார். மதிய உணவு சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டுமெனச் சொல்லியிருந்தார். அவருடைய வீட்டைப் பார்த்த மாதிரியாக சக்கரை அம்மா எனும் 19 ஆம் நூற்றாண்டு சித்தர் கோவில் இருப்பதையும் சொன்னார். திரு.வி.க போன்றவர்கள் கூட சக்கரை அம்மாவின் ஆற்றலைக் கண்டு பேசியிருக்கிறார்கள் எனச் சொன்னார். மிளகு ரசம், பருப்புத் துவையலுடன் நெய்யும் அப்பளமுமாய் தமிழ்நாட்டிலருந்த நாட்களில் மிக அருமையான உணவுகளில் ஒன்றைத் தந்தார். உணவு முடித்தப் பின், மாமல்லப்புரம் செல்லும் திட்டத்தைச் சொன்னார்.  சென்னைக்கு வந்தால் மாமல்லப்புரம் சென்று பார்த்து...

ஏசுவின் பிறப்பு

  பயண நினைவுகளில் சில தருணங்கள் நேரில் உணர்ந்ததைக் காட்டிலும் பின்னர் எண்ணிப்பார்க்கும் போது இன்னுமே விரிவானதாகத் தெரிகிறது. 2023 டிசம்பரில் நிகழ்ந்த முதல் இந்தியப்பயணம் பற்றி எழுத வேண்டுமெனப் பலநாட்களாக எண்ணம் இருந்தது. அதில் சில தருணங்களைப் பற்றி மட்டும் எழுதிப் பார்க்கிறேன்.   மலேசியாவுக்குத் திரும்புவதற்கு இரு நாட்களுக்கு முன் தான் தஞ்சையிலிருந்து ரயிலிலே சென்னையை வந்தோம். சென்னையில் முதல் நாள், எழுத்தாளர் ம.நவீனின் தாரா நாவல் அறிமுகக்கூட்டம் நிகழ்ந்தது. அந்த நாவலை ம.நவீன் எழுதத் தொடங்கி பெயரிடுவதற்கான குறியை நேபாளத்தில் பெற்றது தொடங்கி முதல் பிரதியை வாசித்தது முதலாக உடனிருந்திருக்கிறேன். நிகழ்ச்சியில் பேசுவதற்கான குறிப்புகளை எழுத்தாளர் சு.வேணுகோபால் , நானும் நவீனும் தங்கியிருந்த விடுதி அறையில்தான் தயார் செய்தார். அறையை விட்டு எங்குமே அகலாமல் கையிலிருக்கும் புத்தகத்தை மல்லாந்தும் உட்கார்ந்தும் என மாறி மாறி வாசித்துக் கொண்டிருந்தார்.   கோவையில் விஷ்ணுபுரம் விருது விழாவில் அவரைச் சந்தித்திருந்தேன். என் பெயரை அரவிந்து…அரவிந்து எனச் சொல்லி அழைத்துப் பேசினார். விழாவின் இ...

பிரிவு நிரந்தரமல்ல நாவல் வாசிப்பனுபவம்

  பிரிவு நிரந்தரமல்ல நாவல் நாவலில் சொல்லப்படும் உணர்ச்சிகள், கதைகள் எல்லாமே வாசக அனுபவமாக ஆவதில்தான் அதன் ஏற்பு அமைந்திருக்கிறது. வாசகனுபவமாக ஆகாதவை நுண்மையான கதைச்சட்டகத்தைக் கொண்டிருந்தாலும் தேர்ந்த இலக்கியப்படைப்பாக மாறுவதில்லை. பிரிவு நிரந்தரமல்ல நாவல் வாசகனுபவமாக புனைவை மாற்றாமல் எல்லாவற்றையும் தொட்டுச் செல்லும் நாவலாகவே பார்க்க முடிகிறது. 2008 ஆம் ஆண்டு மலேசிய எழுத்தாளர் சங்கம் நடத்தில் நாவல் போட்டியில் இரண்டாம் பரிசினைப் பெற்ற நாவல் கி.சுப்ரமணியம் எழுதிய பிரிவு நிரந்தரமல்ல என்னும் நாவல். 1940களின் பிற்பகுதி தொடங்கி 1960கள் வரையில் மலேசியாவில் தலைமறைவு இயக்கமாய்ச் செயற்பட்டுவந்த கம்யுனிஸ்டு இயக்கத்தில் தீவிரமாய்ப் பங்கேற்கின்ற இளைஞனொருவனின் அனுபவங்களையே மையமிட்டே நாவல் அமைக்கப்படுகிறது. 1940 களின் இறுதியில் பகாவ் பகுதியில் இருக்கும் தோட்டமொன்றில் பணியாற்றும் பெருமாள் என்னும் இளைஞன் தோட்டத்தில் ஒடுக்குமுறை நிலவும் பணிச்சூழல், குறைந்த சம்பளம், அடக்குமுறைகள் காரணமாய்க் கம்யுனிஸ்டு இயக்கத்தால் ஈர்க்கப்படுகிறான். தன்னுடன் பிறந்த எழுவரில் மூத்தவளுக்குத் திருமணம் செய்விக்கின்ற வ...